ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 10, 2024

அகஸ்தியன் மின்னலை நுகர்ந்தான்… துருவ நட்சத்திரமாக ஆனான்

அகஸ்தியன் மின்னலை நுகர்ந்தான்… துருவ நட்சத்திரமாக ஆனான்


அகஸ்தியன் தன் தாய் கருவிலேயே விஷத்தை வெல்லும் சக்தி பெற்றான். பிறந்தபின் அவனை மற்ற மிருகங்கள் பாம்புகளோ நுர்ந்தால்
1.அதனுடைய விஷத்தன்மைகள் இவனுக்கு முன் ஒடுங்கி விடுகின்றது.
2.விஷத்தன்மைகள் அங்கே ஒடுங்கும் பொழுது இவனுக்குள் சிந்திக்கும் ஆற்றல் பெருகுகின்றது.
 
விஷத்தை ஒடுக்கிடும் உணர்வுகள் இவனுக்குள் அந்தச் சக்தி இருப்பதனால் மின்னல் வெளிப்படும் பொழுது அதில் விஷத்தன்மை அதிகம் உண்டு
1.அதனையும் நுகர்ந்து அவனுக்குள் அடக்கும் சக்தி வருகின்றது.
2.மின்னலின் ஒளிக் ற்றைகள் எவ்வளவு வீரியமாக இருக்கின்றதோ அதை நுகர்ந்தறிந்து
3.வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி ஒளியாக மாற்றிடும் உணர்வின் அணுக்களாக அவனில் பெருகுகின்றது.
4.மின்னல் தாக்கும் பொழுது அந்த ஒளிக் கற்றைகள் எவ்வளவு தூரம் விரிவடைகின்றதோ
5.அதைப்போல் அவன் எண்ணங்கள் வெகு தூரம் ஊடுருவி இருளை மாய்த்து ஒளி என்ற உணர்வாக அறியும் தன்மை பெறுகின்றான்,
6.வான் வீதியின் ஆற்றலையும் மின்னல்களையும் தனக்குள் ஒளிக்கற்றைகளாக மாற்றிக் கொண்டான்
7.அவன் உடலில் உயிரைப் போன்று உணர்வுகள் ளியானது.
 
திருமணமான பின் கணவன் மனைவியாக இணைந்து உயிரும் ஒன்றி துருவ நட்சத்திரமா ஆனார்கள்.
 
அவர்கள் பெற்ற உணர்வினை நாம் நுகர்ந்தால் நம் வாழ்க்கையில் வரும் இருளை வென்று பேரருளை இயக்கச் சக்தியாக மாற்றி ஒளி என்ற உணர்வுடன் வாழ்ந்து இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை நாமும் பெற முடியும்.
 
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர நுகர
2.நமது உடலில் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் உயிரை ஒத்த ஒளியாக மாற்றி
3.அந்த உணர்வின் துணை கொண்டு உடலை விட்டுச் சென்றால் நம் உயிர் துருவ நட்சத்திரத்தின் பால் ஈர்க்கப்பட்டு
4.நஞ்சை வென்ற உணர்வாக வெளிப்படுத்தும் அந்த உணர்வினை நாம் உணவாக எடுத்து
5.அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.
 
நம் உடலில் சிருஷ்டித்துக் கொண்ட உணர்வுக்கொப்ப தே உடலை ஒளியாக மாற்றுகின்றது இதற்குப் பின் இன்னொரு உடல் இல்லை.
 
ஒளியின் சிகரமாகும் போது இருளை மாற்றிப் பேரின்ப நிலை என்று பேரானந்த நிலையாக ஏகாந்த நிலையாக ஏகாதசி பத்தாவது நிலையான கல்கி என்ற நிலை அடை முடியும்.
 
அந்த மார்க்கத்தைத் தான் நமது ஞானிகள் காட்டினார்கள்.
 
1.இந்த உண்மையினை நமது குரு அறிந்தார் அதனின் வழியை எனக்கு வழி மொழிந்தார்.
2.அதன் வழி வாழ்க்கையில் நான் பின்பற்றி நடந்தேன்…. காடு மேடெல்லாம் அலைந்தேன்.
 
மிருகங்கள் எப்படி வாழ்கின்றது தாவரங்கள் எப்படி உருவாகின்றது இதனை உணவாக உட்கொள்ளும் உயிரினங்களின் உடல்கள் எப்படி மாறுகின்றது என்று குருநாதர் எம்மை அறியச் செய்தார்.
 
அதைத் தான் உங்களுக்கு இப்போது உபதேசிக்கின்றேன். இதை நீங்கள் பதிவு செய்து மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று… இருளை அகற்றி நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெறுவீர்கள்.
 
1.இந்த உடலில் வாழும் காலத்திலேயே அதிகமாக இதைப் பெருக்கி
2.உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொண்டால் என்றும் நிலையான ஒளிச் சரீரம் சரித்திரம் பெற முடியும்.
 
மனிதனுடைய கடைசி எல்லை இதுதான்.