துருவத்தின் வழி… புருவத்தின் வழி… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர வேண்டும்
அகஸ்தியன் துருவனாகி பின்
திருமணமாகி கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாக இணைந்து இரு
உணர்வும் ஒன்றென இணைந்து துருவ மகரிஷி ஆகித் தனக்குள் சிருஷ்டித்து இரு உயிரும் ஒன்றாக இணைந்து
இருளை அகற்றி ஒளி என்ற உணர்வாக ஒன்றி வாழ்ந்து ஒளியின் சரீரமாகி எந்த துருவத்தை
எண்ணி ஏங்கினார்களோ அதையே எல்லையாக்கி துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.
அகஸ்தியனும் அவன் மனைவிவும் பிறவியில்லா நிலை அடைந்து வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தினின்று வெளிப்படும் ஒளி அலைகளைச் சூரியன் கவர்ந்து வருகின்றது. பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
1.நமது பூமி துருவத்தின் வழியாக இழுக்கின்றது.
இங்கே படர்கின்றது.
2.அதிகமாகப் பாயும் இந்த அதிகாலை நேரத்தில் துருவத்தை உற்று நோக்கி
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் அதை நாம் நுகர நேர்கின்றது
4.நம் உடலுக்குள் அது பரவுகின்றது
நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களுக்கும் அது கிடைக்கின்றது.
அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின்
சக்தியைச் சேர்த்துக் கொண்டு வந்தால் இந்த உணர்வுகள் சிறுக
சிறுக நல்ல அணுக்களின் பெருக்கமாகி தீமையான அணுக்களைத் தணித்து நல்ல அணுக்களாக உருவாக்குகின்றது
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி
உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி துருவ
நட்சத்திரத்தின் பால் உங்கள் நினைவினைச் செலுத்தி அதனுடைய
அருள் சக்தி பெற வேண்டும் என்று கண்களை மூடி ஏங்கித்
தியானியுங்கள்.
ஈஸ்வரா என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் உயிரை நினைவுக்குக்
கொண்டு வாருங்கள். “ஈஸ்வரன் என்றாலே
உயிர் தான்…” அவனிடம் வேண்டி நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் இப்பொழுது செலுத்துங்கள்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை
இப்படி திரும்பத் திரும்ப நுகரும் பொழுது
1.புருவ மத்தி வழிதான் உடலுக்குள் அந்த அலைகள்
செல்கின்றது.
2.புருவ மத்தியின் வழி வரும்
பொழுது “குறு…குறுப்பும்… சிலருக்கு ஒளியும் நல்ல உணர்ச்சிகளும்” தெரிய வரும்.
3.சிலருக்கு அந்தக் “குறு…குறு…” என்று இருக்கும்
பொழுது சிறிது வலியும் கூட இருக்கும்.
4.காரணம் நம் உடலில் உள்ள தீய அணுக்களைக் கொன்றிடும் அந்த
அரும்பெரும் சக்தி அங்கே படரும் பொழுது
5.தீய அணுக்களுக்குச்
செல்லும் உணர்வினை அது மாற்றுகின்றது.
ஆகவே உங்கள் நினைவனைத்தையும் துருவ நட்சத்திரத்தின்
பால் செலுத்தி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள் “திரும்பத் திரும்ப…”
அந்தச் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்கம் இருக்க வேண்டும். ஏங்கும்
பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சுவாசிக்க நேர்கின்றது “புருவ வழியில்…”
1.நமது உணர்வுகள் நுகரும் அல்லது செல்லும் பாதை
அந்தப் புருவம் தான்
2.இரண்டு கண்களுக்கு இடையில் புருவ மத்தியில்
உயிரின் இயக்கம்…
3.நம் உயிரின் துணை கொண்டு துருவத்தில் இருந்து
வரும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை
4.புருவத்தின் வழி நம்
உடலுக்குள் உள்ள அணுக்களுக்கு அந்த உயர்ந்த சக்தியினை நாம் ஊட்டுகின்றோம்.
5.நம் இரத்த நாளங்களில் அதைப் பெருக்குகின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள
ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி உடலில் இருக்கக்கூடிய எல்லா
அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும்
என்று ஏங்கித் தியானியுங்கள்.
கண்ணின் நினைவலைகளை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது உங்கள்
உணர்வலைகள் இரத்த நாளங்களில் கலப்பதும்… “உங்கள் உடலில் உள்ள அணுக்களில் பெருகும் அந்த
உணர்ச்சிகளை அறியலாம்…”