குப்பையில் வளர்கின்றது “நல்ல சக்தி மணிகள்”
மாற்றத்தின் வளர்ச்சித் தொடர் அலையினால் இக்காற்றுடன் அதன்
சக்தி நிலையும் வளர்ச்சியுறும் நிலையிலிருந்து கூடப் போகின்றது.
காற்றிலிருந்துதான் அத் தீய சக்தி அதன் ஈர்ப்பில் வளர்கிறது.
அதனால் இனம் தான் அத்துடன் கலக்கப் பெறுகிறது என்று உணர்த்தியுள்ளீரே… “வளர்ச்சியுறும் நிலை” என்றால் என்ன…? என்று அடிப்படை வினா எழும்பலாம்.
சூரியனிலிருந்தும் பால்வெளி மண்டலத்திலிருந்தும் நம் பூமியின்
ஈர்ப்புக்கு வரும் குண அமிலமானது பூமியின் சுவாசத்தில் இழுபட்டு அது
வெளிப்படுத்தும் நிலையுடன் பூமியுடன் ஐக்கியப்பட்டு அதன் உயிரணுத் தோன்றி அதன்
வளர்ச்சியில் வளரும் செழிப்பிலிருந்து வெளிப்படும் அமில குணங்களின் நிலை
வேறுபடுகிறது. அழுத்தமான அமில குணங்கள்தான் சூரியனிலும் பால்வெளி மண்டலத்திலும் உள்ளன.
சுவாசத்தில் பட்டு வெளிப்படும் நிலையில் வளரும்
இயற்கையிலிருந்து வெளிப்படும் அமிலத்தின் மாற்றம் உண்டு.
1.இப்பொழுது நாம் பலதரப்பட்ட உணவு வகைகளை உண்டு
மீதியைக் குப்பையாக்குகின்றோம்.
2.அக்குப்பையில் இருந்து அதன் ஈர்ப்பில் உள்ள
சத்துக்களை மட்டும் எடுத்து உன்னத மணிகளைக் காண்கின்றோம்.
இப்படி இது நாள் வரை அமில குணங்களையும் உயிரணுக்கள் சுவாச
நிலைகள் மண்டலத் தன்மைகள் ஒவ்வொன்றின் நிலையையும் உணர்த்தி வந்தோம் என்றால் எதன்
அடிப்படைப் பொருள் காண…?
1.நம் உடலில் பல வகை அமிலங்கள் கொண்ட பல கோடி
உயிரணுக்கள் உள்ளன.
2.இதிலிருந்து எல்லாம் நம் ஞான மணியை ஈர்த்து ஒளி
பெறல் வேண்டும்.
குப்பையில் வளர்கின்றது நல்ல சக்தி மணிகள்.
1.இவ்வுடல் என்ற குப்பைக் கூட்டிலிருந்து நம்
மணிக்கான உரம் எடுத்துக் கொள்ள வேண்டிய செயல் முறையை
2.இத்தியானம் என்ற வழிபாட்டு முறையினை
ஏற்படுத்திக் கொண்டால் பக்குவச் செயல்படுத்தி
3.நம் உடலில் உள்ள பல அமிலங்களில் கலந்துள்ள பல
கோடி உயிரணுக்களில் இருந்து நம் ஞானத்தின் வளர்ச்சிக்கு சத்தெடுத்து
4.தெய்வ ஞானம் பெற்று…
ஒவ்வொரு மனிதனும் “தான் அடைய வேண்டும் என்று எண்ணும்…” உன்னத நிலை எது…? என்று அறிந்து ஒளி பெறலாம்.
சக்தி நிலை சகலத்திலும் இருந்தாலும் அதற்குகந்த வழி
நிலையில்தான் அச்சக்தி நிலை வளர்கின்றது. மாற்றவோ திருத்தவோ மனித ஞானத்திற்கு வழி
தெரிகின்றது.
இருந்தாலும்… தன் ஞானத்தைப் பலவற்றிலும்
கலக்கவிட்டுள்ள மனிதன் தன்னைத் தானே உணர்வும் ஞான வழிபாட்டினை அறியாமல் வாழுகின்றான்.
கால நிலையின் குறைவை… இப்பொழுது உள்ள மனித வாழ்க்கையின்
சந்தர்ப்ப காலத்தைப் பயன்படுத்தி வாழுங்கள்.