ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 16, 2024

“எனது குருவின் ஆசையை” நீங்களும் பெற வேண்டும்

“எனது குருவின் ஆசையை” நீங்களும் பெற வேண்டும்


மனிதன் என்ற நல்ல குணங்கள் இல்லாதபடி அக்க உணர்வுகள் கொண்டு அழித்திடும் உணர்வுகளாக வளர்ந்து வரும் இக்காலங்களில்
1.நான் அறிவில்லாத மூடனாக இருந்தாலும் மகா ஞானிகள் உணர்வுகள் இயக்கப்பட்டு
2.இந்த தத்துவத்தை அந்த ஞானிகளின் உணர்வலைகளே பேசுகின்றது.
3.நான் பேசுகிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.
 
இயற்கையின் உணர்வின் அலைகளை அன்று வென்று… தனக்குள் ஒளியாக மாற்றிச் சென்ற மெய் ஞானிகள் உணர்வுகளே அது பேசுகின்றது.
 
எனது குருநாதர் பித்தனைப் போன்று இருந்தாலும் சாக்கடைக்கு அருகில் எம்மை அமரச் செய்து இவ்வளவு பெரிய தத்துவங்களையும் எனக்கு உணர்த்தினார்.
1.அதனை நான் கேட்டறிந்த பின் அவரின் உணர்வுகள் பதிவாகி
2.அவனை நினைவு கொள்ளும் போதெல்லாம் இந்த உணர்வின் நினைவாற்றல் வந்து
3.என்னை அறியாத வந்த இருளை நீக்கவும்
4.இதைக் கேட்டுணர்வோர் அவர்களை அறியாத வந்த இருளைப் போக்கும் உணர்வாகவும் அது வெளிப்படுகின்றது.
 
ந்த மூச்சலைகளை எடுத்து அந்த உணர்வின் ஆற்றல் நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில்
1.என் குருவின் ஆசையை நீங்களும் பெற வேண்டும் என்ற நோக்கிலே
2.அதன் வழியில் தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
 
நாம் யாரும் தவறு செய்யவில்லை சந்தர்ப்பத்தின் நிலைகள் நாம் பரிவுடன் பண்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் நமக்குள் அறியாது வரும் அத்தகைய தீமைகளை நீக்க வேண்டும் என்ற நோக்கத்திற்குத் தான் இதைச் சொல்வது.
 
கையிலே அழுக்குப் பட்டால் கையைக் கழுவி விடுகின்றோம் உடையில் அழுக்குப் பட்டால் துவைத்து விடுகின்றோம்.
 
இதைப் போன்று மனித வாழ்க்கையில் உயர்ந்த பண்பு கொண்டு பிறருக்குச் செய்த சேவையின் தன்மையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால் நமக்குள் கேட்டறிந்த தீமைகள் உடலுக்குள் சேராத வண்ணம் அந்த ஞானிகளின் உணர்வலைகள் சேர்ப்பிக்கப்பட்டு அந்த உணர்வால் துன்பங்கள் நீங்க வேண்டும் என்று எப்போது நாம் சொல்கின்றோமோ அப்போது மனிதன் என்ற முழுமை அடைகின்றோம்.
 
1.நம்மை அறியாது பட்ட அழுக்கையும் துடைக்கின்றோம்
2.ஞானிகள் அருளாற்றல் நமக்குள் பெருகுகின்றது
3.நம் எண்ணம் கூர்மையாக விண்ணை நோக்கிச் சென்றடைகின்றது.
 
அந்த விண்ணின் உணர்வுகள் சேரும் பொழுது கூர்மை அவதாரமாக
1.எதைக் கூர்மையாக எண்ணி இந்த மனித வாழ்க்கையில் தன்னை இயக்கிய தீமைகளை வென்று ஞானிகள் எவ்வாறு விண் சென்றனரோ
2.அந்த உணர்வுகள் சிறுகச் சிறுக விளைந்து நமது உடலிலிருந்து உயிரான்மா பிரிந்து செல்லும் பொழுது
3.இதிலே விளைந்த உணர்வின் ஆற்றல் கொண்டு விண்ணுலகில் அவர்கள் இருக்கும் இடத்திலே” நாம் சேர்கின்றோம்.
4.அந்த மெய் ஞானிகளுடைய அருள் வட்டத்தில் நாம் இணையும் பொழுது
5.நஞ்சினை வென்று தனக்குள் படைத்து வெளியிட்ட மூச்சலைகளை நாம் உணவாக எடுத்து
6.ஒளியின் சுடராக அவரின் ஈர்ப்பு வட்டதில் என்றும் நிலையாக இணைந்து வாழ முடியும்.
 
அதற்குத்தான் இந்த உபதேசம். ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த அருள் உணர்வை ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
 
திட்டியவனைப் பதிவு செய்த பின் எண்ணும் பொழுது அவருடைய நினைவாற்றல் வந்து எப்படி உங்களுக்குள் கொதிப்படையச் செய்கிறதோ அதைப் போல உங்களுடைய நினைவுகள் எத்தகைய நிலையில் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது உங்கள் வாழ்க்கையிலே வந்த துன்பங்களை நீக்கி நல்லதைப் பெற வேண்டும் என்று ஏங்கி வந்த உங்களுக்குள் இந்த உணர்வுகளைப் பதியச் செய்கிறேன்.
 
எந்த ஈர்ப்புடன் இதைப் பதிவு செய்கின்றீர்களோ ந்த உணர்வின் எண்ணம் கொண்டு நீங்கள் நினைக்கும் பொழுது
1.அந்த அருள் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் சென்று
2.உங்களுக்குள் இருள் சூழச் செய்யும் தீமைகளை நீக்கிவிட்டுப் பொருள் காணும் உணர்வாக விளைந்து
3.ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காத்திடும் எண்ணமாக விளைந்து நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் ஈசனாக இயக்கி
4.அந்த உணர்வினை உங்கள் உடலுக்குள் வினையாக ஒளி பெறும் தன்மையாக ஒளிச்சரீரமாக மாற்றும் நிலையும்
5.அதுவே ஒளி பெறும் சிவனாக இந்த உடலை நோயற்ற உடலாக உருவாக்கும் நிலையும்
6.நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி பேரண்டத்தின் ஆற்றலுடன் இணையச் செய்து
7.மனிதனை முழுமை அடையச் செய்யும் அந்த உயிரின் நிலைகள் கொண்டு நாம் இணைந்து செயல்படுவோம்” என்று வேண்டிக் கொள்கின்றேன்.