பல அவஸ்தைகள்… பல இன்னல்கள் பட்டு… “அதிலிருந்து விடுபட்டு விண் சென்றவர்கள் தான் மகரிஷிகள்”
நமது பூமியில் மகரிஷிகளும் சாதாரண மனிதனாகத் தோன்றி
1.சாதாரண மனிதனிலிருந்து
மகரிஷியாக வளர்ந்து உணர்வின் சத்தை உயிரோடு ஒன்றி ஒளியின்
சரீரமாகத் துருவ நட்சத்திரமாகவும்
2.துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட அந்த
உணர்வின் சக்தியைப் பெற்று சப்தரிஷி
மண்டலங்களாகவும்
3.மண்ணுலகில் தோன்றிய மனிதன் விண்ணுலகில்
இருக்கின்றார்கள் .
சூரியனிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் கோளாக
நட்சத்திரமாக மாறி ஓர் பிரபஞ்சமாக இருக்கின்றது. இந்தப்
பிரபஞ்சத்திற்குள் நமது பூமியும் ஒன்று.
பிரபஞ்சத்தில் உருவாகும் அத்தனை உணர்வுகளும் பூமி தனக்குள் கவர்ந்து நீர் சத்து பிராணவாயு இதைப் போன்ற நிலைகளில் அதிகமாக உற்பத்தி
செய்யக்கூடிய திறன் பெற்றதால் இங்கே உயிரினங்கள் வாழ்கின்றன.
இவ்வாறு பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய சக்தியை நமது பூமி எடுத்து… உயிரினங்கள் வாழ்வதற்கும் அது வளர்வதற்கும் அது வளர்ச்சி பெறுவதற்கும்
மூல காரணமாக இருப்பது நமது பூமி.
அதிலே தோன்றிய உயிரணு தான்
எத்தனையோ கோடி ஜீவணுக்களாக மலர்ந்து வளர்ந்து பல கோடிச் சரீரங்களைப் பெற்று…
1.கடைசியில் மனிதனாகப்
பிறந்தபின்
2.மனிதர்களில் பல இன்னல்கள் பல கஷ்டங்கள் பல
வேதனைகள் பட்டு அவதிப்பட்டு வந்தாலும்
3.சந்தர்ப்பவசத்தால் அத்தகைய விஷத்தின் தன்மைகளை அழித்து ”மனிதரில் மாணிக்கமாக
மகரிஷிகள்”
4.தன் உணர்வின் தன்மை
ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றார்கள்.
நமது உடல் நாம் உணவாக
உட்கொள்ளும் நல்ல உணவிற்குள் மறைந்துள்ள நஞ்சினை நீக்கி அதை மலமாக மாற்றுவது போல் ஒவ்வொரு
பொருளிலும் மறைந்திருக்கும் நஞ்சினை நீக்கும் ஆற்றலைப் பெறக்கூடிய தகுதி பெற்றவர்கள் மனிதர்கள்.
இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில்… ஈகை இரக்கம் நல்ல உணர்வு அன்பு பாசம் பரிவு பண்புடன் நீங்கள்
செயல்படும் இந்த வேளையில் பிறர் உடலில் அவர்கள் சந்தர்ப்பத்தால்
அறியாது உருவாக்கப்பட்ட பல தீய விளைவுகளை நீங்களும்
சுவாசிக்க நேர்ந்து… உங்கள் நல்ல உணர்வுகள் அதனால் வலு இழக்க நேருகின்றது.
1.அதை தடுக்கத்தான் ஞானிகள் மகரிஷிகளின் அருள்
உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கச் செய்கின்றோம்.
2.அறியாது சேர்ந்த தீய உணர்வின் ஆற்றலைப் பலவீனப்படுத்தி உணர்வை ஒளியாக
மாற்ற செய்யப் பழகிக் கொடுக்கின்றோம்.
அந்த மெய் ஞானிகள் நஞ்சினைப் பிளந்து அதைத்
தனக்குள் அடக்கி ஒளியின் சிகரமாக இன்றும் விண்ணுலகில்
நிலைத்திருக்கின்றார்கள்.
1.அவர்கள் சென்றடைந்த அந்த
எல்லையை அடைவதற்குத் தான் நமது குருநாதர் காட்டிய வழியில்
2.தியானப் பயிற்சியாக
உங்களுக்கு இந்த உபதேச வாயிலாகக் கொடுத்துக் கொண்டு
வருகின்றேன்.