
உயிர் இருக்கும் வரை தான் நமக்கு மதிப்பு
வியாசகர் அன்று காட்டியது… கண்ணன் சங்கநாதம் ஊதிய
பின் தான்
மகாபாரதப் போர் நடக்கின்றது… குருக்ஷேத்திரப் போராகக் கண்ணன் வழி நடத்துகின்றான் என்று காட்டப்பட்டது.
நமக்குள்
எண்ணிய உணர்வுகள் உயிரான குருவின் இயக்கத்தில் தான் வருகின்றது.
எதிர்
நிலைகள் கொண்டு
கண் மற்றொருவர் செயலைப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வினைச் சுவாசித்து உயிரான குருச்சேத்திரத்தில் மோதச் செய்கிறது.
1.நம் நல்ல
எண்ணமும் பிற நிலையில் நடக்கும் உணர்வுகளும் குருச்சேத்திரப் போரில்
2.நம் கண்
அந்த உணர்வினை இழுத்துக் கொடுக்கும் போது நாதத்தின்
உணர்வாக அது இயக்கி…
3.சொல்லாகப் பேசுவதும்
மற்ற நிலைகள் நம்மை இயக்குவதும் இதுதான்.
அதைத் தான் கண்ணன் சங்க நாதம் ஊதிய பின் குருச்சேத்திரப் போர்
நடக்கின்றது என்று சொல்வது.
புறக்கண்ணால்
பார்க்கும் உணர்வுகள் கண் அதைக் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றி உயிரான
குருச்சேத்திரத்தில் இணைந்த பின் நமக்குள் இருக்கும் எண்ணங்கள் இரண்டும் அது
பிணைந்து எதனின் வலுவோ அதனின் நிலைகள் கொண்டு இயக்குகின்றது என்ற இந்த நிலையைத் தெளிவாக
எடுத்துரைப்பதற்குத் தான் அந்த அருள் ஞானிகள் இவ்வாறு சொன்னார்கள்.
இதைப் போல
1.ஒவ்வொரு
நொடியிலும் அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்ப்பிக்கப்படும் பொழுது
2.அந்த குருச்சேத்திரத்தில் ஞானிகள் உணர்வு வலுக் கூடி
3.மனித
வாழ்க்கையில் வந்த இருளை வென்று தூய்மையான நிலைகளையும்
என்றும் பிறவா நிலை
அடையச் செய்யும் இந்த நிலை வரும்.
நாம் எதை
எண்ணுகின்றோமோ அதையே கண் அந்த உணர்வின் ஆற்றலால் கவர்ந்து நம் உடலின் இணைப்புக்குள் கொண்டு
வருகின்றது என்று அன்று தெளிவாக
எடுத்துரைத்தனர்.
1.நமது
குருநாதர் இந்த நூற்றாண்டிலே வெளிப்படுத்திய அருள்
சக்திகள்… அவருடைய உணர்வுகள் இங்கே
படர்ந்துள்ளது.
2,அவரின் அருள் துணை கொண்டு வலு கொண்டு விண்ணை நோக்கி நாம் ஏகி
3.அந்த
மகரிஷிகள் அருள் சக்திகளை நாங்கள்
பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது இந்த உணர்வு நமக்குள் கிடைக்கின்றது.
அவ்வாறு கிடைக்கப் பெறச்
செய்வதற்குத் தான்
உங்கள் உயிரை எல்லாம் கடவுளாக வணங்கி உங்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களை
எல்லாம் தெய்வங்களாக எண்ணி அந்த மகரிஷிகள் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று அதை உரமாக ஏற்றி அதைச் செருகச் செய்து அந்த
மெய்ப்பொருளைக் காணும்
நிலையாக வைகுண்ட ஏகாதசி பத்தாவது
நிலையான நம் குருநாதர் அடைந்த
நிலையை நாமும் பெற முடியும் என்று உங்களைத் தன்னம்பிக்கை கொள்ளச் செய்கிறோம்..
நாம் எதை கொடுக்கின்றோமோ நாம் எதை
எண்ணுகின்றோமோ அதைத் தான் நம்
உயிர் படைக்கின்றது. அந்த உணர்வினை உடலில் பரவச் செய்கின்றது அதையே விளையச்
செய்கின்றது விளைந்ததைத் தன்னுடன்
அழைத்துச் செல்கின்றது.
1.நமக்குள்
ஈசன் இருக்கும் பொழுது அவனின்றி அணுவும் அசையாது என்பது போல
2.நமக்குள் உயிர்
இல்லை என்றால் நான் என்ற நிலை ஏது…?
நான்
இன்று பேசுவதெல்லாம் மகிழ்ந்து உறவாடுகின்றேன் மகிழ்ச்சியாக எண்ணுகின்றேன். ஆனால் இந்த உடலை
விட்டு என் உயிர் போய்விட்டால் என்ன செய்யப் போகின்றீர்கள்…?
உடனே இது சவம்
என்றும்… இந்த
உடலை எப்பொழுது அடக்கம் செய்வார்கள்…? என்று தான் கேட்பீர்கள். பேசிய உணர்வின் நிலைகள் நிலைத்திருக்கிறதா என்றால் இல்லை.
இந்தச்
சரீரத்திற்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. என்
உடலுக்குள் இருக்கும் உயிரின் இயக்கத்தைத் தான் மதிக்கின்றார்கள். இதைப் போன்று உடலுக்குள் உயிர்
இருக்கும் வரை தான் நமக்கு மதிப்பு. உயிர் வெளியேறி விட்டால் நமக்கு மதிப்பு இல்லை.
ஆகவே ஒவ்வொருவரும்…
1.உடலுக்குள்
உயிர் இருக்கும் போது உயிரைக் கடவுளாக மதித்து
2.அவனுடன் ஒன்றிய உணர்வாக என்றும் நாம் ஒளியாகச் செல்வோம்
என்றால் உயர்ந்த நிலைகளை அடைய முடியும்.
3.அதைச்
செய்வதற்கு நாம் துணிந்து செயல்பட வேண்டும்.