உலக மாற்றத்திற்குப் பின்…
இப்பூமியில் நிகழப்போகும் மாற்றத்தினால் இப்பூமியில் உள்ள
இயற்கைக் குண அமிலத்தில், குண அமிலம் என்பது இப்பூமியின் மேல் பகுதியில்
உள்ள அனைத்து ஜீவன் கொண்ட நிலைகள் எல்லாம் மாற்றத்தில் உருமாறும் பொழுது
அதிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலை இப்பொழுது பூமியின் தன்மை மாறும் பொழுது
இதிலுள்ள எல்லா இயற்கை நிலையும் மாறிய பிறகு (இறந்த பிறகு) அதனுடைய அமில குணங்கள்
எப்படி வெளிப்படுகின்றன…?
ஒரு கனி அழுகிவிட்டால் அக்கனியில் உள்ள நீர்ச்சத்தெல்லாம்
உஷ்ணம் படப்பட வெளிப்படுகின்றது அல்லவா…? பல நாட்கள் நாட்களுக்குப்
பிறகு அது காய்ந்து எதுவுமே இல்லாமல் அதனுடைய சக்கையும் மண்ணுடன் மண்ணாய்
கலந்துவிடுகிறது.
அதைப் போன்று இவ்வுலக மாற்றத்தில் அழியப்படும் எல்லா இயற்கை
ஜீவன்களும் இப்பூமியின் மேல் ஜீவனற்று உள்ள நிலையில்… இப்பூமியின் சுழற்சியினால் பூமி ஈர்த்து வெளிக்கக்கும் உஷ்ண அலைகள்
அவற்றின் மேல் மோதுண்டு மோதுண்டு…
1.அதிலிருந்து வெளியாகும் ஆவி அமில குணத்தின்
நிலையுடன் இப்பூமியிலிருந்து பிரிந்த உயிரணுக்கள் எல்லாம்
2.மீண்டும் உஷ்ண அலைகள் பட்டவுடன் ஜீவன் பெற
வருகின்றன மாறு கொண்ட நிலையுடன்.
அதன் தன் நிலையிலேயே மீண்டும் வர முடியாது. ஒன்றிலிருந்து
வெளிப்பட்ட அமில குணமே அதன் சுவாசத்தை ஈர்க்கும் உயிரணுவுடன் மோதுண்டு ஜீவனுக்கு
வரும் பொழுது உரு மாறப் பெறுகின்றது.
எப்படி…? என்று வினா எழும்பலாம்.
கொசு எதற்காக இரத்தத்தை உறிஞ்ச
மனிதனையும் மிருகத்தையும் மட்டும் கடிக்கின்றது…? தாவரத்திலும்
பல நிலைகள் உள்ள பொழுது மனிதனின் இரத்தத்தைத்தானே அக்கொசு
விரும்புகிறது.
மனிதனிலிருந்து அவன் இறந்து விட்டால் அவ்வுடலைப் புதைத்த
நிலையிலிருந்து வெளிப்படும் பல கோடி அணுக்கள் இக்காற்றுடன் படர்ந்துள்ளன.
அந்நிலையில் மனிதன்
உண்டு கழித்த சாக்கடை நீர்களிலும் மனித மலத்திலும் மனிதனால் உண்ணப் பெறும்
கனிகளின் அழுகிய பழங்களில் இருந்தும் இக்காற்றில் படர்ந்துள்ள இவ்வுயிரணுக்களுக்கு
ஆகாரம் எடுக்க அதன் மேல் மோதுண்டவுடன்… அங்குள்ள
ஈரத்தின் உஷ்ண அலையில் இஜ்ஜீவ அணு பட்டவுடன் உருவ நிலை கொண்டு கொசுவாகி புழுவாகி
உரு அமைப்புப் பெற்றவுடன் அது சுற்றி வாழும் தருவாயில் மனிதனின் இரத்தத்தையே ருசி
காண வருகிறது.
நாய் உள்ள இடத்தில் நாய் உண்ணி என்னும் ஒருவகைக் கொசு
இருக்கும். அதைப் போன்று ஒவ்வொரு மிருக இனத்திற்கும் அது அது உள்ள இடத்தில் அதன்
இன வர்க்க உடலில் இருந்து வெளிப்பட்ட உயிரணுக்களின் அமில குணத்தில்
பிறப்பெடுக்கும் அதன் இன வர்க்க சுவாச குணமுடைய பல உயிர்ப் பிறப்புக்கள்
வளர்ச்சி கொள்கின்றன.
ஓர் உயிராத்மா ஓர் ஜீவ உடல் (மனிதனோ, மிருகமோ) அதன் நிலை மாறும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் உயிரணுக்கள்
அதன் நிலைக்கொப்ப அமில குணமுடைய உருக்கொண்டு அந்நிலை (அவ் உருவ நிலை) மாறும்
பொழுது… அதிலிருந்து சில நிலைகள் ஏற்பட்டு ஏற்பட்டு பல உருவ
நிலைகளும் மாறி மாறி வரும் ஜீவ ஜெந்துக்களின் நிலையும் இன்றைய கால நிலையிலேயே
ஏற்பட்டு வருகின்றது.
இவ்வுலகமே மாற்றம் கொள்ளும் தருவாயில் எல்லா ஜீவ ஆத்மாக்களின்
நிலையும் மாறு கொள்ளும் பொழுது எந்த நிலையான மாற்றம் ஏற்படும் என்று எண்ண முடிகின்றதா…?
1.இன்றளவும் இவ்வுலகினில் நடந்து வந்த நிலையே
இக்கலி மாறி கல்கியுகத்தில் எல்லா நிலைகளுமே மாறித்தான் நடக்கும்.
2.ஒன்றிலிருந்து ஒன்று மாறும் பொழுது ஒன்றைப்
போல் ஒன்று இருக்காது. கல்கி என்ற புதிய உலகச் சுழற்சி தான் மீண்டும் ஏற்படும்.
இப்புதிய உலகில் இக்கலியில் மாற்றம் கொண்ட இயற்கைத் தன்மையினால்
இவ் இயற்கையின் ஜீவ அணுக்களெல்லாம் கல்கி யுகத்தில் உருவ நிலைக்கு வரும்பொழுது “எண்ணிலடங்கா மாற்ற நிலை கொண்ட வளர்ச்சிகள்”
ஏற்படப்போகின்றன.
இப்பூமியின் ஈர்ப்பில் ஜீவிக்கும் ஜெந்துக்களுக்கு மட்டுமா…? பறக்கும் பறவைகளின் நிலை எல்லாம் எந்நிலை…? என்ற
வினா எழும்பலாம்.
மாற்றத்தினால் அப்பறவைகளின் நிலையும் மாறப் போகின்றது.
இப்பூமியின் ஈர்ப்பு சுற்றளவில் உள்ள மண்டலத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளின்
நிலையும் தான் இம்மாற்றத்தினால் மாறப்போகின்றது.
இப்பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலமே இப்பூமி ஈர்த்து
வெளிப்படுத்தும் உஷ்ண அலையினால் தான் உள்ளது. அந்நிலையில்
1.இம் மாற்றத்தினால் வெளியிடப் போகும் உஷ்ண
அலையின் வெக்கையான அமில குணங்கள் மாறும் பொழுது
2.இப்பூமியின் ஈர்ப்பில் சுழன்று ஓடும் காற்று
மண்டலத்தில் உள்ள ஜீவராசிகளுக்கு வழக்கமாய்ச் சுவாசித்த
காற்றின் குண நிலை மாறும் பொழுது
3.அதன் எண்ண நிலையும் மாறு கொண்டு அதன்
சுவாசத்தின் நிலையினால் அதன் ஜீவ உடலும் மாறத்தான் போகின்றது.
இந்நிலையினால் பலப் பல மாற்றங்கள் நிகழத்தான் போகின்றன.