உங்களுக்கு யாம் அடிக்கடி உபதேசிப்பதன் உள் கருத்து
எமது குருநாதர் எமக்கு உபதேசித்தது போன்று
1.மெய் ஞானிகள் கண்டுணர்ந்த
உணர்வை உங்களுக்குள் நினைவு கூறச் செய்து
2.நீங்கள் கேட்டுணரும்
பொழுது மெய் ஞானிகள் கண்டறிந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கே உபதேசிப்பது.
3.பதிவு செய்த எண்ணத்தை ஓங்கி வளர்த்து
4.தியானத்தின் மூலம்
காற்றுக்குள் மறைந்துள்ள மாமகரிஷிகளின் அருள் சக்தியை நாம் கவரப் பழகுதல் வேண்டும்.
ஆலயத்தில் ஒரு தேரை பல ஆயிரம் பேர் சேர்ந்து வடம்
பிடித்து எப்படி இழுக்கின்றோமோ இதைப் போல மகா ஞானிகளுடைய
உணர்வுகளைப் பலரும் சேர்ந்து கவர்தல் வேண்டும். ஏனென்றால் அது மிக மிக சக்தி வாய்ந்தது.
1.அதனைக் கவர்ந்து
ஈர்ப்பதற்கே இப்படி உபதேசித்து
2.உங்கள் நினைவினை விண்ணை நோக்கி செலுத்தும்படிச் செய்வது.
அந்த மகரிஷியின் அருள் சக்திகளை அதன் மூலம் நீங்கள் பெற்று அதை
தியானிக்கும் போது அதை நுகர முடியும்
மகரிஷிகள் அனைவருமே பிறவிக் கடனை அறுத்துச் சென்றவர்கள் யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது
விண் சென்றவர்கள்
1.அவர்கள் உடலில் விளைய வைத்த
அந்த உணர்வை சாதாரண மனிதன் எண்ணத்தால் நெருங்க முடியாது.
2.அவர்கள் ஒத்த உணர்வை உங்களுக்குள் செலுத்தி
3.உங்கள் எண்ணங்களை வலு கூட்டச் செய்து
4.நினைவை விண்ணை நோக்கி ஏகும்படிச் செய்து
5.அந்த ஆற்றலைப் பருகும்
நிலைக்கு உற்சாகத்தைத் தூண்டி
6.அந்த உணர்வின் நினைவாற்றலை ஏற்படுத்திய பின் தியானத்தில் நாம் இருப்போமேயானால்
7.அந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் வலுப்பெறுகின்றது.
இதனின் துணை கொண்டு எப்பொழுது நீங்கள் எண்ணினாலும் “மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா” என்று எண்ணினால் அந்தத் திறனை நீங்கள்
பெறுகின்றீர்கள்.
அந்தத் திறன் பெறச்
செய்வதற்குத் தான் கூட்டுத் தியானங்களை
அமைத்துக் கொடுத்துள்ளோம். ஆற்றல்மிக்க சக்தியை நீங்கள் பெருக்கி
1.அதன் வழித்தொடர் கொண்டு இந்த வலுவினைச் செருகேற்றிய
பின் விண்ணுலக ஆற்றலை எளிதில் பெற முடியும்.
2.எந்த மெய் வழி பெற
வேண்டும் என்று எண்ணி ஏங்கி வந்தீர்களோ அவை அனைத்தும்
உங்களுக்குள் ஓங்கி வளரும்.
நோய் வராது தடுக்கவும் முடியும்.
உங்கள் நினைவுகள் எல்லாம் இப்போது கூர்மையாக விண்ணை நோக்கிச் செல்லுகின்றது. அதனின்
வலுக் கொண்டு உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் இன்னொரு உடல் பெறாதபடி “இந்த உடலிலேயே ஒளியின் சரீரம் பெறுவது திண்ணம்…”
மகரிஷிகள் கண்ட வழியில் நீங்களும் சென்றடைந்து உங்கள்
மூச்சும் பேச்சும்… கூட்டுத் தியானத்தால்
வெளிப்படுத்தும் அலைகள் பிறருடைய உணர்வுகளை நல்ல உணர்வுகளாகப்
படரச் செய்து… மெய் ஞானிகள்
உணர்வைப் பெறும் தகுதியாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
அதன் மூலம் நீங்கள்
வெளிப்படுத்தும் மூச்சலைகள் எல்லோருக்கும் நன்மை பயக்கும்
சக்தியாகப் பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக்
கொள்கின்றேன் (ஞானகுரு).