உடல் நலம் பெறுவதற்குத் தான் இந்தத் தியானம் செய்கின்றோமா…? என்றால் இல்லை…!
அன்றாட வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றுவதற்கு நாம் என்ன
செய்ய வேண்டும்…?
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரமாக ஆனான்… ஒளியின்
சரீரமாக இருக்கின்றான் உடலை ஒளியாக மாற்றிச் சென்றான். அப்படி ஒளியாக மாறியது தான் துருவ நட்சத்திரம்.
அதிலிருந்து வருவதைத் தான் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து
அலைகளாக மாற்றிக் கொண்டு வருகின்றது… நம்
பூமியிலேயே பரவச் செய்து கொண்டிருக்கின்றது.
2.வெயில் வருவதற்கு முன் நாம் அதை எடுத்துப் பழகுதல் வேண்டும்.
குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை நீங்கள் செவிகளில் கேட்கப்படும் பொழுது ஏங்குகிறீர்கள்.
அந்த உணர்வுகள் உங்களுக்கு எளிதில் கிடைக்கின்றது.
ஒரு இடத்திற்குச் செல்லும்
பொழுது திடீரென்று விபத்து ஆகிவிட்டது என்று கேள்விப்பட்டால் அல்லது பேப்பரிலே
அதைப் படித்தால் நம் மனது எப்படி ஆகின்றது…? கொஞ்ச
நேரமாவது நம் மனது சோர்வடைகிறது.
இதைப் போல உங்களுக்குள் அந்தத்
துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைச் சொல்லப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள்
பதிவாக்குகின்றது.
3.இப்படிப் பதிவாக்கி
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் உணர்வை நுகரச் செய்தால்
4.தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் அதற்குள்
மறைந்துள்ள செம்பை பித்தளையும் ஆவியாக மாற்றுவது போல்
தீமைகளைக் கரைத்துவிடும்.
ஏனென்றால் தீமைகளை வென்றது துருவ நட்சத்திரம். அதிலிருந்து வரக்கூடியதைத் தான் காலை துருவ தியானத்தில் நீங்கள்
பெற்றால் உங்களுக்குள் வலுவாக்கி வளர்த்துக்
கொள்ள ஏதுவாகும்.
எப்படி வேதனை என்ற விஷமான உணர்வுகள் உங்களுக்குள்
ஊடுருவி நல்ல குணங்களை அது கெடுக்கின்றதோ… நல்ல அணுக்களை மாற்றுகின்றதோ இதைப்போல
1.தீமைகளை வென்றிடும் உணர்வுகள் உங்களுக்குள் வளர்க்க அதை நீங்கள்
விடாப்பிடியாகச் செய்து வர வேண்டும்,.
2.ஒரு நாளைக்கு செய்துவிட்டு என் கஷ்டம்
எல்லாம் போகவில்லையே என் உடலில் உள்ள நோய் போகவில்லையே என்று
3.அப்படி எண்ண வேண்டியதில்லை… நோய்க்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
நாம் அந்த அருள் உணர்வைப் பெருக்கிக் கொண்டே வந்தால் இந்த உணர்வின் வளர்ச்சி பெருகும் பொழுது… இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் பிறவி இல்லா நிலை
அடைகின்றோம்.
இல்லாமல் போனால் கீழே தான் மீண்டும் பிறவிக்கு வருகின்றோம்.
2.நான் மேலே சொன்ன முறைப்படி செய்யுங்கள்.
நீங்கள் தேடிய சொத்தும்
செல்வமும் கையில் வைத்திருக்கிறீர்களா…? வருகின்றது… வளர்கின்றது…
பின் தேய்கின்றது… தேய்ந்த பின் வேதனைப்படுகின்றோம்.
சரி சொத்து தான் போகட்டும் இந்த உடலை நல்ல முறையில் அழகாக வளர்த்து வைத்திருக்கிறீர்கள் ஆனால்
கடைசியில் இந்த உடல் எவ்வளவு சுருங்குகின்றது… எவ்வளவு
வேதனைப்படுகிறது…?
2.அல்லது இந்த உடல் நிரந்தரமாக நம்முடன்
இருக்கின்றதா…?
யோசிக்கின்றோம் சொத்துக்காக எத்தனையோ சண்டைகளையும்
போடுகின்றோம்… ஆசையும்படுகின்றோம்.
ஆனால் ஒருவன் வந்து பணத்தை எல்லாம் கொள்ளையடிக்கும்
பொழுது “பாவிப் பயல்…! இப்படி
எடுத்துச் செல்கின்றானே…” என்று அவன் சாபம் இடுகின்றான்.
இவன் சொத்தை அவன் அபகரித்துச் செல்லும் பொழுது இவன் அவன் உடலுக்குள் சென்று சிறிது நாள் அதை அவன் அனுபவித்தாலும்
1.இவனுடைய சாப அலைகள் அவனுக்குள் ஊடுருவி அவனை நாஸ்தியாக்குகின்றது.
2.இப்படித்தான் தொடர்ந்து நடக்கின்றது.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபடுவதற்குத் தான் காலையில் துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின்
சக்தியை எடுக்கின்றோம்.