ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 1, 2026

கடும் தவத்தால் கொடுக்கப்பட்டது தான் இந்த அருள் ஞானச் சக்கரம்

கடும் தவத்தால் கொடுக்கப்பட்டது தான் இந்த அருள் ஞானச் சக்கரம்


ஆயுள் கால மெம்பர்களுக்கு அந்த உண்மையின் உணர்வின் சக்தி பெற கடும் தவத்தால் கொடுக்கப்பட்டது தான் அருள் ஞானச் சக்கரம். எமக்கு குருநாதர் முதலிலே அப்படித்தான் கொடுத்தார்.
 
அதைப் போல அவர் காட்டிய அருள் வழியில்
1.27 நட்சத்திரங்களும்
2.சிவசக்தி விஷ்ணு சக்தி பிரம்ம சக்தி சித்தி விநாயகர் என்ற இந்த உணர்வின் தன்மை இணைத்து
3.அந்த வட்டத்திற்குள் கணங்களுக்கு அதிபதி சித்தி விநாயகர் என்று அதை முறைப்படுத்தியது.
 
இன்று கம்ப்யூட்டர் நாடாக்களில் எப்படிப் பல விதமான ஆணைகளைப் பதிவு செய்கின்றனரோ அதைப் போன்று தான் அருள் ஒளியின் உணர்வின் தன்மைகளை எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பதிவாக்குகின்றோம். உங்கள் உடலிலும் பதிவாக்கி உள்ளோம்.
 
1.அந்தச் சக்கரத்தைப் பார்த்துத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுதெல்லாம்
2.தீமைகளை அகற்றி உங்கள் செயல்களை அது நல்லதாக மாற்றும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் எங்கள் உடலில் படர வேண்டும்அகஸ்தியரின் உணர்வு எங்களுக்குள் படர வேண்டும்மெய் ஒளி காணும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்என்று இந்த உணர்வுகளை எடுத்து வலிமை பெறச் செய்து விட்டு
1.அடுத்து எந்தக் காரியமாக இருந்தாலும் எந்தச் செயலாக இருந்தாலும்
2.அது நல்லதாக அமைய வேண்டும் என்று செயல்படுத்திப் பாருங்கள்.
 
அதே சமயத்தில் எங்கள் சொல்லும் செயலும் புனிதமாக வேண்டும் என்ற இந்த உணர்வுடன் உங்கள் வாழ்க்கையை வழி நடத்துங்கள். அருள் உணர்வுகளைப் பெறுங்கள்இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறுங்கள்.
 
1.குரு காட்டிய நிலையில் கொண்டு உங்களை ஆயுள் கால மெம்பராக அமைத்து
2.அதன் வழி துருவ நட்சத்திரத்துடன் இனைந்து வாழச் செய்ய
3.கம்ப்யூட்டரில் ரெக்கார்ட் செய்வது போன்று இதைப் பதிவு செய்கின்றோம்.
 
இதன் வழி உங்கள் எண்ணத்தைச் செலுத்துங்கள்பேரருளைப் பெறுங்கள். இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றுங்கள். நஞ்சினை வென்றிடும் ஆற்றலைப் பெறுங்கள்.
 
எங்கள் சொல்லும் செயலும் இந்த உலகைப் புனிதமாக்கும் நிலை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
அருள் மகரிஷிகள் உணர்வுகளைப் பெருக்கி இந்த உணர்வின் தன்மையை எல்லா இடங்களிலும் பரப்பப்படும் பொழுது இந்த உலகில் வரக்கூடிய தீமைகளிலிருந்து நாமும் மீண்டு மற்றவரையும் மீட்டிட முடியும்.
 
நாட்டுக்கு நாடு மதத்திற்கு மதம் இனத்திற்கு இனம் ஊருக்கு ஊர் தெய்வத்திற்குத் தெய்வம் என்று எத்தனையோ பேத உணர்வுகள் இன்று சூழ்ந்து கொண்டுள்ளது.
 
விஞ்ஞானத்தால் ஏற்படுத்தப்பட்ட கதிரியக்கங்கள் நியூட்ரான்என்ற விஷத்தன்மைகளும் பரவிக் கொண்டுள்ளது. இது எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான்.
 
குருநாதர் காட்டிய வழியில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று சூழ்ந்திருக்கும் இந்த விஷத் தன்மையிலிருந்து மீண்டு அனைவரையும் மீட்டிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எடுக்கும் போது நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் வலுப் பெறுகிறது.
 
1.எத்தகைய நஞ்சையும் பிளந்து உணர்வினை ஒளியாக மாற்றி
2.துருவ நட்சத்திரத்துடன் இணைந்து என்றும் பிறவில்லா நிலை அடைவோம்.

“நம் எண்ணத்தின் முகப்பில்” துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்போதுமே வைத்திருக்க வேண்டும்

“நம் எண்ணத்தின் முகப்பில்” துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்போதுமே வைத்திருக்க வேண்டும்


ஒவ்வொரு நேரத்திலும் யாம் உங்களுக்கு உபதேசிக்கும் உணர்வுகள் கொண்டு தீமைகள் வந்தால் தீமைகளைக் கேட்டறிந்தாலும் அடுத்த கணம் அந்தத் தீமை வளராது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி விட்டு எல்லோருக்கும் நீங்கள் ஞானத்தைப் போதிக்க முடியும். வர்கள் தீமைகள் உங்களுக்குள் புகாது தடுக்க முடியும்.
 
1.ஒரு கம்ப்யூட்டரில் பதிவாக்கி ஆணையிட்டு அதைச் செயல்படுத்துவது போல்
2.வீட்டை விட்டு நீங்கள் எங்கே சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று
3.இதை எண்ணி எடுத்துக் கொண்டால் இது நமக்கு முன்னாடி வந்து…” வலிமை பெறுகின்றது.
 
எதிரிலே ஒரு பஸ்ஸோ மற்ற வாகனங்களோ வந்தாலும் இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணவுகள் அதிலிருந்து உங்களை ஒதுக்கிச் செல்லச் செய்யும்.
 
ஆனால் காலையில் எழுந்து நாம் தினசரி அலுவல்களைச் செயல்படுத்தும் போது பையன் இப்படி எல்லாம் செய்தான் பக்கத்தில் உள்ளவர்கள் தொல்லை செய்கின்றார்கள் வேலை பார்க்கும் இடத்தில் தொல்லையாக இருக்கிறது என்று
1.காலையில் எழுந்திருக்கும் பொழுதே இப்படிச் சோர்வாக எண்ணி இந்த உணர்வுகள் முன்னணியில் வந்து விட்டால்
2.நாம் ரோட்டில் நடந்து சென்றால் முன்னாடி சைக்கிள் வருவதும் தெரியாது அல்லது பஸ் வருவதும் தெரியாது.
3.நம்மை அறியாமலே விபத்தாகிறது.
 
எதன் உணர்வு நம் சிந்தனையைக் குறைக்கச் செய்கிறதோ அந்த உணர்வின் செயலே வாழ்க்கையில் நடந்து விடுகிறது. ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
 
சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் அது முன்னணியில் வந்து விடுவதால் இவ்வாறு இயக்கி விடுகின்றது.
 
அதையெல்லாம் மாற்றி வாழ்க்கையில் வெளியில் செல்லும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் வலிமையான உணர்வுகளை எடுத்து முன்னாடி செலுத்திக் கொள்ளுங்கள்.
1.தீமை வந்தால் மற்ற இடர்பாடுகள் வந்தால் விலகி செல்லும் உணர்வுகளாக வரும்.
2.சிந்திக்கும் ஆற்றலும் தெளிந்து வாழக்கூடிய உணர்வுகளை ட்டிக் கொண்டேயிருக்கும்.
 
அதையெல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் பதிவு செய்து கொண்டே இருக்கின்றேன். எழுத்திலே படித்தாலும் புரியவில்லை என்று சென்று விடுவார்கள்.
 
ஆனால்
1.எமது உபதேசத்தைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது உங்களுக்குள் இது பதிவாகின்றது.
2.அப்படிப் பதிவாக்கி விட்டால் நிச்சயம் உங்களால் நல்ல குணங்களைக் காக்க முடியும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற முடியும்… அதற்கு குரு அருள் உறுதுணையாக இருக்கும்.
 
என்றும் தெளிந்த நிலையினை நீங்கள் பெற முடியும் பெறுவீர்கள் நிச்சயம் பெற்று விடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தான் இந்த அருள் வாக்குகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.