ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 28, 2026

உங்கள் விலா எலும்புக்குள் இருக்கும் ஊனில் பதிவாக்க வேண்டிய முக்கியமான சக்தி

உங்கள் விலா எலும்புக்குள் இருக்கும் ஊனில் பதிவாக்க வேண்டிய முக்கியமான சக்தி


அகஸ்தியன் தாய் கருவிலே சிசுவாக இருக்கப்படும் பொழுது பல விஷத்தன்மையான மிருகங்களிடமிருந்தும் உயிரினங்களிடமிருந்தும் தப்பித்துக் கொள்ள பல மூலிகைகளைப் பரப்பி வைத்து யானை பாம்பு தேள் இவைகள் வராதபடி அந்த மணத்தால் காத்துக் கொண்டவர்கள். இந்த மணத்தைக் கண்டால் அந்த மிருகங்கள் அஞ்சி ஓடிவிடும்.
 
1.இப்படிப் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு புலனறிவால் தாவர இன்ங்கள் ஒவ்வொன்றின் இயக்கத்தை அவைகளின் மணத்தை அறிந்து…  
2,மிருகங்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள குகைகளில் அதைப் பரப்பி வைத்துக் கொள்வார்கள்.
 
மரத்திலே செடிகளிலே விழுதுகள் உண்டு. அந்த விழுதுகளை வைத்தால் அது இழுக்கும்… இழுத்து அந்த மணத்தை வீசும் தன்மை வருகின்றது. பாம்பிடம் ஒரு வேரைக் காட்டினால் அது படம் எடுப்பது நின்று விடுகின்றது. ஒரு வேரைக் காட்டினால் யானை விலகிச் செல்கின்றது… யானை மிரட்டி என்று சொல்வார்கள்.
 
இந்த மாதிரி விழுதுகளை அகஸ்தியனுடைய தாய் தந்தையர் அவர்கள் உறங்கும் குகை முன்பு போட்ட பின் அந்த மணங்களை இழுக்கும்.
1.செடி இழுப்பது போன்று அது இழுத்து அந்த அலைகளை மாற்றிக் கொண்டிருக்கும்.
2.அந்தக் குகை வாசலிலே இதைப் போட்ட பின் உயிரினங்களோ மிருகங்களோ ஒன்றும் தாக்குவதில்லை… நிம்மதியாகத் தூங்குகின்றார்கள்.
 
இதையெல்லாம் உணர்த்துவதற்காக குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று காட்டுகின்றார். ஒரு கரடி இருக்கக்கூடிய இடத்திற்கு அழைத்துச் செல்கின்றார். இரவிலே அங்கே என்னைப் படுக்க வைத்து விட்டுச் சென்று விட்டார்.
 
குருநாதர் என் உடலிலே எனக்குத் தெரியாமலே அந்த வேரைக் கட்டி வைத்திருக்கின்றார். அது என்ன வேர்…? என்று எனக்குத் தெரியாது. உனக்குப் பந்தோபஸ்தாக இருக்கும் என்று சொல்லி ஏன் இடுப்பிலே அதைக் கட்டினார்.
 
காட்டிற்குள் நடந்து வந்த களைப்பினால் அந்தப் பாறையில் படுத்துத் தூங்கி விட்டேன். இருட்டு நேரம். அது பெரிய பாறையாக இருக்கின்றது குருநாதர் சென்று விட்டார்.
 
தூங்கி எழுந்து பார்க்கிறேன். உர் உர் என்று சப்தத்துடன் கரடி உறுமிக் கொண்டு வருகின்றது. பார்த்தவுடனே சரி… வசமாகச் சிக்கிக் கொண்டோம்…! என்று நினைத்தேன்.
 
ஆனால் வெகு தூரத்தில் இருந்து தன் இட்த்திற்கு வருகின்றது. பக்கத்தில் உறுமல் சத்தத்துடன் வந்து “ஹும்ம்..” என்று சப்தமிட்டு வேறு பக்கம் திரும்பி ஓடி விடுகின்றது. ஊறுமிக் கொண்டே வந்தது வாசனையைக் கண்டவுடன் திரும்பி ஓடுகின்றது.
 
விடிந்தவுடன் குருநாதர் வருகின்றார் நான் ஒரு அவசர ஜோலியாகப் போனேன்டா என்று சொன்னார். இரவு நன்றாகத் தூங்கினாயா…? என்று கேட்டார்.
 
தூங்கினேன்… கரடிச் சத்தம் கேட்டு முழித்துக் கொண்டேன் என்றேன். அப்பொழுது சொல்கின்றார்.. இந்தப் பாறைக்குக் கீழ் தான் கரடி கூடு கட்டியிருக்கின்றது. அதனால் தான் இங்கே வந்தது. உன் மணத்தைக் கண்டவுடன் ஓடி விட்டது என்றார்.
 
என் மேலே என்ன இருக்கிறது…? என்று கேட்டேன்.
 
உன் உடலில் கட்டியிருக்கும் வேர் தான் அந்த வேலையைச் செய்கிறது என்று குருநாதர் சொல்கின்றார்.
1.அந்த வேருக்கு எப்படி அந்தச் சக்தி வந்தது என்றெல்லாம் விளக்கம் கொடுக்கின்றார்.
2.இந்தச் செடிக்கு எப்படிச் சக்தி வந்தது…? இந்தச் செடிக்கு எப்படிச் சக்தி வந்தது…?
3.செடி எப்படி எல்லாம் உருவானது…? எது எது கலவையானது…?
4.அந்தக் கலவையானதற்குச் சந்தர்ப்பம் என்ன…? என்று அதையெல்லாம் கதையாகச் சொல்லிக் கொண்டே வருகின்றார்.
 
அதே மாதிரித்தான் உங்களிடம் நான் கதையாகச் சொல்கின்றேன். இதையெல்லாம் அறிந்து உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்கும் திறன் நீங்கள் பெற வேண்டும்.
 
1.குருநாதர் என்னிடம் சொன்னது போன்று உங்களிடமும் சொல்லிக் கொண்டு வருகின்றேன்..
2.இந்த ஞாபகம் இருந்தால் சாமி சொன்னார் என்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் டக் என்று அந்த மன வலிமை வரும்.
 
துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெற வேண்டும் என்று உள்ளே செலுத்தினால் அது வலுவாகின்றது.
 
அந்தச் சங்கடமான உணர்வு உடலுக்குள் செல்லும் முன் அதைத் தடைப்படுத்துகின்றது. சிறிது நேரத்தில் உங்களுக்குச் சிந்திக்கும் சக்தி வருகின்றது.. எதனால் நாம் சங்கடப்படுகின்றோம்…? எப்படி அதைச் சமாளிப்பது…? என்ற யுக்தி வரும்.
 
துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும்… நாங்கள் பார்க்கும் அனைவருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் அந்த மன பலம் வரும்.
 
இந்த உணர்வுகளை மற்றவர்களுக்கும் சொல்லும் பொழுது நமக்கு அவர்கள் ஒத்துழைப்புத் தருவார்கள். அனுபவத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
 
1.நெருக்கடியாக வரும் சந்தர்ப்பங்களில் இதைப் போன்று நீங்கள் செய்து பழகினீர்கள் என்றால்
2.உடனே உங்கள் எண்ணம் இந்த வேலையைச் செய்யும்… அப்போது அது நல்ல நேரமாகின்றது.
 
சங்கடமான நிலை வரும்போது அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டால் அது நல்ல நேரமாக மாறுகின்றது.
 
ஆனால் சங்கடத்தை எண்ணிக் கொண்டிருந்தால் அது கெட்ட நேரமாகின்றது எப்படிச் சமாளிப்பது…? கடன் கொடுத்தவர் கேட்டால் என்ன சொல்வது…? கேட்பார்களே…? நாளைக்கு உணவுக்கு என்ன செய்வது…? பிள்ளை கேட்ட பொருளை எப்படி வாங்கிக் கொடுப்பது…? என்று இந்தச் சங்கடங்களை எல்லாம் எண்ணினால் அந்தக் குழந்தைக்கு ஏதாவது இடைஞ்சலாகிவிடும். நடந்து செல்லும் போது கீழே விழுந்து விடுவான்.
 
நம் நேரமே மோசமாகிவிட்டது.. பிள்ளையும் கீழே விழுந்துவிட்டான் காலில் அடிபட்டது கை பிசகி விட்டது என்றெல்லாம் நாம் சொல்வோம்.
 
இந்த உணர்வுக: குடும்பத்தில் எப்படி எல்லாம் வேலை செய்கிறது…? என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். அந்த நல்ல நேரத்தை உருவாக்குவதற்கும் நல்ல சந்தர்ப்பத்தை உண்டாக்குவதற்கும் தான் இத்தனையும் சொல்கிறேன்.
 
ஏனென்றால் கஷ்டப்பட்டுத் தெரிந்து கொண்டது. குருநாதர் கொடுத்த அந்தச் சக்திகளை உங்களிடம் பாய்ச்சுகிறேன்.
 
காற்றில் இருக்கும் விஷத் தன்மைகளிலிருந்து அந்த அருள் ஞானிகள் உணர்வை நுகர்ந்து உங்கள் கஷ்டத்தை மாற்றும் நல்ல நேரத்தை உங்களிடம் கொண்டு வர வேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்கின்றேன்.
 
தீமையை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெற வேண்டும் என்பதற்குத் தான் உங்களிடம் இதைப் பதிவு செய்கின்றேன்.
 
1.விலா எலும்பிலே இந்த மேக்னெட் சிறிதளவு தான் அது இருக்கின்றது.
2.பல கோடி உணர்வுகளைப் பதிவாக்கும் சக்தி அதற்கு உண்டு.
3.கூர்ந்து கவனித்துப் பதிவாக்கி… எப்படியும் சாமி சொல்வதைப் பெற வேண்டும்.
4.அதன் வழி என் வாழ்க்கையைச் சீர்படுத்த வேண்டும்.
5.என் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்
6.அந்த அருள் வழியில் வாழ்க்கை நடத்தும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து பாருங்கள்.
7.உங்கள் மனது… அது எவ்வளவு பெரிய மனதாக மாறும்…? என்பதை நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்வீர்கள்.
 
ஆகவே வாழ்க்கையில் எத்தகைய சங்கடங்கள் வந்தாலும் அதற்கு இடம் கொடுக்காதீர்கள். அது கெட்ட நேரமாக ஆகிவிடும்.
 
உடனே ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி அந்த வலுவை ஏற்றுங்கள். அது நல்ல நேரமாக மாறுகின்றது.