ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 8, 2024

தீமை செய்யும் உணர்வுகளை நம் ஆன்மாவிலிருந்து “ஒரு சாணுக்கு வெளியே” தள்ளிப் பழகுதல் வேண்டும்

தீமை செய்யும் உணர்வுகளை நம் ஆன்மாவிலிருந்து “ஒரு சாணுக்கு வெளியே” தள்ளிப் பழகுதல் வேண்டும்


வேதனை வெறுப்பு கோபம் குரோதம் இவை எல்லாவற்றையும் இராமாயணத்தில் வாலியாகக் காட்டுகிறார்கள்… வலிமை மிக்க சக்தி.
 
அந்த வாலியை இராமன் என்ன செய்தான்…?
 
1.குகை மேல் இருக்கக்கூடிய பாறையை அம்பால் அடித்து அதை மூடுகின்றான்
2.வாலியினால் வெளியே வர முடியவில்லை. அவன் திறமைகளைக் காட்ட முடியவில்லை.
 
ஏனென்றால் வாலி யாரைப் பார்த்தாலும் அவருடைய வலிமையை நுகர்ந்து எல்லாவற்றையும் அடக்கி விடுவான். அவன் நிலைக்குத்தான் நாம் போக வேண்டும் என்பதற்காக அதை மாற்றிமைக்கும் நிலைக்கு” இதைச் சொல்கின்றார்கள்.
 
தெளிவாக ரூபமாக்கிக் காவியம் படைத்து இந்த உணர்வை நாம் எண்ணினால் சீதாராமா. ராமன் என்ன செய்கின்றான்…?
1.கெட்டதைப் பார்க்கவில்லை அதை மூடி விடுகின்றான்.
2.உடலில் உள்ள கெட்ட அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை அது வாடுகின்றது.
 
இதைப்போல் நாம் என்ன செய்ய வேண்டும்…?
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
1.நம் தலைக்கு மேல் இருப்பதை பாறை மாதிரி இருப்பது தான் துருவ நட்சத்திரம்
2.அந்த உணர்வை எடுத்து நினைத்து இங்கே புருவ மத்தியில் டைத்துப் பழக வேண்டும்.
 
காலையிலிருந்து நாம் எத்தனை பேரைப் பார்க்கின்றோம். எல்லாம் இந்த வழியில் தான் உள்ளே செல்ல வேண்டும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இங்கே வலுவாகச் சேர்த்துக் கொண்ட பிற்பாடு அதற்கடுத்து கண்ணின் நினைவு உடலுக்குள் செலுத்தி
1.உடலில் எத்தனை கோடி குணங்கள் உண்டோ அத்தனை குணங்களுக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.பேரொளியாக மாற வேண்டும் என்று நாம் எண்ணங்களைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
 
இதைத்தான் கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது கண்ணின் நினைவை உடலில் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் அந்த அணுக்களுக்கு உள்ளே நினைவு செலுத்தி தீமைகளை நிறுத்திப் பழகுதல் வேண்டும்.
 
அப்போது அதை மறைத்துக் கொள்கின்றது. இந்த எண்ணங்கள் வரப்படும் பொழுது உள்ளே அணுக்கள் இழுக்கக்கூடியது… அதாவது வேதனைப்படுத்துவது கோபப்படுத்துவதோ சஞ்சலப்படுத்துவது பொறாமைப்படுத்துவது என்னை இப்படி பேசினானே என்ற எண்ணங்கள் கொண்ட உணர்வின் அணுக்களை நிறுத்தி விடுகின்றோம்.
 
அருள் உணர்வைக் கூட்டக் கூட்ட அது வலுப் பெறுகிறது.
1.உயிர் வழி தான் எல்லாமே உள்ளே செல்ல வேண்டும்
2.ஆனால் அங்கே துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் போட்டு நாம் அடைத்து விடுகின்றோம்.
3.இந்த உணர்வை வலுப்படுத்துகின்றோம்… அது வலுவான பிற்பாடு மற்றதைத் தள்ளி விட்டு விடுகின்றது.
 
வேப்பமரம் பக்கம் ரோஜாப்பூ மம் சென்றால் விடுமா…? ரோஜாச் செடியின் அருகிலே வேப்பமரம் ணம் சென்றால் விடுமா…?
 
இதைப் போன்று அருள் உணர்வின் வலிமையை நாம் அதிகமாக்கிக் கொள்கின்றோம். அந்த அருள் சக்திகளை நம் உடலுக்குள் சேர்த்தவுடனே இங்கே அடைத்து விடுகின்றோம்.
 
உடலில் உள்ள தீமை செய்யும் அணுக்களுக்குச் சாப்பாடு இல்லை.
1.இந்த உணர்வின் வலுத்தன்மை ஆகி அழுத்தமான பின் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளி வருகிறது.
2.தள்ளும் போது ஒரு சாணுக்கு மேலே ஆன்மாவிலிருந்து விலக்கி விட்டால் சூரியன் இழுத்துக் கொண்டு சென்று விடுகிறது.
3.நம் ஆன்மா தூய்மையாகின்றது.
 
இந்த பழக்கத்தை நாம் ஒவ்வொருவரும் கொண்டு வருதல் வேண்டும்.