ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 29, 2026

சும்மா… திரும்பத் திரும்பச் சொல்வது தான் என் வேலை என்று எண்ணுவார்கள்

சும்மா… திரும்பத் திரும்பச் சொல்வது தான் என் வேலை என்று எண்ணுவார்கள்


காலையில் எழுந்தவுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவணுக்கள். ஜீவான்மாக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணுங்கள்.
 
யாம் இதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகிறோம் என்று நீங்கள் எண்ண வேண்டியதில்லை. யாம் உபதேசிப்பதைக் கேட்டு விட்டு இப்போது சாமி என்ன சொன்னார்…? என்று திரும்பக் கேட்டால் தலையைச் சொறிவீர்கள்.
 
1.ஆனால் நான் திரும்பச் சொன்னால்… அப்பொழுது சொன்னதைத்தான் திரும்பச் சொல்கின்றார்.
2.சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது தான் இவர் வேலை போலிருக்கிறது என்பீர்கள்.
 
இராமாயணத்தைச் சொல்லிக் கொண்டே வருவார்கள். எத்தனையோ காலம் காலமாகச் சொன்னாலும் அதிலே மாற்றி ஏதாவது சொல்கின்றார்களா…? இல்லை.
 
இராமாயணத்தைத் திரும்பத் திரும்பப் படித்து அல்லது கேட்டுத் தெரிந்து கொள்கின்றோம். யாம் திரும்பத் திரும்ப உங்களுக்கு உபதேசித்தால் தான் அந்த அணுக்களின் பெருக்கமாக ஆகும்.
 
நூறு தரம் மற்றதைச் சொல்லிவிட்டு இரண்டு தரம் இதைச் சொல்லும் பொழுது இது மறைந்து விடுகின்றது.
1.அவன் இப்படிச் செய்தான்…. குடும்பத்தில் இப்படி ஆனது தொழில் நஷ்டம் ஆனது என்று நூறு தடவை வேதனையுடன் சொல்கின்றீர்கள்.
2.நல்லதை ஒரு தரம் சொன்னால் அது அழிந்து விடுமே…. பின் எங்கிருந்து அது மாறுவது…?
 
அதனால் தான் உங்களுக்குள் இதைத் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தி நல்ல சக்திகளைப் பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றோம். அழுக்குத் தண்ணீரில் நல்ல நீரை ஊற்ற ஊற்றத்தான் அது தெளிவாகிக் கொண்டு வரும்.
 
1.எத்தனையோ சங்கட உணவுகள் கொண்டு நாம் வாழும் நிலையில்
2.மீண்டும் மீண்டும் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்திகளை உங்களுக்குள் செலுத்தத் செலுத்தத் தான் அந்த உணர்வின் வலிமை பெறுவீர்கள்.
3.அப்படி நீங்கள் வலுப்பெற வேண்டும் உங்களுக்குள் அதை வலுப்பெறச் செய்ய வேண்டும் என்பதற்குதான்
4.திரும்பத் திரும்ப உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
 
ஆகவே நாம் இந்த வாழ்க்கையில் யார் யாரையெல்லாம் பார்த்தோமோ அவர்கள் குடும்பம் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியால் எல்லா நலமும் எல்லா வளமும் பெற வேண்டும்.
 
என்னிடம் கஷ்டம் என்று சொன்ன குடும்பங்கள் எல்லாம் மகிழ்ந்து வாழ வேண்டும். அவர்கள் கஷ்டங்கள் நீங்க வேண்டும். அவர்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும்.
 
அவர்கள் நன்றாக ஆக வேண்டும் என்று இப்படி நாம் எண்ணும் பொழுது இது நமக்கு முன்னாடி வந்து விடுகின்றது. அந்த உணர்வு என்னுடன் சேர்த்துத் தான் வாழ்கின்றது. அவர்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது எனக்குள் அது நலமாகின்றது.
 
1.ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று
2.எல்லா உணர்வுகளுக்கும் திரும்பத் திரும்பச் சேர்க்கும் ஒரு பழக்கம் நம்மிடம் வர வேண்டும்