ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 22, 2024

“சித்தர்களும் மகரிஷிகளும்” நம்மைப் பக்குவப்படுத்தி வழி நடத்துவார்கள்

“சித்தர்களும் மகரிஷிகளும்” நம்மைப் பக்குவப்படுத்தி வழி நடத்துவார்கள்


ஆத்மாவின் செயல் உணர்ந்தீர்களா…?
 
எங்களின் பதில்: தியானத்தில் அமர்ந்து எங்களுக்கு வழிகாட்டிய ஞானகுரு வேணுகோபால சுவாமிகள் உபதேச நிலைக்கொப்ப அத்தொடரில் அவர் காட்டிய எல்லா நிலைகளையும் அறியாவிட்டாலும் சில உண்மைகளைச் செயலாலும் ஞானத்தாலும் அறியும் வழி பெற்றோம்.
 
1.இந்த மார்க்கத்தில் தொடர்பு கொண்ட பல ஆத்மாக்கள் தன்னைத்தான் உணர்ந்து தன் வழியில் பல உண்மைகளை அறிந்ததையும் கண்டோம்.
2.இச்சரீர பிம்பம் மயங்கிய நிலையோ தன்னைத்தான் மறந்து செயல்படும் முறையன்றி இத்தியானத்தால் அடைந்த உண்மை நிலைகள் பல உண்டு.
 
அல்லி மலர் காலை உதயசூரியனைக் கண்டவுடன் மலர்ந்து சூரிய ஒளி மறைந்தவுடன் கூம்பிவிடுகின்றது. இன்னும் சில மலர்கள் சூரிய ஒளியின் அலைபாயும் இடத்தில் எல்லாம் அதன் மலர் முகம் காட்டி மலர்ந்து அதன் ஒளி திக்கிலேயே அதன் ஈர்ப்பும் திரும்பிய நிலையில் வாடி விடுகின்றது.
 
இவையெல்லாம் இயற்கை என்கின்றான் மனிதன். எல்லா சக்தியைக் காட்டிலும் இனி தன் செயற்கைக்கு உதவப் போவது சூரியசக்தி தான் என்ற உண்மை வழியைச் செயற்கைக்கு பாழ்படுத்தும் மனிதன்
1.அடுப்பான இப்பூமியில் பாத்திரமான இச்சரீரத்தில் ஒளியான ஜீவ சக்தி தரவல்ல சூரிய சக்தியைப் போட்டு
2.இவன் சமைக்கும் சுவையில் எச்சுவையையும் பெறவல்ல சக்தி இச்சரீர ஜீவனில் உள்ளதை மனிதன் அறியவில்லை.
 
இயந்திரத்தின் துணை கொண்டு சூரிய அலையைச் சில உலோகங்களின் தொடர்பைக் கொண்டு சக்தி பெறும் மனிதன் இவ்வெண்ணத்தின் ஆற்றலைக் கொண்டு எதனையும் செயல்படுத்தக்கூடிய செயல் தெய்வமாய்
1.தன்னுள் உள்ள ஆத்ம சக்தியைச் செயல்படுத்தி
2.இவ்வாத்மாவின் தொடர்பலையால் எவ்வலையையும் அதன் தொடர்பு கொண்டு
3.தொடர்புப்படுத்தி செயலாக்கக்கூடிய ஆற்றல் இவ்வாத்ம ஞானத்திற்கு உண்டு.
 
இவ்வுடலின் செயலுக்கொப்ப இவ்வெண்ண ஈர்ப்பு செல்லும் முறையைச் சிறிது மாற்றி
1.இவ்வுடலை இயக்கும் ஆத்மாவை இவ்வெண்ணத்தில் நாம் செலுத்தும் ஞானத்தால்
2.இச்சரீர இயக்க ஆத்மாவையே இது நாள் வரை உணர்த்திய ஞான உபதேசத்தின் தியான வலுவால்
3.இவ்வாத்மாவை சக்தி வாய்ந்த ரிஷிகளின் ஆத்மாவுடன் தொடர்புபடுத்தி
4.அவர்கள் பெற்ற சக்தி நிலையை நாமும் பெறவல்லை இயக்க நிலையை இம்மனித ஞானத்தால் செயல்படுத்துங்கள்.
 
இச்சரீரக்கூடு ஜீவத்துடிப்புடன் இருந்தால்தான் இவ் இயக்கத்தின் காந்த மின் அலையின் வளர்ப்பைக் கொண்டு ஆத்மபலத்தை நாம் பெருக்க முடியும்.
 
ஆத்ம பலம் பெற்ற நிலையில் வேறு ஒரு ஈர்ப்புப்பிடிக்கு நாம் சிக்காமலும் இக்காற்றுடன் கலந்துள்ள பல கோடி நிலைகளில் நம் சரீர சுவாச ஈர்ப்பிற்கு எவ்வலையும் உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாவானாலும் சரி... உடலுடன் உள்ளவர்களின் எண்ண அலைகள் ஆனாலும் சரிஇவ் ஈர்ப்பு வட்டத்தில் சிக்காமல்
1.எப்படி எரியும் நெருப்பில் எது போட்டாலும் அதுவும் பஸ்பம் ஆகி விடுவதைப் போல்
2.இச்சரீர இயக்கத்தால் நாம் பெற்ற ஆத்ம பலம் கூடக் கூட இவ்வாத்மாவின் வலுவை நாம் தனித்து காண முடியும்…
 
வலுப்பெற்ற ஆத்மாவை நாம் உள்ள இடத்திலிருந்தே எங்கும் அனுப்பி எதனையும் அறிந்து வரச் செயல்படுத்த முடியும். தன்னைத்தான் உணர்ந்து தன்னுள் உள்ள இறைவனான ஆத்மாவை அறியவல்ல செயல்தான் சித்து வழியில் முதல் சித்து…
 
ஆத்ம பலம் பெற்று வேறு ஒரு ஈர்ப்பலைக்கு இவ்வாத்மா செல்லாத வலுவாக நம் எண்ண ஞானம் வளர்ந்திருக்க வேண்டும்.
 
வாழ்க்கை பந்தத்தில் சுவைக்கும் மற்ற பொருள் நிலை எவற்றிற்கும் இவ்வெண்ணமானது பேராசைக்கோ ஏக்கத்திற்கோ சஞ்சல சலிப்பு நிலைக்கோ செல்லும் வழிமுறை சிறிது இருந்தாலும் இவ்வாத்மாவின் செயல் தனித்து தன்னிச்சைக்கு இயங்க இச்சரீர பிம்பத்தின் உணர்வில் செயல் நிலை தடைப்படும்…
 
ஞானத்தின் வளர்ச்சியானது எவ் ஈர்ப்பலையின் பிடியிலும் இவ்வெண்ண செயலின் உணர்வு நிலை செயல் கொள்ளும் பக்குவம் கொண்டுதான் இவ்வாத்ம பலம் கூடியுள்ள தருணத்தில்
1.நாம் ஜெபித்த தியானித்த சித்தர்களின் வளர்ந்த ரிஷிகளின் தொடர்பு வட்ட அலை ஈர்ப்பு
2.நம் ஆத்ம வலு வளர்ந்த வளர்ப்பின் பதம் பார்த்து நம்மை வழி நடத்துவார்கள்.
 
ஆத்ம வலுவை மட்டும் இச்சரீர பிம்ப வாழ்க்கையில் இருந்து தான் இந்த ஞானத்தால் வளர்ச்சியுறச் செய்ய முடியும். ஆத்ம பலம் பெற்ற ஞானத்தால் இவ்வாத்மாவின் பலம் கொண்டே இச்சித்துத் தொடரின் செயல் சித்துக்களை இவ்வாத்மாவினால் தான் வளர்த்துக் காட்ட முடியும்.
 
முதல் சித்தான ஆதம் பலம் பெற இச்சரீர பிம்ப இயக்கம் இருந்தால் தான் பெற முடியும். இச்சரீர பிம்ப எண்ணத்தின் அறியும் ஞானத்தைக் கொண்டு ஆத்ம பலத்தால் சித்து நிலைத் தொடர் யாவையும் நாம் பெற முடியும்.