ஐம்பெரும் பூதங்கள்
தாவர இனங்களுக்கு ஐந்தறிவு… ஒரு அணுவிற்கு ஐந்தறிவு. ஒரு அணுவிற்குள்
1.”வெப்பம்: ஆக்கும் சக்தி
2.”காந்தம்” அணைக்கும் சக்தி
3.அந்த அறிவு அது தன்னுடன் எதையுமே இணைத்துக் கொள்ளும் சக்தி
வருகின்றது.
வெப்பம் எப்பொருளைப் போட்டாலும் அது படைக்கும் சக்தி. காந்தம் தனக்குள் பட்ட… அல்லது எந்த
சக்தியை எடுத்துக் கொள்கிறதோ வெப்பத்துடன் இணைக்கப்படும் பொழுது அதனின் சக்தியாக
இயக்கும்.
1.”விஷம்…” எந்த உணர்வின் சத்து இதனுடன் கலக்கின்றதோ அது இயக்கச் சக்தி என்ற நிலையும்
2.எந்த மணத்தை இது நுகர்ந்ததோ அந்த மணத்தின்
சக்தியாக அறிந்திடும் நிலை “ஞானம்” (மணம்) சரஸ்வதி.
3.புலனறிவு நான்கானாலும் இவை அனைத்தும் கூட்டாகச் சேர்த்து “உணர்வு”
4.அது இயக்கச் சக்தியாக மாறி ஐந்து அறிவுடன் இயக்குகின்றது.
5.மணத்தால் அறிந்து கொள்கிறது… உணர்வால் தன்னை வளர்த்துக் கொள்கின்றது.
ஆக ஓர் அணுவை எடுத்துக்
கொண்டால் காயத்ரி இதனுடைய சுவை சீதா என்றும் அதனுடைய குணத்தை
ஞானம் என்றும் பெயர் வைக்கிறார்கள் ஞானிகள்… அதனின் குணத்திற்கொப்ப
எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை நாம் அறிந்து கொள்வதற்காக.
1.புலனறிவு ஐந்து என்றும் ஐந்து பூதங்கள்
என்றும் வைக்கின்றார்கள்…
2.ஐந்து
நிலைகள் அதைச் செய்யும்.
இதைத் தான்
பேரண்டம் ஆகாசம் அது இது என்றெல்லாம் இவர்கள் சொல்கின்றார்களே தவிர அந்த ஆகாசம்
எப்படி இதில் இயக்குகின்றது…? என்று தெளிவாக ஞானிகள்
கொடுத்துள்ளார்கள்.
இப்படி ஒவ்வொரு சத்தையும் எடுத்துக் கொண்டு
கொண்டால் அந்த ஐந்து புலனறிவு கொண்டது தான் உயிரினங்கள்
அனைத்தும். எந்த இலையின்
சத்தை ஒரு புழு எடுத்துக் கொண்டதோ அந்த மணத்தின் நிலைகள் கொண்டு தான் அந்த அறிவு கொண்டே அதை
எடுத்துக் கொள்ளும்.
ஆனால் மாடு எந்தெந்தத் தாவர இனங்களைச் சாப்பிட்டதோ அந்த உணர்வின் சத்தைக் கொண்டு அதனுடைய ஞானம் தான் வரும்… ஐந்து புலனறிவு தான்.
ஒரு பூனை எந்தெந்த
மாமிசத்தைச்
சாப்பிட்டுப் பழகியதோ அந்த மாமிசத்தின் உணர்வு கொண்டு தான்
அதனுடைய ஐந்து புலனறிவு… வேறு எதையும்
அது நாடாது.
ஐந்து புலனறிவு கொண்ட மற்ற
உயிரினங்களாக இருந்தாலும் மனிதன் உடலில் வரப்படும் பொழுது
ஆறாவது அறிவாகின்றது இயற்கையில் விளைந்த நஞ்சினைப் பிரித்து
விடுகின்றது
1.அதாவது நம்
உடலில் வரக்கூடிய மணம் கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும்
நிலை பெறுகின்றது.
2.நஞ்சினை
நீக்கிடும் உணர்வின் ஆற்றல் பெற்றது தான் இந்த ஆறாவது அறிவு.
இதைக் கொண்டு நாம் என்ன செய்கின்றோம்…?
பூமிக்கடியில் ஆழத்தில்
இருக்கக்கூடிய பொருளையும் தோண்டி எடுக்கும் திறனைப் பெறுகின்றோம். அணுவைப்
பிளந்து அதை அடக்கி ஆளவும் தெரிந்து கொள்கின்றோம்… அதை ஒளி சுடராக மாற்றவும் அதீத சக்தி கொண்டு அழித்திடவும் முடிகின்றது.
இது மனிதனின் ஆறாவது அறிவு
நாம் எதையெல்லாம் செய்கின்றோமோ மாற்றி அமைக்கும் சக்தி அதுதான் முருகு.
ஆறாவது அறிவு பிரம்மாவைச் சிறைப்
பிடித்தான் முருகன்…!