ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 21, 2024

முன்னோர்களை வணங்க “ஜீவ நதி உள்ள இடத்திற்கு ஏன் செல்கிறோம்…?”

முன்னோர்களை வணங்க “ஜீவ நதி உள்ள இடத்திற்கு ஏன் செல்கிறோம்…?”


இது நாள் வரை முந்தைய பாடங்களில் அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப அமிலங்கள் வளர்கின்றன என்று உணர்த்தினேன்.
 
இவ்வெண்ண‌ நிலையில் அதிகப்படியான குண நிலைகொண்டு
1.அதே குண எண்ணத்தைக் கொண்ட உடலை விட்டுப் பிரிந்த ஜீவ ஆத்மாக்களும்
2.இன்னும் தன் மகன், மகள் என்ற குடும்பப் பாசத்திலிருந்து சென்ற முன்னோர்களின் உயிராத்மாவும்
3.இத்தாயின் கருவில்தான் பிறக்க வேண்டுமென்ற பிறப்புத் தொடரில் இருந்தும்
4.முந்தைய காலங்களில் பல ஜென்மங்களாய் விட்ட குறையில் இருக்கும் உயிராத்மாக்களும்
5.இவ் ஆண் பெண் இரு பாலரின் பருவ மாற்ற உடல் வளர்ச்சி ஏற்படும் காலம் தொட்டே
6.அவர்களின் சுவாச அலையுடன் இவ்வாவிகளின் ஈர்ப்பு அவ்வுடலுடன் ஏறிக்கொள்ளுகின்றது.
 
நம் முன்னோர்கள் பருவம் எய்திய பெண்களை அதிகமாக வெளியில் செல்லாமல் வைத்திருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.
 
தன் மண வாழ்க்கையில் தோல்வி கண்ட ஆவிகள் தன் எண்ணத்தை ஈடேற்ற அதே வயதுக்குகந்த அப்பருவநிலை கொண்டோரின் உடலில் ஏறிக்கொள்வதற்கு சந்தர்ப்பம் எதிர் நோக்கிப் பல நிலைகளைச் செய்கின்றது.
 
இதன் சக்தியின் நிலை சூரியனின் ஒளி அலை அதிகமாகப் பாயும் நேரத்தைக் கொண்டு இதன் செயல் நடக்கும் (உச்சி வெய்யிலில்) அதுவுமல்லாமல் இவ்வாவிகள் மற்ற இடங்களில் சுழன்று கொண்டிருப்பதைக் காட்டிலும் நீர் நிலைகள் உள்ள இடங்களில்தான் அதன் சுழற்சி அதிகப்பட்டிருக்கும்.
 
ஜீவனுக்கு வரவேண்டுமென்ற ஆசையிருப்பதினால்
1.தன் உயிரணுவுடன் கூடிய ஆத்ம நிலை சிதறி விடாமல் இருக்க
2.நீரிலிருந்து சூரிய ஒளிபட்டு அதிகமாக அவ்வொளி அலை உள்ள இடங்களில் இருந்தால்
3.“இவ்வாவிகளுக்கு அதனுடைய ஆத்ம அமிலம் சிதறுபடாமல் காத்திருக்க முடியும்…
4.முன்னோர்களை வணங்க எதற்காக ஜீவ நதி உள்ள இடத்திற்குச் செல்லும் பொருள் புரிந்ததா…?”
 
இப்படிப் பலவாக உள்ள ஆவி ஆத்ம உயிரும், ஜீவ உடல் கொண்ட ஆத்ம உயிருமான மனிதர்களின் நிலையும் கலந்து வாழ்வதினால் தன் பிறப்பின் ஆசைக்காகப் பிறப்பெடுக்கப் பல உடல்களில் முன் கூட்டியே இவ்வாவி ஆத்மாக்கள் ஏறிக்கொள்கின்றன…
 
ஏறிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அவ் உடலிலிருந்து தன் சாதக நிலைக்காக அம்மனிதனின் எண்ணத்தையே இவ்வாவி ஆத்மாக்கள் செயல்புரிகின்றன.
 
இப்படி உள்ள ஆவி ஆத்மாக்கள் தான் பிறப்பில் வரும் நிலையில் சிலருக்கு ஒன்றுக்கு இரண்டாகவும் பலவாகவும் கருவுக்கு வருகின்றது.
 
மனிதனைக் காட்டிலும் மிருகத்தின் சுவாசத்திற்கு மிருக உடலில் பல உயிர் ஆத்மாக்கள் ஏறிவிடுவதால் ஒரே சூலில் பல குட்டிகளை ஈணுகின்றது. மிருகங்களிலேயே ஒரு நிலை கொண்ட சாந்த குணமுடைய சில பிராணிகளுக்கு ஒரு சூலில் ஒரு கன்று ஈணும் நிலை வழி உள்ளது.
 
இப்பிறப்பில் நடைபெறும் இச்செயல்களும் எண்ணத்திலிருந்துதான் வழித்தொடர் பெற்று அதனதன் இன நிலையின் அமில குணம் தொட்டு பிறப்பிற்கு வருகின்றது.
1.இதன் தன்மையில் உடலில் ஏறிய அத்தனை உயிராத்மாக்களுக்குமே பிறப்பிற்கு வர முடியாமல்
2.அவ்வுடலிலிருந்து ஆவி பிரிந்த பிறகு அதற்கும் விடுதலை கிடைத்து
3.மீண்டும் தன் பிறப்புக்குகந்த இடம் எடுத்து வருவதற்குள் பல ஆண்டுகள் ஆகி விடுகின்றன இவ்வுடலை விட்ட ஆவி ஆத்மாக்களுக்கு.
 
இவ்வாவி ஆத்மாக்களின் வழித்தொடரில் தான் பிறப்பு வருகின்றதா…? என்று வினா எழும்பலாம். ஒவ்வொன்றின் நிலை மனிதனிலேயே பலவாக வருகின்றது.
 
ஆகவே... இப்பொழுது உடலுடன் இருக்கும் நாம்
1.இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி
2.இதிலிருந்தே மெய் ஒளி காணும் மெய் ஒளி பெறும் நிலைக்கு நம் எண்ணத்தை உயர்த்தி
3.சித்தர்களுடனும் ஞானிகளுடன் இணைந்து வாழும் உன்னத நிலையைப் பெறுதல் வேண்டும்.