உலகை அழிவிலிருந்து காக்கும் பித்தராகிய குருநாதர் என்னிடம் சொன்னது
“உலகை
அழிவிலிருந்து காக்கும்” அன்று பித்தனைப்
போன்று இருந்த எமது குருநாதர் பல நிலைகளை எமக்குத் தெளிவாக
எடுத்துரைத்தார்.
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி
2.அந்த உணர்வின் ஆற்றல் மிக்க நிலைகள் கொண்டு மனிதனாக உருவாக்கிய நற்குணத்தினை நீ
தெய்வமாக மதி.
2.உயர்ந்த உணர்வுகள் அங்கே விளைய வேண்டும் என்று நீ பிரார்த்தனை செய்தால்… உனக்குள் அது விளையும்.
3.அந்த
உணர்வின் சொல்லாக அந்தக்
கடவுளுக்கு மகிழ்ச்சியான உணர்வு கொண்டு ஆராதனை செய் என்றார்.
ஆகவே…
உங்கள் உயிரைக் கடவுளாகக் காட்டினார்… உடலைக் கடவுள் அமைத்த கோட்டை என்று
காட்டினார். மனிதனாக உருவாக்கிய அந்த உயர்ந்த உணர்வின் ஆக்கச் செயல்களை தெய்வமாக மதிக்கச் சொன்னார். அதைத்தான்
உங்களில் நான் பார்க்கின்றேன்.
இந்த
உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் உங்களை அறியாது சேர்ந்த இன்னல்களில்
இருந்து மீண்டு “மகிழ்ச்சி…” என்று
வாயில் எப்பொழுது சொல்கின்றீர்களோ அது தான் எனக்குப்
பேரானந்தப் பெருநிலையான அந்த சொத்தின் தன்மையாக அந்த மகிழ்ச்சி எனக்குள் விளையும்.
தீமைகள் சுழன்று கொண்டிருக்கும் இந்த வேளையில் அதிலிருந்து விடுபட நான் (குருநாதர்) காட்டிய அருள் சக்தியை
1.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஊடுருவச் செய்து
2.அங்கே
உட்புகுந்த தீமைகளை நீக்கச் செய்து
3.மகிழ்ந்திடும்
உணர்வின் எண்ன அலைகள் அங்கே விளையச் செய்து
4.அவர்கள்
சொல்லால் மூச்சால் பேச்சால் ஒலிபரப்பும் நிலைகளைக் கண்டு நீ ஆனந்தப்பட வேண்டும்.
அதைத்தான் குரு எமக்குச் சொன்னார்.
ஒருவர் நமக்கு எதிரியாகி விட்டால் அவன் வேதனைப்பட வேண்டும் அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… நமக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுத்தான்… அவன் கஷ்டப்பட்டுத் தான் ஆக வேண்டும் என்று ரசிப்பார்கள்.
இப்படி ரசிப்பவருடைய நிலைகள்… தன்
உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தை எல்லாம் நஞ்சின் தன்மையாக அது அடையச் செய்துவிடும்.
பின்
இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது எந்த நஞ்சு
இங்கே விளைந்ததோ மனிதன் சிந்தனை இழக்கப்பட்டு
இறந்த பின் பாம்பின் ரூபமாகத்தான் நஞ்சினைப் பாய்ச்சி மற்றதை ரசித்துச்
சாப்பிடும் நிலையாகச் செல்ல வேண்டி வரும். நஞ்சுகள் கூடி பாம்பினமாகத் தான் பிறக்க வேண்டும்…
1.அதிலே நீ சென்று விடாதே
2.நஞ்சினை நீக்கி அருள் ஞானிகள் உணர்வுகள் அங்கே பெற
வேண்டும் என்று நீ தியானி.
3.அதனின் உணர்வின் தன்மை ஒளியான
உணர்வுகளைப் பரப்பு தீமைகளைப் போக்கு அதைக் கண்டு நீ
மகிழ்ச்சி பெறு.
குருநாதர்
சொன்னது இது தான்.
பித்தனைப் போன்று தான் அவர் இருந்தார். உலகம் அனைத்தும் “அவரைப் பித்தன்” என்று எண்ணினார்கள். ஆனால் “உலக மக்கள் பித்தராக
இருக்கிறார்கள்” என்று தான் அவர் சொன்னார்.
உலகம் பித்தின் நிலையில் இருந்து தன்னை அறியாது பல சித்தின் நிலைகள் கொண்டு… அவரவர்கள் உற்பத்தியாகும் நிலை தான் இவ்வாறு உருவாக்கிக் கொண்டுள்ளார்கள்… அதிலிருந்து நீ மீள வேண்டும்.
என்னைப் பித்தன் என்று சொல்பவர்கள் அவர்கள் தன்னைப் பித்தன் என்பதை மறந்து விட்டார்கள்.
1.அந்தப்
பித்து கொண்ட உணர்வின் தன்மை எனக்குள் எட்டிடாது
2.அந்த மகரிஷிகள் உணர்வை ஒன்றே எனக்குப் போதும் என்று
3.இந்தச் சாக்கடைக்கு மொழி பூச வேண்டாம்… உடல் சாக்கடை என்று உணர்த்திவிட்டு
4.சாக்கடை அருகில் இருந்து தான் இந்த உபதேசங்களை
உணர்த்தினார்.
இந்தச் சாக்கடைக்கு முக்கியத்துவம் கொடுக்காதே…! எதை எடுத்தாலும் சாக்கடை கழிவுகள் சேரும். ஆகவே… உயிராக இயக்கப்பட்ட உணர்வின் ஒளியின் தன்மை கொண்டு ஒளியின் சுடராக ஆக வேண்டும்.
வராகன் எப்படி நாற்றத்தைப் பிளந்து சாக்கடைக்குள்ளிருந்து நல்ல உணர்வை எடுத்து
மனிதனாக உருவாகக் காரணமானதோ அதைப் போல் அந்த மெய் ஞானிகள்
உணர்வை நீ நுகர்ந்து (உனக்குள்) சாக்கடைக்குள்
மறைந்து இருக்கும் உயிரின் நிலைகள் கொண்டு அவனுடன் நீ ஒன்றி
ஒளியின் சரீரமாக நிலை கொண்டு என்றும் நீ வாழ வேண்டும்.
அதை நீ பெற வேண்டும் என்றால் நீ சந்திக்கும் கோடானு கோடி மக்களும் அதாவது
முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள்… ஏனென்றால்
ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடலைச் சிருஷ்டித்தது ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு குணத்தின் அடிப்படையில்
இயக்குகின்றது
1.யாராக இருந்தாலும் அந்த உணர்வுகள் அனைத்தும் ஒருக்கச் சேர்ந்து ஒளியின் சரீரமாகப் பெற வேண்டும்.
2.அந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் பெற வேண்டும்… ஈசன்
வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்
3.அங்கே மகிழ்ந்திடும் நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்கி
நான் உனக்குக் காட்டிய நிலைகள் கொண்டு
நீ தியானி.
அதை நீ செய்தால் நீ அதுவாகின்றாய்… ஒளியின் சரீரமாகின்றாய். உன்னைப் பார்ப்பவர்களும் உன்னுடன் அவரும் ஒளியாக ஆகின்றார்கள் என்று இப்படித்தான் எனக்கு வழி காட்டினார்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.