முற்பிறவி என்று சொல்லும் “சிலருடைய அமானுஷ்ய செயல்கள்”
இன்று இவ்வுலகில்… சில
இடங்களில் சில ஆத்மாக்கள் குழந்தைப் பிராயத்திலேயே அதன் வயதுக்கு ஒவ்வாத நிலையில்
சில நிலைகளை ஞானோதயம் பெற்று… வயதுக்கு மீறிய சித்தர்களாலும்
சப்தரிஷிகளாலும் மட்டுமே உணர்த்தக்கூடிய நிலையில் உணர்த்துகின்றனர் என்றால் அது
எந்த நிலையில்…?
அவ்வாத்மாவின் ஒளி அலைகள் அதனுடைய முன் ஜென்மத்தில் சில
மகான்களின் தொடர்புடன் வாழ்ந்திருந்து அவர்களின் எண்ணத்திலேயே ஆத்மா பிரிந்து மறு
ஜென்மத்திற்கு வரும் பொழுதும் இன்னும் ஒவ்வோர் உடலுக்குள்ளும் பல அணுக்கள் உள்ளன
என்று உணர்த்தியுள்ளோம்.
அதைப்போல் பல ஆவிகளும் அவ்வுடலில் ஏறிக் கொண்டுள்ளன.
1.அந்த நிலையில் அம்மகானானவர் அவர் வாழ்ந்து,
ஞானம் பெற்றுச் சக்தியின் நிலையில் ஒளியுடன் கலக்கப் பெறும் பொழுது
2.அவர் உடலுடன் உள்ள நிலையிலேயே அவர் எடுத்த
ஜெபத்தினால்
3.அவ்வுடலில் இருந்த மற்ற ஆவிகளும்
அணுக்களும் (பல கோடி எண்ண அணுக்கள்) அவரின் ஞானத்தினால் இவைகளும் நல்ல நிலை எய்துகிறது.
இம்மகான் உடலை விட்டுச் செயல்படும் நிலையிலேயே இவ்வுடலில்
தங்கிய இவ்வாவிகளுக்கும் அவற்றின் எண்ணமெல்லாம் நீங்கி இம்மகானுடன் அவர் உடலில்
சாடியதின் பயனால்
1.அவர் பெற்று ஏற்றிய ஞானத்தின் ஒளியில்
பங்கு பெற்று மறு ஜென்மத்திற்கு வந்து வாழும் நிலையில்
2.மகானுடன் ஒன்றியதினால் அவ்வொளி அலையை
ஈர்க்கும் அமில குணமுடன்
3.இச் சிசு பிறப்பில் வாழும் பொழுது அம்
மகானின் சக்தி அலையை இச்சிசுவின் மேல் பாய்ச்சி
4.பல அபூர்வ நிலையெல்லாம் வயதிற்கு மீறிய
செயலாக இன்றளவும் நடந்து வருகிறது.
திருஞானசம்பந்தரின் மொழி அமுதை ஒரு குழந்தை
வெளிப்படுத்துகிறது என்றால் அது இந்த நிலையில் தான்.
இன்று மட்டுமல்ல பல கால கட்டங்களாய் சில சில இடங்களில்
இப்படி வியக்கத்தகும் அதிசய நிலைகள் நடந்து வருகின்றன. இதன் வட்ட ஒளியிலேயே ஞானம்
பெற்றுச் செயல்பட்டால் “மீண்டும் மீண்டும் சக்தி நிலை பெருகிப் பல
நிலைகளைச் செயலாக்கிடலாம்…”
பெற்ற பயனைப் பொருளுக்கும் புகழுக்கும் விரயப்படுத்தி
விட்டால் ஞான சக்தியின் வலு குன்றி விடுகின்றது.
திருவையாறு தியாகராஜரின் நிலையும் இந்நிலையில் வந்ததுதான்.
அவர் தன் உடலை விட்டுப் பிரியும் நாள் வரை அச்சங்கீத ஞானத்துடனே ஐக்கியப்பட்டுத் தான் அடைந்த ஞானத்தின் பொக்கிஷத்தை இம்மியளவும் சிதற விடாமல்
செயல் கொண்டதினால் நல் ஒளி பெற்றார்.
இந்த நிலை தெய்வீக நிலையில் மட்டும் ஏற்படுகின்றதா…? மற்ற நிலைகளில் இல்லையா…? என்ற வினா
எழும்பலாம்.
இன்று உலகத்தில் பல பாகங்களில் தன் பூர்வ ஜென்மத்தில் இந்த
இந்த இடத்தில் வாழ்ந்ததாகவும், இவர் தான் என் தாய்,
இவர் தான் என் தந்தை என்று சொந்த பந்தங்களை உணர்த்தியும், தன் முந்தைய நாமகரணத்தையும் சொந்த பந்தங்களின் நாமகரணத்தையும் மற்ற
எல்லாக் குறிப்புகளையும் மறு ஜென்மம் எய்திய பிறகும் முன் ஜென்மத்தில் நடந்த
இடத்தை உணர்த்துகின்றார்களே இவை எந்த நிலையில்…?
ஓர் ஆத்மா வாழுகின்றது. அது வாழும் நிலையில் இன்று பேய்
பிடித்து விட்டது, பிசாசு பிடித்து விட்டது என்றெல்லாம்
சிலரைச் செப்புகின்றனர்.
எப்பேயும் யாரையும் பிடிப்பதில்லை. ஆனால் இம்மனித ஆத்மாவின்
எண்ணச் சிதறலினால்
1.அந்த அந்த எண்ண நிலைக்கொப்ப ஆவி உலக
ஆத்மாக்கள் அதன் எண்ணத்தை ஈடேற்றச் சில உடல்களில் ஏறுகின்றன.
2.உடலில் ஏறிய எவ்வாத்மாவுமே அவ்வுடலுக்குச்
சொந்தமான ஆத்மா பிரிந்த பிறகுதான் இவ்வாவி ஆத்மாவும் வெளியேற முடிகின்றது.
ஓர் உடலில் இப்படி ஏறிய ஆவி ஆத்மாவானது அவ்வுடலுக்குச்
சொந்தமான ஆத்மாவைக் காட்டிலும் சக்தியுடையதாய் ஏறிச் சில செயல்களைப் புரிவதினால் தான்
1.சிலர் (சில உடல் ஆத்மாக்கள்) தன் நிலை பெற
முடிந்து தன் எண்ணத்தைக் கொண்டு வாழ்ந்திட முடியாமல்
2.ஆவி ஆத்மாவின் செயலில் வாழ்வதினால்தான் “பேய் பிடித்து விட்டது… பிசாசு பிடித்து விட்டது…” என்கின்றனர்.
இப்படி வீரிய சக்தி கொண்ட ஆவி ஆத்மாக்கள் ஏறிய உடல் ஆத்மாக்கள்
நீண்ட நாளும் வாழ்வதில்லை அகால மரணம் எய்துகின்றனர்… தன்
நிலை மறந்து.
அந்த நிலையில் அவ்வுடலில் இருந்து உடலுக்குச் சொந்தமான
ஆத்மாவும் உடலில் ஏறிய ஆவி ஆத்மாவும் பிரிந்து செல்கின்றது.
இவ்வுடலில் ஏறிய ஆவி ஆத்மாவிற்கு தன் செயலைச் செயல்படுத்த
மற்றோர் உடலில் ஏறியதினால், தன் முந்தைய நிலை மறந்து
1.எவ்வுடலில் ஏறிச் செயல் கொண்டதோ அவ்வுடலின்
சொந்த பந்தங்களுடன் தன் எண்ணமும் செயல்பட்டதினால்
2.இவ்வுடலுக்குச் சொந்தமான சொந்த பந்தங்களும்
வாழ்ந்த இடங்களையும் தனதாக ஒன்றி விடுகின்றது.
உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா எவ்வாத்மாவானாலும்
சரி… உடனே பிறப்பிற்கு வருவதில்லை. தன் உதிரத் தொடர்புடைய
தாய் தந்தையார் மக்கள் இவர்கள் உள்ளவரை பிறப்பிற்கு வருவதில்லை.
அப்படி இருக்க… இக்
குறுகிய காலத்தில் பிறப்பெய்தி இவர்கள் தான் என் தாய் தந்தையார் சுற்றத்தார்
என்றெல்லாம் முன் ஜென்மத்தின் நிலையை உணர்த்துவது எப்படி…?
அதாவது இவ்வுடலில் ஏறிய ஆவி ஆத்மாவானது,
தாயின் கரு நிலைக்கு வந்தவுடன் அதன் இரண்டு நிலை கொண்டு…
1.இரண்டு நிலை என்பது அதன் முந்தைய ஜென்ம நிலையும்
ஆவி ஆத்மாவாய் மற்ற உடலில் சாடியதின் நிலையும் கொண்டு
2.கர்ப்பத்திற்கு வந்தவுடன் இவ்வாத்மாக்களுக்கு
பன்னிரண்டு வகையான அமிலத்தை ஈர்க்கும் குணமுடைய சக்தியைக் காட்டிலும்
3.மற்றொரு உடலில் ஏறி வெளிப்பட்டதின்
நிலையினால் தாயின் கருவில் அதன் நிலையும் மறக்கப் பெற்று
4.பிறப்பிற்கு வந்த பிறகு அது எடுக்கும்
சுவாசத்தினால் மற்றோர் உடலில் ஏறி வெளிப்பட்ட ஆவி ஜென்மத்திற்கு வந்து
5.வாழும் வளர்ச்சி பெற்ற எண்ண நினைவுகள்
எல்லாம் நினைவில் சாடும் பருவத்திலேயே அதன் பேசி உறவாடும் காலகட்டத்தில்
6.அவை ஏறிய உடல் ஆத்மாவின் சொந்த பந்தங்கள்
வாழ்ந்த நினைவலைகள் எல்லாம் இவ்வாத்மா செப்புகின்றது.
மற்றோர் உடலில் குடியேறி…
தன் முந்தைய ஆவி நிலையை மறந்து அவ்வுடலின் எண்ணத்தில் வாழ்ந்து செயல்பட்ட
ஆவிகளினால்தான்… இப்படி முந்தைய ஜென்மத்தைச் செப்ப முடியும்.
ஆனால் இவற்றிலேயே எல்லா ஆவிகளும் இப்படி மற்ற உடலில் ஏறிய பிறகு ஜென்மத்திற்கு வர
முடியாது.
1.நல்ல ஆத்மாவின் எண்ணமுடன் ஏறிச் செயல்பட்ட
ஆத்மாக்களுக்குத்தான் இப்படிப் பிறப்பு எடுக்கும் நிலை பாக்கியமும் வருகின்றது.
2.ஆனால் முந்தைய ஜென்ம வாழ்க்கையை உணர்த்தி
வாழும் ஆத்மாக்களும் நீண்ட நாட்கள் வாழ்ந்திடாது.