ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 6, 2024

வேடிக்கையாகப் பார்த்தாலும்… சாப அலைகள் என்பது சாதாரணமானதல்ல

வேடிக்கையாகப் பார்த்தாலும்… சாப அலைகள் என்பது சாதாரணமானதல்ல

வேடிக்கையாகப் பார்த்தாலும்… சாப அலைகள் என்பது சாதாரணமானதல்ல
 
உதாரணமாக எல்லோருடனும் நாம் பழகுகின்றோம். ரொம்ப நெருங்கி ஒருவருக்கு உதவி செய்கின்றோம் அவர் குடும்பத்தில் கடுமையான சிக்கல்கள் வருகின்றது என்ன வாழ்க்கை…? என்று தற்கொலை செய்து கொள்கிறார்.
 
இந்தக் குடும்பம் எனக்கு இப்படிச் செய்தது… அது ருப்படுமா…? என்று இந்தச் சொல்களைச் சொல்கிறார். இந்த உணர்வலைகள் அவர்கள் உடலில் சாப அலைகளாக மாறுகின்றது.
 
எப்படி எல்லாம் இந்தக் குடும்பம் நாசமாக வேண்டும் என்று சொன்னாரோ… அந்த உணர்வுகள் எல்லாம் ங்கே பதிவாகி அந்தக் குடும்பத்தைச் சீரழிக்கின்றது.
 
இது போன்று சாப அலைகள் பட்ட குடும்பங்களை எல்லாம் பார்க்கலாம்
1.அதிகம் சம்பாதிப்பார்கள் கடைசியில் ஒன்றுமே இருக்காது
2.எதை எடுத்தாலும் எங்கே சென்றாலும் முட்டுக்கட்டையாக இருக்கும் பல தொல்லைகளை அனுபவிப்பார்கள்.
 
ஒருவர் சாப அலைகளைச் சொல்லப்படும் போது “குடும்பம் நாசமாக வேண்டும்” என்று சொல்வதை நாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் கூட அதை நுகர்கின்றோம்.
 
இப்படிச் சொல்கின்றார் என்று எண்ணும் பொழுது அதே சாப லை நமக்குள் அணுவாகி அவன் சொன்ன முறைப்படி நம் உடலிலே தவறுகளாகி நமக்குள்ளும் பகைகள் வரும் சும்மா பார்த்தாலும் கூட…”
 
ஒரு சாக்கடைத் தண்ணீரை அள்ளி வீசுகின்றார்கள்
1.அருகிலே நல்லவர் இருந்தாலும் அந்தச் சாக்கடை படாமல் இருக்குமா…?
2.கெட்டவன் மீது அள்ளி ற்றினாலும் அருகிலே நல்லவன் இருந்தால் அவன் மீதும் படத்தான் செய்யும்
3.இவன் உடலிலும் நாற்றம் ஆகும் அவன் உடலிலும் நாற்றம் ஆகும்.
4.சாக்கடை நல்லவன் என்று பார்க்குமா…? இல்லை…!
 
இந்தச் சாக்கடையைத் துடைக்கவில்லை என்றால் நாற்றம் இருக்கத்தானே செய்யும். இதைப் போன்று தான் நாம் நல்லவர்களாக இருந்து ஒருவன் சாபம் இடுவதை வேடிக்கையாகப் பார்த்தாலும் நாம் நுகர்ந்த உணர்வு நமக்குள் பதிவாகி உள்ளது.
 
அவன் சாபம் இடுகின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம் இந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் சுழலத் தொடங்குகிறது நம் ரத்தங்களில் தேங்கி விடுகின்றது.
 
பின் அந்தச் சாப அலைகள் அவன் ஒவ்வொரு நிமிடம் எப்படி கெட்டுப் போக வேண்டும் என்று சொன்ன உணர்ச்சிகள் அந்த எண்ணம் தோன்றுகின்றது.
1.யாரைப் பார்த்தாலும் “நீ நாசமாகப் போ என்று நாமும் சொல்ல ஆரம்பிப்போம்
2.தொலைந்து போவனே என்று சொல்லும்படி வரும் நாசமாக போகட்டும் என்ற அந்த உணர்வுகளை ட்டி
3.அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி நம்மையும் அறியாமலேயே சாப அலைகள் வேலை செய்ய ஆரம்பிக்கும்.
 
தெரிகின்றது நமக்கு கோபப்படுகின்றோம் சாபம் விடுகின்றோம் அவன் சாபம் விட்டான் என்று. நாமும் சாபம் டுவோம் ஏன் இந்த மாதிரிச் சொல்கின்றாய்…? என்று நம்மைக் கேட்டால் உனக்கு என்ன தெரியும்…? அவன் செய்வது அப்படி…! என்று நம்மிடம் நல்லதைச் சொல்பவரிடமும் நாம் வம்புக்குத் தான் செல்வோம்.
 
ஏனென்றால் ந்த உணர்வு தான் நம்மை இயக்குகிறது என்று தெரிகின்றது அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்பதைத்தான் குரு வழியில் உங்களுக்குத் தொடர்ந்து உபதேசித்துக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).
 
இப்படி நமது வாழ்க்கையில் அந்தச் சாப அலைகள் ஆனாலும் அந்த உணர்வுகள் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்குகின்றது தேடிய செல்வத்தையும் பாதுகாக்க முடியவில்லை.
 
கல்வி கற்று விஞ்ஞானத்தில் வளர்ச்சி அடைந்து எல்லாம் வளர்ச்சி இருக்கலாம் புதுப்புது பொருள்களையும் கண்டுபிடிக்கலாம் செல்வத்தை அதிகமாகத் தேடக்கூடிய அந்தச் சக்தியும் ருக்கலாம்.
 
ஆனால் சாபம் இடுவோரைப் நல்ல குணம் கொண்டு பார்த்தபின் அந்த சாப அலையின் உணர்ச்சிகள் நல்ல அணுக்களில் சேர்ந்த பின் இதுவும் அந்த வேலையைச் செய்ய ஆரம்பிக்கும்.
 
1.நாம் தேடிய செல்வத்தையும் அடுத்து பார்க்க முடியாது
2.யாரோ ஏதோ செய்து விட்டார்கள் நாம் வளர்ந்து வருவது பொறுக்க முடியாமல் ஏதோ செய்து விட்டார்கள்
3.பொறாமையில் எனக்குச் செய்து விட்டார்கள் என்று தான் இந்த உணர்வுகள் அந்தச் சாப அலைக்கு ஜீவன் ட்டி
4.நமக்குள் அந்தச் சாபத்தையும் நிறைவேற்றியே கொடுக்கின்றோம். என்று வைத்துக் கொள்ளலாம்.
 
உதாரணமாக மிளகாய் நெடி எந்தப் பொருளிலே பட்டாலும் அதனின் உணர்ச்சியை ஊட்டத்தான் செய்யும். ஒரு விஷம் எதிலே பட்டாலும் அதனுடைய உணர்வின் இயக்கத்திற்குத் தான் மாற்றும்.
 
அதைப் போன்று நம் உடலில் இத்தகை உணர்வுகள் மாறுகின்றது.. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?
 
எத்தனையோ கோடிச் சரீரங்களில் பல இம்சைகள் பட்டுத் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்துத்தான் மனிதனாக வந்திருக்கின்றோம். பல உயிரினங்கள் இன்று எத்தனையோ இம்சைகள் படுவதைப் பார்க்கின்றோம் அல்லவா.
 
ஆக… பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நாம்
1.அருள் ஞானிகள் உணர்வை எடுத்து இனி வரக்கூடிய எத்தகைய தீமையிலிருந்தும் தப்பும் நிலையாக
2.அதை நமக்குள் பெருக்கிப் பெருக்கி இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலையை அடைதல் வேண்டும்.
 
அதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றேன்.