துருவன் துருவ மகரிஷி துருவ நட்சத்திரம் அனைத்துமே அகஸ்தியன் தான்…!
விஞ்ஞான அறிவால் வரப்படும் பொழுது மதத்தின் நிலைகள் கொண்டு தன்
இனத்தையே அழித்துவிடும் உணர்வுகள் மனிதனுக்குள்
விளைந்து விளைந்து
1.இன்று மனிதனின் உணர்வின் நினைவுகள் இழந்து
2.மனித உணர்வே இல்லாது
அழியும் தருணம் வந்து கொண்டிருக்கின்றது.
மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவால் தன் உணர்வின் தன்மை ஒளியாக
மாற்றி இந்த விண்ணுலகில் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் பெற்றவர்கள் சப்தரிஷிகள்… “சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்…”
விண்ணிலே தோன்றிய உயிர் பூமிக்குள் விஜயம் செய்து
தன் உணர்வின் தன்மை உயிரைப் போன்று உணர்வினை ஒளியாக மாற்றி
உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக இன்றும் திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.
முதல் துருவ மகரிஷி துருவனாக இருந்தாலும் அது துருவ நட்சத்திரமாகி இன்றும் சுழன்று கொண்டிருக்கும் “இந்த வேளை…”
எப்படி நாகம் தன்னுடைய நஞ்சை மற்ற உயிரினங்களின் மீது பாய்ச்சி அவைகளை உணவாக
எடுத்தாலும் அந்த உணர்வின் சத்து தனக்குள் விளைந்து விளைந்து
“அந்த நஞ்சே வைரமாக விளைகின்றது..”
இதைப் போல அகஸ்தியன் துருவ நட்சத்திரமாகி துருவத்தின் எல்லையை அடைந்து துருவ நட்சத்திரம்
ஆகும்பொழுது
1.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக அவன் ஆனாலும்
2.உலகிலேயே நஞ்சைத் தனக்குள் உள்ளடக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும்
3.மிக சக்தி வாய்ந்த நட்சத்திரமாக அங்கே அமைந்து
விட்டது… அகஸ்தியன் தான்…!
4.அவனைத் துருவ மகரிஷி துருவன் என்றும்
சொல்வார்கள்.
ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலை அடைந்தவர்கள் சப்தரிஷி… சிருஷ்டித்துக் கொண்ட ரிஷியின் தன்மை அடைகின்றது.
அதனின்றி விளைந்த உணர்வுகள் நம் பூமியிலே படர்ந்து
கொண்டிருப்பதை
1.”எவரெவர் அவர்கள் அணுகி
அதை நுகர்கின்றார்களோ”
2.இந்த உணர்வின் தன்மை கொண்டு உடலில் உள்ள உணர்வுகளைப் பிளந்து ஒளியின் சிகரமாக
மாற்றிக் கொண்டார்கள்.
3.உயிருடன் ஒன்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டும்
உள்ளார்கள்.
4.அது நமக்கு முன் பரவிக் கொண்டுதான் உள்ளது
அனுதினமும்.
இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சொல்கின்றேன். ஆகவே நாம் அடைய வேண்டிய எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம்
தான்.