எந்த மனித இனத்திலிருந்து அகஸ்தியன் வந்தானோ… அந்த மனித இனத்திற்கே “ஒளி பாய்ச்சிக் கொண்டுள்ளான்”
விநாயகர் தத்துவப்படி விநாயகர் அருகில் அரசையும் வேம்பையும் வைத்துக் காட்டி இருப்பார்கள். வேம்பு என்பது வாழ்க்கையில் வரும் கசந்த நிலை.
வாழ்க்கையில் வரக்கூடிய அந்தக் கசப்பை வென்றவர்கள் தான் மகரிஷிகள்.
ஒரு பட்சி அரசம் பழத்தை உணவாக
எடுத்து அதனுடைய சத்தை உட்கொண்டாலும்… உதாரணமாக ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மீது தன் மலத்தை விடும் பொழுது
1.மலத்திற்குள் சிக்குண்ட இந்த வித்து பாழடைந்த இடத்தில் அது படர்ந்து காற்றில் பரவி இருக்கும் ஈரச்சத்தை நுகர்ந்து
2.தனது சத்தான நிலைகள்
கொண்டு கருவுற்று ஜீவனாகி அரசாக (அரச மரமாக) விளைகின்றது.
3.பின் தன் விழுதுகளை ஊன்றி
நீரே இல்லாத அந்த இடத்தில் தன் விழுதுகளை ஊன்றி நீர்
இருக்கும் பக்கம் தன் விழுதுகளைப் பாய்ச்சுகின்றது.
4.அப்படிப் பாய்ச்சி வளரத் தொடங்குகிறது.
இதைப் போன்று தான் மனிதன் தன்
வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி
பாழடைந்த இடமான பூமியின் வட துருவப் பகுதியில் விண்ணிலே
துருவ மகரிஷி “துருவ நட்சத்திரமாக”
இருக்கின்றான்.
விண்ணிளிருந்து வரும் நஞ்சினைத்
தனக்குள் அடக்கி நஞ்சினை வென்று ஒளியின் சிகரமாக இன்றும்
நிலையாக… தன் உணர்வின் அலைகளை முழுதும் பாய்ச்சித் தன்
உணர்வின் ஆற்றலால் அதைக் கண்டுணர்ந்த
மற்ற மனிதர்களும் அதைப் பின்பற்றி… சப்தரிஷி மண்டலங்களாக துருவ நட்சத்திரத்தைச் சுற்றிச் சுழன்று
வருகின்றார்கள்.
1.தன் விழுதுகளைப் பாய்ச்சிப் பேரண்டத்திலிருந்து வருவதை தன் உணர்வின் ஆற்றலால் அங்கே பெறும் மனிதன் அவனுக்குள் விளைவதால்
2.அவனைப் பின்பற்றிச் சென்றவரைப் பரிசுத்தப்படுத்தி அவர்களையும் வாழ
வைத்து
3.ஒளியின் சரீரமாக இன்றும்
துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக வாழுகின்றான்.
விண்ணின் ஆற்றலின் நிலைகளை நட்சத்திரங்கள்
தனக்குள் அடக்கிப் பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்படும் பொழுது
கோள்கள் தனது சத்தாக எடுத்து அது உமிழ்த்தும் சத்தைச் சூரியன்
கவர்ந்து ஒளியின் சுடராக இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகிறது.
அதைப் போல அகஸ்தியனும் நஞ்சினை
ஒடுக்கிடும் ஆற்றல் பெற்று ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக விண்ணிலே வாழுகின்றான்.
சூரியன் எப்படி ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ இதைப் போன்று ஒளியின்
சுடராகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அந்த துருவ நட்சத்திரம்
1.எந்த மனித இனத்திலிருந்து வந்தானோ அந்த மனித இனத்திற்கே ஒளி பாய்ச்சும் உணர்வினை
2.சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பூமிக்குள் படர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதை நாம் நுகர்ந்து
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற
வேண்டும் என்று கண் கொண்டு கூர்மையாக எண்ணும் பொழுது
4.அவன் உணர்த்திய உணர்வின் ஆற்றல் நமக்குள் பெருகுகின்றது… அதனை நாம் பருகுதல்
வேண்டும்.
விநாயகர் தத்துவத்தில்
காட்டப்பட்டுள்ள பேருண்மை இதுதான்.
விண்ணை நோக்கி ஏகி அந்த
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி உடலுக்குள் செலுத்தி…
உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையும் மார்க்கத்தை ஞானிகள்
நமக்குத் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.