ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 5, 2024

அக்கினியில் இறங்குவதல்ல… துருவ நட்சத்திரத்தின் உணர்வுக்குள் நாம் இறங்க வேண்டும்

அக்கினியில் இறங்குவதல்ல… துருவ நட்சத்திரத்தின் உணர்வுக்குள் நாம் இறங்க வேண்டும்


மாரியம்மன் கோவிலில் அக்கினி குண்டம் இறங்கும்படி வைத்திருப்பார்கள்.
1.ஒருவருக்கொருவர் வேதனைப்படுவோரை நாம் பார்த்தால்
2.அந்த வேதனை மா(றி)ரி நமக்குள் தாயாக வந்து நோயாக அது வராதபடி நாம் தடுத்தல் வேண்டும்.
 
அவர்களைப் பார்த்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?
 
ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் (நோயாளிகளைப் பார்த்தால்).
 
சுத்தப்படுத்தவில்லை என்றால் அவருடைய வேதனை உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து நல்ல அணுக்களுடன் இணைந்து விடுகின்றது
 
தேள் கொட்டுகின்ற மாதிரி அல்லது குளவி கொட்டி புழு உருமாறுகிற மாதிரி... விஷத்தின் தன்மை வரும்போது அவர்கள் உடல் நலிகின்றது… அதனால் தான் நோயுடன் இருக்கின்றார்கள்.
1.ஆனால் அதே விஷம் நம் உடலில் பட்டபின் நல்ல அணுக்கள் சுருங்கி விடுகின்றது
2.நம் உடலில் அதற்குப் பின் அழகு இருக்குமா…? நாமும் அந்த வேதனையைச் தான் சொல்வோம்.
 
அதற்காக வேண்டி ஒவ்வொரு ஊருக்கு மத்தியிலும் மாரியம்மன் ஆலயத்தை வைத்திருப்பார்கள்.
 
வேதனை வந்துவிட்டால் உடனே ஈஸ்வரா என்று உயிரை வேண்டி அந்த ஞானிகள் காட்டி அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் டர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்த வேண்டும்
 
இப்படி நுர்ந்த உணர்வு என்ன செய்கின்றது…?
 
ராமாயணத்தில் அது தான் வாலியை ராமன் மறைந்திருந்து தாக்கினான் என்று காட்டுவார்கள். ஏனென்றால் அந்த வேதனையான உணர்வுகள் என்பது அது வாலி.
 
இராமன் வாலியை நேர்முகமாகப் பார்த்தானா…? இல்லை…! அந்த வாலி வெளியே வர முடியாதபடி மேலே இருக்கும் பாறையைத் தள்ளிக் குகையை மூடி விட்டான்.
1.பாறையாக இருப்பது யார்…?
2.துருவ நட்சத்திரம்…!
 
எப்போது வேதனைப்படும் உணர்வுகளை நுகர்கின்றோமோ உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ த்தியில் இழுத்துக் கொண்டு வந்து விட்டோம் என்றால் அவர்கள் பட்ட வேதனை உள்ளுக்குள் செல்லாதபடி இங்கே நிறுத்தப்படுகின்றது.
 
நிறுத்திய பின் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணிவிட்டு அடுத்தாற்போல் அந்த அருள் சக்தி அந்த நோயாளி பெற வேண்டும் அவர் உடல் நோய் நீங்க வேண்டும் அவர் உடல் நலமாக வேண்டும் என்று நாம் நுர்ந்த வேதனையை நிறுத்திவிட்டு அருள் உணர்வுகளை உருவாக்குதல் வேண்டும்.
 
அவர் உடல் நலமாக வேண்டும் என்று நினைத்து எண்ணினால் நாம் நுகர்வது எதுவோம் நமச்சிவாய…! அது பிரணவமாகி நம் உடலாக மாற்றுகின்றது.
 
ஏனென்றால் அந்த அந்த நோய் நமக்குள் வரக்கூடாது.
 
இதை நிறுத்திவிட்டு துருவ நட்சத்திரத்தின் சக்தி அந்த நோயாளி பெற வேண்டும் என்று எண்ணினால் நோயை நீக்கிவிடும்.
 
1.தீமைகளை வேக வைக்கக்கூடிய (அக்கினி) துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதில் நாம் இறங்கினோம் என்றால்
2.தனின் பால் நாம் நினைவைக் கொண்டு சென்றால் அந்தத் தீமை நமக்குள் வராது என்று
3.அக்கினி குண்டத்தை மாரியம்மன் கோவிலில் அமைத்துள்ளார்கள்.
4.அக்கினியில் இறங்குவதல்ல… துருவ நட்சத்திரத்தின் உணர்வுக்குள் நாம் இறங்க வேண்டும்.