ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 29, 2024

ஏவல்

ஏவல்


உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண்ணுலகம் (சப்தரிஷி மண்டலம்) ஏற்ற சக்தி தேவை. விண் செலுத்தி விட்டால்
1.அவர்கள் விண் சென்ற பின் அந்த விண்ணினுடைய ஆற்றலை
2.அவர்கள் துணை கொண்டு அருள் ஞானிகளின் உணர்வை எளிதில் பெறலாம்.
3.நம்மை அறியாத வந்த தீமைகளைச் சுட்டுப்  பொசுக்க முடியும்.
 
இது தான் உண்மையான தியானம்.
 
இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியைக் கவரும் நிலைக்கே உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்தும் வசியப்படுத்தியதும்…”.
 
நீங்கள் க்கத்துடன் இருக்கப்படும் பொழுது அந்த அருள் மகரிஷிகள் போதித்த உணர்வையே உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
 
1.இந்த உணர்வின் தன்மை கூடும் பொழுது அந்த ஞானிகள் உணர்வைக் கைவல்யப்படுத்த முடியும்
2.உங்களுக்குள் அந்த வசியப்படுத்தும் நிலையாக உற்று நோக்கி உணர்வுகள்
2.அந்த ஞானிகள் உணர்வு உங்களுக்குள் பதிவான பின் வசியம்.
3.அதே சமயத்தில் நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்க்கும் பொழுது அது கைவல்யம்
4.தனக்குள் அந்தச் சக்தியைச் சேர்த்திட முடியும் பின் இதனின் உணர்வின் தன்மை கொண்டு ஏவல்…!
5.யாரைப் பார்த்தாலும் தீமைகள் அகன்றுவிடும் என்று சொல்லால் சொல்லி ஏவல்படுத்தும் பொழுது அங்கிருக்கக்கூடிய தீமைகள் ஒடுங்கும்.
 
இதைப் பெற வேண்டும் என்றால் வலிமை கொண்டு ஒன்று சேர்ந்து மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.
 
ஒரு தேரைப் பல நூறு பேர் சேர்ந்து இழுத்து எல்லையைச் சேர்ப்பது போன்று பல ஆயிரம் பேர் சேர்ந்து ஒருக்கிணைந்து இயக்குவோம் என்றால் நமக்கு முன் பரவிக் கிடக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அவரவர்கள் எண்ணி ஏங்கிய பங்கின் விகிதாச்சாரப்படி ஆன்மாவிலே கலக்கும்.
 
இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வரும் பொழுது தான் கைவல்யமாகும்.
 
1.முதலில் வசியப்படுத்தும் நிலைக்கே உங்களைத் தயார் செய்கின்றேன்… அதற்கு உபதேசம்.
2.பின் அதனின் உணர்வின் தன்மை ஏங்கப்படும் பொழுது கைவல்யம் உங்களுக்குள் அந்த சக்தியின் தன்மை பெருகுகின்றது.
3.பின் அந்த தீமையை அகற்றும் உணர்வின் தன்மை கொண்டு நினைவால் சொல்லால் ஏவல்…! தீமைகளை அகற்ற முடியும்…!
 
ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள். எனது குருநாதர் அதைத்தான் கொடுத்தார்
 
தயவு செய்து இந்த உபதேசத்தைக் கேட்டுணர்வோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்னை அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் கேட்டு பழகுங்கள்.
 
எதை எண்ணி ஏங்கிக் கேட்கின்றீர்களோ கேட்டுணர்ந்த உணர்வுகள் நீங்கள் எண்ணும் பொழுது
1.நான் கொடுக்கும் வாக்கு உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி
2.அந்த நினைவின் ஆற்றல் தீமைகளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் விளையும்.
3.பல முறை நான் இதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்... பயன்படுத்திக் கொள்ளுங்கள்.