ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2024

ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள்

ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள்


காட்சி:- மீனவன் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போலவும் ஒவ்வொரு மீனாகத் தூண்டிலில் பிடித்துப் பையில் எடுத்துச் செல்வதைப் போலவும் தெரிகின்றது.
 
விளக்கம்:- மீனவனுக்கு வேண்டியது மீன் தான். அவன் தூண்டிலில் போட்டுத் தரும் ஆகாரத்தை எந்த மீன் எடுக்கின்றதோ அதைத்தான் அவன் எடுத்துச் செல்கின்றான்.
 
அதைப் போல இவ்வுலக ஞானம் பெற தன் ஒளியை இவ்வுலகத்தில் உள்ள ஆத்மாக்களிடம் செலுத்தி அவ்வொளியை எவ்ஆத்மா ஈர்க்கின்றதோ அவ்ஆத்மாக்களைத் தன் ஞானத்துடன் எடுக்கின்றனர் ஒளியின் பால் உள்ள சப்தரிஷிகள்.
 
1.குறிப்பிட்ட ஆன்மாவைத் தன் சக்தியின் பால் ஈர்க்கவில்லை
2.எல்லா ஆத்மாக்களுக்குமே அந்த ஒளி பாய்ச்சப்படுகின்றது.
3.எந்த ஆத்மா அந்த ஒளியுடன் கலக்கின்றதோ அவ்வாத்மாவின் சக்தியைத் தன் ஒளியான ஞான வட்டத்தில் சுழல விட்டு
4.அவ்வாத்மாவின் ஒளியிலிருந்து பல சக்திகளைத் தன் ஒளி வட்டத்திற்கு ஈர்த்துச் செயல்படுகின்றார்கள் சப்தரிஷிகள்.
 
அப்படிப்பட்ட நிலை கொண்டவர் தான் ஞானகுரு வேணுகோபால சுவாமி அவர்கள். அவரின் ஒளியைக் கொண்டு நம் மேல் அந்த ஒளி பாயும் பொழுது நாமும் அவர் பெற்ற ஞான ஒளியில் பங்கு ஏற்கின்றோம்.
 
இதைப் போலத்தான் பல சித்தர்கள் நம்முடன் கலந்து விளையாடுகின்றனர். ஔவைப் பிராட்டி நமக்குக் கிடைத்ததும் இந்த நிலைதான்
 
காட்சி:- ஔவையார் வரும் நிலை
 
உலக ஆத்மாக்களுடன் சில காலங்களில் கால நிலைகள் மாறு கொண்டு உருமாறும் தருணத்தில்
1.சப்தரிஷிகளின் சக்தி நிலையை உலகம் உணர்வெய்தி விழிப்புறச் செய்ய
2.மனித ஆத்மாக்கள் நிலையிலிருந்து தான் செயல் கொள்ள முடியும்.
3.அந்நிலையில் தூண்டில் போட்டு எடுத்தவர் தான் ஞானகுரு வேணுகோபால சுவாமிகள்.