வேக வைக்காது பச்சையாகச் சாப்பிடுபவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது
சில சாமியார்கள் என்ன சொல்வார்கள்…? என்றால்
1.நான் வேக வைத்து மட்டும் எதையும்
சாப்பிடுவதில்லை.
2.அப்படியே பச்சையாகத் தான்
சாப்பிடுவேன் என்று சொல்வார்கள்.
பச்சையாகச் சாப்பிட்ட பின் பாருங்கள். கத்திரிக்காயோ
முள்ளங்கியோ வெண்டைக்காயோ வெங்காயத்தையோ சாப்பிட்டவர்கள் அருகிலே சென்றோம் என்றால் அதனதன்
வாசனை அவர் உடலில் இருந்து நிச்சயம் வரும்.
ஆடு மாடுகள் எல்லாம் என்ன செய்கின்றது…? எந்தத் தழைத் தாம்புகளைத் தின்னுகின்றதோ அதனின் உடலில் அந்தத் தழையின் வாசனை தான் வரும்
செம்மறி ஆட்டுக்கறியைச் சமைத்தால்
வெள்ளாட்டுக் கறி மாதிரி வாசனை வராது. மானையும் வெள்ளாட்டுக்
கறியும் சமைத்தால் தழைத் தாம்பு வாசனை வரும்.
மனிதனாக இருப்பவர்கள் வேக வைக்காது காய் கறிகளைப் பச்சையாகச் சாப்பிட்டால் அதனதன் வாசனை தான் உடலில் வரும்
1.இந்த வாசனையுடன் உடலை
விட்டுப் பிரிந்த ஆன்மா இன்னொரு மனித
உடலுக்குள் செல்லாது
2.நேராக… அந்த மாடு ஆடுகள்
எதையெல்லாம் சாப்பிட்டதோ அதைச் சாப்பிட்டுப் பழகியிருந்தால் அங்கே தான் செல்லும்.
3.நீ அதிலே சென்று பிற என்று உயிர் அழைத்துச் சென்றுவிடும்.
4.அந்த உணர்வுக்குத்தக்க
ஆடாக மாற்றிவிடும்
ஆட்டுக்கறியைச் சாப்பிட்டாலும் அந்த
ருசி வரப்படும் பொழுது அதைச் சாப்பிட வேண்டும்… அதைச் சாப்பிட வேண்டும்… என்ற
எண்ணம் வரும்.
இந்த உணர்வு இங்கே கலந்த பிற்பாடு ஆடு மேய்ந்து கொண்டிருந்தால்
ஆட்டின் ஈர்ப்புக்குள் சென்று விடும். கோழிக்கறியை விரும்பிச் சாப்பிட்டிருந்தால் கோழி மேய்ந்து கொண்டிருந்தால்… உயிர் அங்கே தான்
நம்மை கொண்டு போய்ச் செலுத்தும்.
இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் நாம்
எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் இயக்கமாக இயக்கப்பட்டு நாம்
அதுவாகத்தான் மாறும் நிலையை உருவாக்குகின்றோம்.
தவறாகச் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.
1.நான் (ஞானகுரு) யாரையும் மாமிசம் சாப்பிட
வேண்டாம் என்று சொல்லவில்லை
2.சாப்பிட்டால் இந்த மாதிரி தான் உயிர் அழைத்துச்
செல்லும் என்று ஒரு காட்டிய வழியில் உணர்த்துகின்றேன்.
அதைச் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்றால் இதை
வென்றவன் துருவ மகரிஷி. அகஸ்தியனாக
இருக்கும் பொழுது நஞ்சினை வேன்றான். அவன் துருவனாகித் துருவ மகரிஷி ஆனான். ஆகவே
1.அகஸ்தியன் வழியினை நாம்
பின்பற்றினால் தீமைகளை நீக்கலாம்.
2.நமது ஞானிகள் நமக்கு இதைத் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்