நமது எல்லை
தேர் என்பது மிகவும் வலிமையானது…
பல நூறு பேர் ஒன்று சேர்ந்து இழுத்தால் தான் அது நகர்ந்து
ஓடும். ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்தால் தேர் எல்லை வந்து
சேராது.
இது போன்றுதான் நமக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான குணங்கள்
1.ஒன்று தீமையின் நிலைகள் இழுத்தால் ஒன்று நன்மையின்
நிலைகள் இழுக்கப்படும்போது
2.நம்
உணர்வின் தன்மை ஒளியாகும் அறிவின் தன்மைகள்… உயிருடன் ஒன்றி எல்லையைச்
சென்றடையாது.
அந்த எல்லையை அடைய… எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…? என்பதுதான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் தெளிவாகப் பதிவு செய்து
1.இந்த உணர்ச்சிகளை உந்தும்படி செய்து அந்த உணர்வின் ஏக்கத்தால்
2.மகரிஷியின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதே கூட்டுத் தியானம்.
அதன் வழி கொண்டு நீங்கள் தியானித்த பின் நம் மூதாதையரான குலதெய்வங்களின் உயிரான்மாக்களை நினைவுக்குக் கொண்டு வந்து அந்த சப்தரிஷி
மண்டலங்களுடன் அவர்களை இணையச் செய்து
1.அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று உந்து விசையால்
உந்தித் தள்ளினால்
2.சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து ஒளியின்
சரீரம் பெறுகின்றனர்.
காரணம் சப்தரிஷிகள் என்பவர்கள் நஞ்சினை வென்றவர்கள் உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் இருளை மாய்த்தவர்கள். அந்த
ஒளிக்குள் இந்த உயிரான்மாக்கள் பட்ட
பின் இருள் சூழும் உணர்வுகள் கருகி விடுகின்றது.
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் அறிவால் தெளிந்த உணர்வுகள்
நிலைக்கின்றது… அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழல்கின்றது
2.இவ்வாறு நாம் செய்தோம் என்றால் சப்தரிஷி மண்டலங்களில் அவரும் ஒன்றாகி
விடுகின்றார்கள்… “சப்தரிஷிகளாகின்றார்கள்…”
3.சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நாம் எப்போது எண்ணினாலும்
4.அதைப் பெறக்கூடிய தகுதி நமக்கு அங்கே கிடைக்கின்றது.
அவர்கள் முன் செல்ல வேண்டும்…! காரணம்
அவருடைய உணர்வுகள் தான் நமது உடல் அந்த உணர்வினை நினைவு கொண்டு வந்து உந்தித் தள்ளி
அந்த உணர்வினை நாம் பெறச் செய்தால்…
அவர்கள் முன் சென்றால் நாமும் எளிதில் பின்
செல்ல முடியும்.
இந்த மார்க்கத்தைத் தான் விநாயகர் தத்துவத்தில் தெளிந்த நிலைகள் கொண்டு காட்டியுள்ளார்கள். உடலை விட்டுச் சென்றால் ஆறாவது அறிவின் துணை கொண்டு நமது எல்லை
சப்தரிஷி மண்டலம் தான்.
அப்படி இல்லை என்றால் என் பிள்ளை இப்படிச் சொன்னானே… இந்தச் சொத்தெல்லாம் வைத்திருக்கிறேன்… நாளை அவன் அதை என்ன செய்வானோ…? என்று இப்படி எண்ணினால்
1.நம்
எல்லை பையன் உடலுக்குள் தான் செல்ல வேண்டி வரும்
2.நாம் பட்ட கஷ்டம் எல்லாம் அவனுக்குள் விளையத் தொடங்கும்.
ஒருவன்
என்னைச் சாபமிட்டான்…!
இப்படி செய்தானே அவன் குடும்பம் உருப்படுமா…? என்று நினைத்தால் அவனைப் பழி
தீர்க்கும் உணர்வாகச் சேர்ந்தால் “நம்முடைய
எல்லை சாபமிட்டவன் இடத்திற்குச் சென்றுவிடும்…”
சாகப் போகும் பொழுது நினைவு எங்கெல்லாம்
போகின்றது…? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லோருக்கும் நான் சுவையான உணவை ஆக்கிப் போட்டேன் எனக்கு நல்ல கறித் துண்டு (மட்டன்) உண்டா…? என்று நினைத்தால் ஆடாகத்தான்
போக வேண்டி வரும்… இது நிச்சயம்.. எல்லை அது தான்…!
ஏனென்றால் அன்று நன்றாக இருக்கும் பொழுது எல்லோருக்கும் சுவையாக ருசியாகச் சமைத்து போட்டேன் ஆனால் இப்பொழுது எனக்கு என் ருசிக்காக ஒரு துண்டு கூட
கொடுக்கவில்லை பாருங்கள்… எல்லாவற்றையும் அவர்களே
சாப்பிடுகின்றார்கள்.
1.இப்படி எண்ணினால்… எல்லை அந்தக் கறித்துண்டின் மேல் ஞாபகம் வந்தால்… அந்த உயிரினத்திடம் தான் இந்த உயிர் செல்லும்.
2.ஆகவே எதனை கடைசி முடிவாக நினைவின் ஆற்றலைக் கொண்டு
வருகின்றமோ… எல்லை அதுவாகவே நிர்ணயிக்கப்படுகிறது.
இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.