பதிவு எப்படியோ அப்படித்தான் உணர்வின் இயக்கங்கள்
இரண்டு நண்பர்கள் பிரியமாக இருக்கின்றார்கள் ஒருவர் தவறு
செய்கின்றார் என்று யாராவது சொன்னால்… நான் சும்மா இருக்கும்
பொழுது… “அப்படி இப்படி என்று” எல்லாம் என்னைத் தவறாகச் சொல்கின்றார்கள்
என்பார்.
1.நாம் பிரியமாக இருப்பதால்
இதைக் கேட்டுப் பதிவு செய்து கொள்கின்றோம்.
2.அடுத்து அவர் தவறு செய்து விட்டு “இல்லை” என்று மறுக்கப்படும் பொழுது அதை ஏற்றுக்
கொள்கின்றோம்… நண்பர் என்பதால்…!
இவர்தான் தவறு செய்தார் என்று மற்றவர் வந்து சொன்னாலும் அது
எல்லாம் எனக்கு தெரியாதங்க…? என் நண்பருடைய சமாச்சாரம்…! என்போம்.
தவறு செய்தார் என்று சொன்னால் கூட… இல்லை நேரடியாக நான் பார்த்தேன் என்று அவர் சொன்னாலும்
1.அப்படி எல்லாம் செய்யக்கூடிய ஆள் இவர் கிடையாது…! தெரியாமல் ஏதாவது நடந்திருக்கும்.
2.நண்பன் மேல் பிரியம் இருக்கும் பொழுது முதலிலே
மறுக்கின்றோம்.
3.இல்லைங்க… நான் நேரடியாக கண்ணிலே பார்த்தேன்
என்று இன்னொரு நண்பர் சொன்னால்
4.அசந்தர்ப்பமாகத்தான் அப்படி இருக்குமே தவிர “அவர் தவறு செய்யக்கூடிய ஆளே இல்லைங்க…” என்போம்.
ஏனென்றால் அவர் மீது இருக்கக்கூடிய பற்று தவறை கூட நாம்
சுட்டிக் காட்டாதபடி “தெரியாமல் தான் நடந்திருக்கும்…” என்று தான் சொல்கின்றோம்.
இதே போன்று ஒரு குடும்பத்தில் இரண்டு பையன்கள் இருக்கின்றார்கள்
ஒருவன் மீது தந்தை பிரியமாக இருக்கின்றார்… இன்னொருவன் மீது வெறுப்பாக இருக்கின்றார்.
அந்த வெறுப்பாக இருக்கக்கூடிய பையன்
வெளியே சென்று ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றுகிறான்… ஒரு நல்ல காரியத்தை அவன் செய்கின்றான். அதை மெச்சி அவர் என்ன செய்கின்றார்…?
நீ யார் பெத்த பிள்ளையோ…?
உன் தந்தையிடம் நான் நன்றி சொல்ல வேண்டும்…! என்று அழைத்து
வருகின்றார். கூப்பிட்டு வந்தவுடன் உங்க பையன் தானுங்களா…? எங்கள் குடும்பத்தையே இவன் காத்தான்…! என்று
உயர்வாகச் சொல்கின்றார்.
அப்படியா…! நீங்கள் நாளைக்கு வந்து
வேறு விதமாகச் சொல்லி விடாதீர்கள் ஐயா…! என்பார் தந்தை.
பையன் செய்த நன்றிக்குச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய
மனது இங்கு தந்தையிடம் இல்லை.
ஆனால் அதே சமயத்தில் பிரியமாக இருக்கும்
இன்னொரு பையன் ஒரு இடத்தில் சுட்டித்தனம் செய்கின்றான். அங்கிருந்து வந்து தந்தையிடம் அவனைப் பற்றி முறையிடுகின்றார்கள் “இவன் தவறு செய்கின்றான்” என்று.
1.நீங்கள் இன்னொரு பையனைச்
சொன்னால் கூடப் பரவாயில்லை
2.இவன் அந்த மாதிரித் தவறு
செய்ய மாட்டான் என்று பிரியமானவனை ஏற்றுக் கொள்கின்றார்கள்
எனக்கு தெரியாதுங்களா…? என்று கேட்கின்றார்.
3.உங்கள் பையன் தான் ஏதாவது
தவறு செய்திருப்பான் என்று தான் சொல்வார்கள்
ஆனால் அவர்கள் போன பிற்பாடு என்ன கேட்பார்கள் ஏன்டா டேய் அவர்கள் என்ன கேட்கின்றார்கள் பார்த்தாயா…? என்று பையனிடம் கேட்பார்கள்.
இன்னொருவன் நல்லது செய்து வந்தான் அல்லவா…! அவனைப் பார்த்து டேய் இங்கே வாடா…! எத்தனை பேரை நீ ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்…? நாளை
என் பெயர் கெட்டுப் போவதற்கு நீ என்ன செய்கின்றாய்…? என்று கேட்பார்.
ஏனென்றால் இந்த உணர்வுக்கொப்ப
அப்படித்தான் “அந்த அறிவுகள் வேலை செய்யும்…” எதனின் உணர்வின் தன்மையோ அது தான் இயக்கமாகும்.
1.ஒரு செடி எந்த மணத்தின்
தன்மை தனக்குள் வைத்துக் கொண்டதோ
2.மற்ற செடிகளின் மணத்தைத் தன் அருகில் விடாது.
இதைப்போல எந்தச் செடியின் மணத்தை நாம் உணவாக உட்கொண்டு பழகினோமோ அந்த மணத்தின் ஞானமே நமக்கும் வரும்… இது வழி தொடர்ந்து வரும்.
ஆகவே அந்த குணத்தின்
இயல்பாகத்தான் நம்முடைய உணர்வின் செயல்களும் அமைகின்றது தாவர
இனத்தின் நிலைகள் கொண்டு. இதைப் போன்று தான்
1.எதனை எடுத்து எதனின் வழிகளில் நாம் இணைத்து
2.அதனின் உணர்வின்
எண்ணங்களாக மாறுகின்றதோ இதனின் உணர்வு தான் இயக்கம்.
இதற்குத் தான் கடவுளின் அவதாரத்தில் இராமனை மூன்றாவது ஸ்தானத்தில் வைத்துள்ளார்கள். இந்த
எண்ணம் சீதாராமா…! ஒரு பையன் மீது எவ்வளவு பிரியமாக இருக்கின்றோமா அந்த சுவை சீதா.
அதே சொல்லை நாம் எடுத்துத் திருப்பிச் சொல்லும் பொழுது இராமன்..!. இராமன்
அம்பை எய்தான் என்றால் அந்த கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான். இதே பதில் தான் மீண்டும் வரும்.
1.யார் மேல் எதன் உணர்வை வைத்தோமோ இந்த உணர்வின் சொல்லை எடுத்து
2.“மோசமானவன்” என்ற பதிவிருந்தால் மீண்டும் அதே
குறையான சொல்லைத்தான் சொல்லும்படிச் செய்யும்.
கடவுளின் அவதாரத்தில் சூரியனின் இயக்கங்கள்
1.அந்தக் காந்தச் சக்தி மற்ற பொருளைக் கவர்ந்த பின்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள்
அந்தச் சுவையைக் கவர்ந்தாலும்
3.அதே எண்ணத்தைக் கொண்டு நுகரப்படும் பொழுது சீதா
சுவை
4.இந்த உணர்வின் நிலைகள் நம் தசையாகின்றது… நினைவின்
சொல்லாக “அந்தந்த எண்ணங்கள் வருகின்றது…”
இந்த இயற்கையின் தன்மையை நாம் புரிந்து கொள்வதற்காக இராமாயணம் மகாபாரதம் கந்த
புராணம் சிவபுராணம் என்ற நிலைகளில் விண்ணுலக ஆற்றலின்
தன்மை உணர்வுகள் கலந்து அது மனிதனாக உருவாக்கப்படும் பொழுது பழமை
எவ்வாறு இன்று புதுமையில் இருக்கின்றது…?
என்று காட்டியுள்ளார்கள்.
பழமை கலந்ததின் உணர்வின்
மாற்றங்கள் எவ்வாறு இருக்கிறது…? என்பதைத்தான்
1.ஒரு மனிதனின் இயல்பு எவ்வாறு மாறுகிறது என்ற
நிலையைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் ஞானிகள்.
2.இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக
அவசியம்.