நமக்குள் மறைமுகமாக செயல்படும் இயக்கங்கள்
கண்ணுக்குப் புலப்படக்கூடியது அனைத்துமே
துவைதம்… அதிலே மறைந்த உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது
அத்வைதம்…
1.அந்த உணர்வலைகளை நாம்
கவர்ந்து விட்டால் விசிஷ்டாத்வைதம்.
2.எதனின் உணர்வின் தன்மை நமக்குள் எடுத்துக்
கொள்கின்றோமோ
3.அந்த உணர்வு நம் உடலுக்குள்ளேயே இருந்து மறைந்திருந்து செயல்படுத்துகின்றது.
சந்தர்ப்பத்தில் ஒரு
வேதனைப்பட்ட நிலைகளைப் பார்த்தோம்… அது
சூட்சமமாக இருக்கின்றது அது.
அவர்கள் வெளிப்படுத்திய அந்த வேதனை உணர்வலைகள் அத்வைதம். அதை நாம் இப்படி செய்கின்றாரே என்று
நுகர்ந்தறியப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம். கவர்ந்து கொண்ட
உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது.
பின் என்ன செய்கின்றது…?
1.என்னை அறியாமலே அவர்களை எண்ணும் பொழுதெல்லாம்
வேதனை வருகின்றது.
2.வேதனை வருவது ஏன்…? என்று நமக்குத் தெரிவதில்லை…
நம்மை அறியாமலே அப்பொழுது புலம்புகின்றோம்.
ஆகையினால் தான் இதை விசிஷ்டாத்வைதம்
என்று காண்பிக்கின்றார்கள்.
1.நீ கவர்ந்து கொண்ட உணர்வு எவ்வாறு உன்னை இயக்குகிறது…? என்பது
2.சாஸ்திர விதிகளில் தெளிவாக இப்படிக் காட்டப்பட்டு இருக்கின்றது.
ஆனால் அத்வைதம் வேறு விசிஷ்டாத்வைதம் வேறு என்று இரண்டு பிரிவாகப் பிரிந்து கொண்டு சண்டை
இட்டுக் கொள்கின்றார்கள். இது தான் உண்மை இல்லை இதுதான்
உண்மை என்று சொல்கின்றார்கள். மறைமுகமாக இயக்குகிறது என்று
சொல்கின்றது… நீங்கள் எப்படி நேரடியாக
இயக்கும் என்று சொல்லலாம்…? அவர்களுக்குள் ஒரு போர் முறை.
வியாசகரால் கொடுக்கப்பட்டது தான் இந்த உண்மைகள்…! அதையாவது
குறைந்தபட்சம் தெரிந்து கொண்டிருக்கின்றோமா…? என்றால் இல்லை. அதை அறியும் பக்குவமாவது இருக்கிறதா…? என்றால்
இல்லை.
மற்றவர்கள் வெளிப்படுத்திய உணர்வலைகள் அத்வைதம்… சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அதை அலைகளாக வைத்துள்ளது. அதே சமயத்தில் அந்த உடலைப்
பார்த்து அதே உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம்.
தனக்குள் கவர்ந்து கொண்ட நிலைகள் தன்னை
அறியாமலேயே மறைமுகமாக செயல்படுகின்றது… விசிஷ்டாத்வைதம்
என்று தெளிவாகவே ஞானிகள் நமக்குக்
கொடுத்துள்ளார்கள்.
இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் அல்லவா…!
விநாயகர் தத்துவப் பிரகாரம் வணங்கப்படும் பொழுது நம்மை அறியாது இயக்கும் இந்த நிலைகளை மாற்றி அமைக்க
1.அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்ற இந்த உணர்வை
4.தனக்குள் மறைமுகமாகவே
தீமைகளை அகற்றும் நிலையாக உருவாக்குவது - விசிஷ்டாத்வைதம்.
ஞானிகள் உணர்வைத் தனக்குள்
சேர்த்துத் தீமை வராதபடி இந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கும் மார்க்கமாக இதை நீ வினைக்கு நாயகனாக
ஆக்கு “விநாயகா…”
1.அருள் உணர்வுகளுக்கு
நாயகனாக நீ இரு
2.அந்த உணர்வின் செயலின் எண்ணத்தை உனக்குள்
உருவாக்கு…! என்று தெளிவாக ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.
ஆகவே அந்த ஞானிகள் காட்டிய வழியில் அருள் உணர்வுகளை
நுகர்ந்தபின்… அனைவரும் நன்றாக இருக்க
வேண்டும் உலகில் வாழும் மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில்
வாழ வேண்டும் எல்லோரும் அருள் ஒளி பெற வேண்டும் அவர்களை
அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று
1.இப்படி எண்ணும்படி தான் ஆலயங்களைக் கட்டி
2.அதிலே மறைமுகமாகவே நமக்குள் பல உயர்ந்த சக்திகளைப் பெறும்படி
செய்தார்கள் ஞானிகள்.