உங்களுக்காக நான் பிரார்த்தித்தால்… உங்கள் கஷ்டம் எனக்குள் வராது
சிலர் எனக்காக வேண்டி நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்
என்று சொல்வார்கள். குடும்பத்தில் கஷ்டமாக இருக்கின்றது… எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்பார்கள்.
1.உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்து…
2.”நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்” என்று நான் நினைத்தால்
3.நீங்கள் சொன்ன கஷ்டத்தை எனக்குள் வளராதபடி தடுத்து
4.எனக்குள் நல்லதை வளர்த்துக் கொள்ள முடியும்
ஆனால் உங்கள் கஷ்டத்தை மாற்றுவதற்கு நீங்கள் எண்ணினால் தானே நன்றாகும். துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அது
எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் நாங்கள் பார்ப்போர்
அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் இது
உங்களுக்குள் நல்லதை உருவாக்கும்.
நிறையப் பேர் எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்
என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆக நம்மை இயக்குவது யார்…? நமக்குள் உருவாக்குவது
யார்… நம்மை ஆள்வது யார்…?
திருவெங்கடாஜலபதி என்றால் யார்…? “ஏழுகொண்டலவாடா” என்றும் சொல்வார்கள். ஆறாவது அறிவை
ஏழாவது நிலைகள் கொண்டு நம்மை ஆள்பவன் வெங்கடாஜலபதி.
திருவெங்கடாஜலபதி - நமது
உயிர் தான் நம்மை ஆளுகின்றது. அங்கே
தங்க ஆபரணங்களைப் போட்டுக்
காண்பித்துள்ளார்கள்
1.நல்ல மனங்களை கொண்டு இந்த உடலை ஆட்சி புரிய
வேண்டும் என்பதற்காகச் சிலையைப் போட்டு வைத்துள்ளார்கள்.
2.நம்மை ஆள்வது நமது உயிர் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.
இங்கே ஸ்ரீவில்லிபுத்தூரில் அரங்கநாதனைக் காட்டுகின்றார்கள்.. மனைவி ஆண்டாள். இந்த உயிரின் தன்மை அரங்கநாதனாக இருக்கின்றது எந்த குணங்களை
எண்ணுகின்றோமோ அது தான் நம்மை ஆளுகின்றது.
நான் (ஞானகுரு) இப்போது சொல்லக்கூடிய
உணர்வுகளை நீங்கள் கேட்டால் இந்த உணர்வின்
தன்மை உங்கள் உயிர் அரங்கநாதன் (உடலான அரங்கத்தில் நாதங்களை எழுப்பி) ஆக இயக்கி… நுகர்வதை இசையாக மாற்றுகின்றது… அந்த உணர்வின் சக்தி கொண்டு தான் உங்களை ஆளுகின்றது.
ஆண்டாள் என்று காரணப் பேர்
வைத்து
1.நாம் எதை ஆள வேண்டும்…? எப்படி ஆளச் செய்ய வேண்டும்…?
என்று சாதாரண நிலைகள் கொண்டு
2.ஒவ்வொன்றிலும் தெளிந்து தெரிந்து எப்படி வாழ
வேண்டும்…?
3.தீமைகள் எப்படி அகற்ற வேண்டும்…?
4.வாழ்க்கையை எப்படி வழி
நடத்த வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.
ஆண்டாள் திருப்பாவையில் என்ன சொல்கின்றார்கள்…?
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்…! இந்த உணர்வின் தன்மை நாம் எடுக்கும் பொழுது
1.அந்த மதியின் உணர்வாக நம்மை ஆளும். அதன் செயலாக நம் செயலும் இருக்கும்.
2.நமக்குள் நம் உணர்வின் தன்மை இங்கே அரங்கத்திற்குள் அமைந்திருக்கும் சக்தியாக
3.அதன் இசையாக அதனின் உணர்வின் செயலாக நம்மை
இயக்குவான் என்று பொருள்படும்படி தத்துவங்களை எழுதி இருக்கின்றார்கள்.
மனிதன் புரிந்து தன் வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டும்…? உயிரின் இயக்கம் எது…? நாம் நுகர்ந்த உணர்வின் சக்தி எது…? அது
எப்படி நம்மை ஆளுகின்றது…? என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
1.அந்த ஞானிகள் உணர்வு மக்களைக் காக்கும்.
2.நம்மைக் காக்க உதவும் உலகைக் காக்க உதவும்
3.உலகை அருள் ஒளியாக மாற்ற உதவும்.
ஆகவே… மகரிஷிகள் காட்டிய
அருள் உணர்வு வழிப்படி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உணர்வுகளை ஒளியாக்கி…
நம் சொல்லின் தன்மை பிறரின் இருளைப் போக்கி…
உலக மக்கள் அருள் ஒளி பெறும் அருள் ஞானத்தைப் பெறும் தகுதியாக
நாம் உருவாக்க வேண்டும்.