ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 14, 2024

சூரியனின் சக்தியை எடுத்துத் தான் தாவரங்கள் செழித்து வளர்கின்றது

சூரியனின் சக்தியை எடுத்துத் தான் தாவரங்கள் செழித்து வளர்கின்றது


ஜீவ ஜெந்துக்களுக்குத்தான் உண்டு கழிக்கும் குணமுண்டு. இயற்கைக்கு ஜீவன்களைப்போல் உண்டு கழிக்கும் தன்மையில்லை.
1.எல்லாத் தாவரங்களுமே அதற்குகந்த வளர்ச்சிக்கு வேண்டிய சத்தை மட்டும் சூரியனிலிருந்து நேராக எடுத்து வாழ்கின்றன
2.ஆனால் தாவரங்கள் பிறகுதான் ஜீவசக்தி பெறுகின்றன.
       
எல்லா மண்டலங்களின் சுழற்சியின் கூட்டுடன் சூரியனின் ஒளி அலையை அமிலத் தன்மையைப் பெறும் ஆரம்ப உயிரணு திடமாய் இப்பூமியின் ஈர்ப்பில் படர்ந்து தாவரமாய் வேர் ஊன்றி அதன் தன்மை மாறுபட்டு ஆவியாய் அமிலம் பெற்று மீண்டும் மீண்டும் அதன் வளர்ச்சி நிலை சுழற்சியில் ஏற்படும் உயிரணுக்கள் அதன் சக்தியைக் கொண்டு பூமியின் ஈர்ப்பிற்குச் செல்ல முடியாமல் மற்ற ஜீவனின் கர்ப்ப நிலையில் உண்டு கழிக்கும் வளர்ச்சிக்குகந்த ஜீவிதத்திற்குத்தான் வருகிறது.
 
இடியிலும் மின்னலிலும் ஏற்படும் அதிர்வினால் பூமியின் ஈர்ப்புத் தன்மையில் வான மண்டலத்திலுள்ள அமில குணங்கள் படர்ந்து காளானாய் புல் பூண்டாய் இன்னும் எப்பலனும் தராத பல தாவர வர்க்கங்களாய் வளர்கிறது.
 
அதற்குப் பிறகு அதன் நிலை
1.மாறு கொண்ட அமில குணங்களினால் வளரும் தாவரத்தில் இருந்து புஷ்பம் தரவல்ல நிலை பெற்று
2.அதிலிருந்து வெளிப்படும் அமில குணத்தின் நிலை மீண்டும் வளர்ச்சியுற்றுப் பல பலன் தரத்தக்கக் கனி மரங்களாகின்றன.
 
பல தாவரங்கள் எப்பலனும் தராத நிலையில் இவற்றின் வளர்ச்சியினால் எப்பலன் நாம் பெறுகின்றோம் என்று எண்ணுகின்றோம். ஒன்றிலிருந்து ஒன்றாகத் தான் வளர்ச்சி நிலை கூடி ஜீவஜெந்து வந்து மீண்டும் தாவரங்களின் நிலையிலிருந்தே நம் ஜீவனுக்கு உணவாகவும் எடுத்துக் கொள்கின்றோம்.
 
காளானாய் புல்லாகி, பூண்டாகி, பூவாகி, கனியாகி ஜீவன் பெற்ற நாம் மீண்டும் நம் ஜீவனுக்கு அதையே உணவாக உண்டு கழித்து அக்கழிவினால் பல வித இன வர்க்கங்கள் புழுவாய், வண்டுகளாய், கொசுக்களாய் வளர்கிது.
 
இவற்றின் தொடர் வட்ட வளர்ச்சியில் மாற்ற குணங்கள் பல ஏற்பட்டு ஏற்பட்டு ஒன்றிலிருந்து ஒன்றாகி இச்சுழற்சி வட்டத்தில் எண்ணிலடங்கா சக்தியுடன் வாழும் நாம் நமக்கு இச்சக்தியை அளித்துள்ள சூரியனின் ஒளி அலையை நம் சுவாசத்துடன் எடுக்கும் எண்ணம் கொண்டு ஈர்த்து வாழும் வழி பெற்றால் நம் சக்தியின் நிலை‌ கூடும்.
 
இல்லங்களில் இருந்து கொண்டும் தன்னிச்சையில் வாழும் பொழுதும் சூரியனின் ஒளி அலை ஒன்றின் மேல் பட்டு அது வெளிப்படுத்தும் எதிரலையில் வாழும் நாம் எல்லாமில் எல்லாமுமாக வளர்க்கும் சூரியனின் ஒளி அலையை நாம் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப நம் சுவாசத்தில் ஈர்த்து நல் சக்தியை நமதாகப் பெறும் சக்தியை எடுக்கலாம்