அகஸ்தியன் கண்டது அனைத்தையும் “நீங்கள் காணுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு”
“அகஸ்தியன் என்று சொல்லும் அக்காலத்தில் வாழ்ந்த அந்தச் சிசு” தன் தாயின் கருவில் இருக்கப்படும் பொழுதே பல உன்னதமான சக்திகளைப்
பெறுகின்றது. அவை அனைத்தும் அதற்குப் “பூர்வ
புண்ணியமாக” அமைகின்றது
பிறந்து… அந்தக் குழந்தை தனிமையிலே கிடந்தாலும் நஞ்சு
கொண்ட உயிரினங்களோ பாம்புகளோ மற்ற பூச்சிகளோ இவனைக் கண்டாலே விலகிச் செல்லும் நிலையே
ஏற்படுகின்றது.
1.சூரியனை வணங்கி வந்த அக்காலத்தில் இது கடவுளின் பிள்ளை கடவுளால் கொடுக்கப்பட்டது
என்று
2.அவருடைய தாய் தந்தையரே அவனைக் கடவுள் என்றே வணங்கத் தொடங்குகின்றார்கள்.
பல அற்புத நிகழ்ச்சிகள் நடக்கின்றது காட்டு விலங்குகள் அனைத்தும் இவனை
அணுகாது விலகிச் செல்கின்றது.
ஆனால் அகஸ்தியனுடைய தாய் தந்தையர் மிருக ஜந்துக்களிடமிருந்து தப்பிப்பதற்கு
தாவர இனங்களின் விழுதுகளை அரைத்து உடலில் மூலமாகப் பூசினார்கள்.
அந்த முலாமின் உணர்வுகள் தான் கருவிலே உருப்பெற்ற அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாகக்
கிடைத்தது.
1.சூரியனின் உணர்வின் ஆற்றலே இவனுக்குள் பெருகிப் பெருகி அதை இவன் நேரடியாகப்
பார்க்கின்றான்
2.அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளையும் காணுகின்றான்.
விஞ்ஞான அறிவுப்படி வலிமையான தொலைநோக்கிகளை வைத்து விண்வெளியில்
தொலை தூரத்தில் இருக்கும் மண்டலங்களைக் காணுவது போன்று
1.அவனின்
உணர்வின் செல்களுக்கும் மற்றதை ஒளி கொண்டு வெகு தூரம் நினைவலைகள்
பாய்ச்சப்பட்டு
2.அணுவின் ஆற்றலை அறியும் தன்மையும் இவனுக்குத் தாய்
தந்தையினுடைய வடிவிலே கருவிலேயே பூர்வ
புண்ணியமாகக் கிடைக்கின்றது.
இது அவனுடைய சந்தர்ப்பம்.
பிறந்து ஐந்தே வயது ஆகும் பொழுது விண்ணை நோக்கிப் பார்ப்பதும் மற்ற விஷம் கொண்ட மிருகங்கள் இவனைக் கண்டு விலகிச் செல்வதும் பல அற்புத நிகழ்ச்சிகளை அணுவின்
சிதைவும்… அணுவின்
கூட்டமைப்பும்… அணுவின் ஆற்றலையும்… அவன்
நேரடியாக்க் கண் கொண்டு அறியத் தொடங்குகின்றான்.
1.ஒரு உயிரினம் முட்டை இடுக்கிறது என்றால் அது என்ன
முட்டை என்றும்
2.அதற்குள் அணுவின் தன்மை எப்படி உருப்பெறுகிறது
என்பதையும் அவன் கண்டுணர்கின்றான்.
நமது பூமியிலே மணங்களைக் காணும் (நுகர்ந்து) பொழுது இந்தச் செடியில் இருந்து வந்த மணம் என்று அதைப் பிரித்துச் சொல்லும் தன்மை ஐந்து வயதிலேயே அவனுக்கு வருகின்றது.
இது போன்ற வளர்ச்சி வந்தபின் தாய் தந்தையருக்கு பேரானந்த நிலை வருகின்றது.
இருப்பினும் இந்தக் குழந்தை தன்னிச்சையாக எங்கே சென்றாலும்
அச்சமின்றி அவன் செல்கின்றான். மற்றவைகள் தான் இவனைக் கண்டு
அஞ்சுகின்றது. ஆனால் அவருடைய தாய் தந்தையரோ தாவர இனத்தின் முலாம்களைப்
பூசாமல் சென்றால் மிருகங்கள் அவர்களைக்
கொன்றுவிடும்.
இப்படி நடக்கப்படும் பொழுது இவர்கள் பூசிய முலாம்கள் உடலில் அதனின் நஞ்சுகள் பெருகி அது அதிகரித்து நோயாகி மடிகின்றார்கள். அவனுக்கு ஐந்து வயது முடிவதற்கு
முன் இருவரும் இறந்து விடுகின்றார்கள்.
இரண்டு பேருமே தன் குழந்தை மீது… இளம் பிஞ்சு
உள்ளத்தை எண்ணியே காட்டுக்குள் அவனைத் தனித்து விட்டுச் செல்கிறோமே என்ற ஏக்க உணர்வு
அதிகரித்து இருவரும் செயலற்ற நிலை வரும் பொழுது
1.குழந்தையை ஏங்கி அந்த உயிரான்மாக்களும் ஒருமித்த நிலைகள் வெளி வருகின்றது.
2.வெளிவந்த பின் எந்தக் குழந்தை மீது பற்று
வைத்தார்களோ அகஸ்தியனின் உடலுக்குள் புகுந்து விடுகின்றது.
3.அவர்கள் வாழ்க்கையில் எதையெல்லாம் வளர்ச்சி பெற்று வந்தார்களோ அந்த உணர்வின் ஆற்றல்கள்
4.”இந்தக் குழந்தையைக் காத்திடும்
உணர்வாக” அந்த உடலுக்குள் புகுந்து விடுகின்றது.
அதற்குப்பின் அந்த குழந்தைக்கோ தன் தாய்
தந்தை மடிந்ததை எண்ணி அதுவும் ஏக்கத்தால்
எண்ணுகின்றது. “அன்னை தந்தையைப் பார்க்க வேண்டும்” என்ற ஏக்கத்திலேயே சூரியனை உற்றுப் பார்க்கின்றான்.
ஏனென்றால் சூரியனைக் கடவுள் என்று காண்பித்த நிலைகளில் இவன் உற்று நோக்கும் போது விண்ணிலே நடக்கும் அதிசயங்களைக் கண்டுணர்கின்றான்.
1.இவன் உடலில் விளைய வைத்த அவை
ஒவ்வொன்றும் அறிவின் தன்மையாக விண்ணின் ஆற்றலை அறியும்
நிலையாக
2.இவனின்று உமிழ்த்தும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
அலைகளாகப் படரச் செய்து கொண்டுள்ளது.
அதை எல்லாம்
நான் (ஞானகுரு) இப்பொழுது பேசுகிறேன் என்றால்…
1.என் குருநாதர் அதை எடுக்கும் வழியை உணர்த்தியதனால்
2.அதனின் உணர்வின் துணை கொண்டு தான் அறியும் ஆற்றலைப்
பெற்று
3.அறிந்த
பின் உங்களுக்கும் அதைச் சொல்ல முடிகிறது.
ஏனென்றால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டதை இன்று
நம்மால் பார்க்க முடியும்.
1.நீங்கள் அனைவருமே அதைக் காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
2.எனது குருநாதர் எனக்கு எப்படி அதைக் காண்பித்தாரோ அதைப் போல
விண்ணுலக ஆற்றலை நீங்கள் ஒவ்வொருவரும் கண்டுணர முடியும்.
மனிதனான பின் முழுமை அடையும் நிலைகளாக உயிருடன்
ஒன்றி ஒளியின் சரீரம் நீங்கள் பெற முடியும் என்பதற்கே இதை உணர்த்துகின்றேன்.