ஈஸ்வரபட்டர் கண்டுணர்ந்த உணர்வுகளை நாம் பருக வேண்டும்
எனது குருநாதர் உடலுடன் இருக்கப்படும் போது அவருக்குள் கற்றுணர்ந்த
அந்த உயர்ந்த உணர்வை எனக்குள் பதிவு செய்தார். அதை நினைவு கொண்டு
எடுக்கும்படி சொன்னார்… எடுத்து அதிலே வளர்ச்சி பெற்றேன் (ஞானகுரு).
உடலை விட்டு நான் பிரிந்து சென்ற பின் “எனக்கு
நீ செய்ய வேண்டிய கடமைகள் இன்னதுதான்” என்று அவர் சொன்னார்.
1.அருள் ஞானத்தின் உணர்வை
எனக்குள் வளர்த்துக் கொண்டதற்கு உயிரான்மா புவியின் ஈர்ப்புக்குள் வராதபடி
விண் செல்ல உந்து விசை தேவை.
2.என்னை விண்ணிலே வீசு…!
3.இங்கிருந்து
அகன்று சென்றால் தான் உடல் பெறும் உணர்வுகளைக் கருக்க முடியும்… ஒளியின் சுடருடன் நான் சுழல முடியும்.
ஞானத்தின் தன்மையை எனக்குள் வளர்த்தாலும்
அந்த உணர்வின் தன்மை கொண்டு இங்கே விரிவடைந்து பேசலாம். “தன்னிச்சையாக
விண் செல்லும் நிலை எவருக்கும் இல்லை..” வலு கொண்ட பல
நிலைகள் உறுதுணை கொண்ட உணர்வின் துணை கொண்டு தான் செல்ல முடியும்.
எடை கூடிய
பொருளை ஒரு நூலால் தூக்க வேண்டும் என்றால் கடினம். ஆனால் பல நூல்களை ஒன்றாக்கிக் கயிறாகத் திரிக்கப்படும்பொழுது அதைத் தூக்கும் சக்தி
வருகின்றது.
இதைப் போன்று தான்
1.“ஒன்றிய
நிலைகள் எங்கே வருகின்றதோ” அந்த வலுவான
உணர்வு கொண்டு உந்து விசையால்
என்னை உந்தித் தள்ள வேண்டும்.
2.உடல் பெறும் உணர்வுகள் கருகும் எல்லை அதுதான்
3.கருகிய உணர்வு கொண்டு அங்கே நுகர்ந்த உணர்வுகளை
ஒளியாக மாற்றும்.
4.அந்த ஒளியின் சுடரே தான் என்றும் நிலைத்து அழியாது
கொண்டு இருக்கும்.
5.இங்கே புவியில் வந்தால் உணர்வின் தன்மை மாய்க்கும்.
நஞ்சினை வென்றிடும் உணர்வின் அலைகளுக்குள் செல்லப்படும் பொழுது நஞ்சை வென்றிடும் உணர்வையே நான்
பெற முடியும்.
நஞ்சை இந்த வாழ்க்கையில் வென்றாலும் வென்றிடும்
உணர்வுகள் பெற்றாலும் இதைக் கடந்து செல்லும் ஈர்ப்பு எனக்கு
இல்லை.
1.கடந்து செல்லும் இந்த ஒத்த நிலைகள்
2.இங்கே கீழிருந்து இயக்கப்படும் பொழுதுதான் விண
செல்ல முடியும்.
அவர் ஆன்மா வெளியே செல்லும் பொழுது அவர் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை அதற்கென்று என்னென்ன பக்குவத்தைச்
செய்தாரோ… அதைப் பக்குவப்படுத்தி “அவர் வழியில் விண் செலுத்திய பின்பு தான் விண்ணுலக
ஆற்றலை நான் பருக முடிந்தது…”
விண்ணின் ஆற்றலை எனக்குள் பதிவு செய்திருந்தாலும் நினைவு
கொண்டு எடுக்கும் சக்தி அந்தத் திறன் அவரை விண் செலுத்திய
பின் தான் எனக்குக் கிடைத்தது.
என் குருவின் இயல்பான நிலைகள் கொண்டு அவர் உணர்த்திய உணர்வின் ஒளி அலைகள் நிலை கொண்டிருக்க அவர் காட்டிய வழிகளில் அவரை
விண் செலுத்தினேன்.
1.அதனின் தொடர் கொண்டு தான் அவருடைய தொடர்பும் வருகின்றது
2.இந்த புவியியல் வரக் கூடிய தீமைகளை என்னால் அகற்ற
முடிகின்றது.
3.உங்களுக்கும் அந்த ஆற்றலைப் பதிவு செய்ய முடிகின்றது.
4.உங்களுக்குள் விளைந்த தீமைகள் என்னை நாடாத வண்ணம் தப்பித்துக் கொள்ள முடிகின்றது.
இல்லை என்றால் அது முடியாது…! சரியான மார்க்கம் இல்லாதபடி எதையும் செய்ய முடியாது.
சில நேரங்களில் குருநாதர் போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு தட்டுவார் ஹலோ…! என்பார் நான் போன்
செய்கிறேன் என்பார்.
போஸ்ட்
கம்பியில் ஏன் கல்லைக் கொண்டு தட்டுகிறீர்கள் சாமி…? என்று நான் கேட்பேன்.
கடவுளுக்கு போன் செய்கிறேன் என்பார்.
கல்லிலே தட்டுவதை நீதான் ஏன் என்று கேட்டாய்…
மற்ற யாரும் கேட்கவில்லை. காரணம் அதிலே வரக்கூடிய நாதங்களைச் சுட்டிக் காட்டி விண்ணிலே நாதங்கள் எப்படி வருகிறது…? என்று பார்…!
விண்ணுலகில் எடுத்துக் கொண்டால் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று
மோதுகின்றது. மோதியவுடன் சுருதிகள் மாறுகின்றது. அகண்டு சென்ற பின் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப “எத்தனையோ உருவங்களாகத் தோற்றம் தருகிறது…” விண்வெளியில் இப்படி உருவாகின்றது.
அத்னுடைய
வேகங்கள் வரும் பொழுது நாதங்கள் எப்படி வருகிறது பார் என்றார். அதற்குத் தான் கல்லைக் கொண்டு நான் தட்டிக்
காண்பித்தேன்…! என்றார் நாதத்தை நீ பார் என்றார்.
1.இது எல்லாம் அனுபவபூர்வமாக… அவருடைய சக்தி கொண்டு
உலகம் எப்படி இருக்கிறது…? என்று
2.அவர் கண்டறிந்த உணர்வு அவருக்குள் இருந்து வருகின்றது.
3.அதை எல்லாம் நாம் பருக வேண்டும் என்பதற்குத் தான் இதை ஞாபகப்படுத்துவது.