விண்ணின் ஆற்றலைக் கண்ட மெய் ஞானிகளின் நுண்ணிய அறிவினை உங்களையும் பெறச் செய்கின்றோம்
விஞ்ஞான அறிவால் ஒரு மனிதனுக்குள் பதிந்த நிலைகளை… இங்கிருந்து இராக்கெட்களைக் கோள்களுக்குள் ஏவி… அதனின்
உணர்வை இங்கே தரையில் இருக்கக்கூடிய எந்திரத்தின் துணை கொண்டு கவர்ந்து விஞ்ஞானி படம் எடுக்கின்றான்… அதை அறிகின்றான்.
ஒளி எவ்வளவு தூரம் பாய்கிறதோ… அதாவது இப்பொழுது லைட் போட்டோம்
என்றால் அது எவ்வளவு தூரம் சீறிப் பாய்கின்றது என்ற நிலையைக் கணக்கிட்டு… விஞ்ஞானக் கருவிகளின் மூலம் “ஒளி
ஆண்டு” என்று கண்டு சொல்வார்கள்.
ஒரு எரி நட்சத்திரம் வியாழன் கோளில் விழுகின்றது என்று வைத்துக் கொள்வோம்,
1.அதை அங்கிருந்து படம் எடுத்து இங்கே வருவதற்கே அதனுடைய வேகத்துடிப்பு அதிகமாகி நான்கு நாட்களாவது ஆகும்… குறைந்தபட்சம்.
2.அந்த நான்கு நாள்களில்… படம் எடுத்த இந்த உணர்வுகள் அலைகளாக இங்கே அனுப்பச் செய்து
3.இங்கே எந்திரத்தின் துணை கொண்டு அது சிறிதளவு புள்ளியைப் பெரிதளவாக அதைப் பெருக்குகின்றான்.
4.பின் அது விழுந்த இடத்தினையும் அவன் அறிகின்றான்.
5.இவன் அங்கே படம் எடுத்து வந்தாலும் “இந்த உணர்வலைகள்” பின் வரும் பொழுது “எதிர்நிலையான அலைகளாகப் பட்டால் இது பிரிக்கும்…”
ஆனால் அங்கே படம் எடுத்த உணர்வின் தன்மையை…
மீண்டும் அவன் எடுப்பான் என்றால் அவனுக்குள் அங்கு அந்த ஒளியின் தன்மை எடுத்து
அலைகளாக அனுப்பும் பொழுது “இங்கே மாற்றங்களே ஏற்படும்…”
ஆக இங்கே ஒரு எல்லையைக் குறித்து இதனின் வேகத் துடிப்பு
வரும் பொழுது சுழற்சியின் வேகத்தில் கண்டுணரலாம். மலை போன்ற உள்ள அந்த பெரும்
பாறையின் தன்மைகள் அது சுழன்று வரப்படும் பொழுது… வியாழன்
கோளிலே வந்து மோதும் வேகமும் வியாழன் சுழற்சியின் வேகம் அதிகரிக்கப்படும் பொழுது… அந்த வியாழனிலோ தனது ஈர்ப்பின் சக்தி அதிகமாகும் பொழுது அது பனிப்பாறைகள்
தான் அவை.
சுழற்சியின் வேகம் கூடும் பொழுது அதன் ஈர்ப்புக்குள் வந்தவுடனே இது
சுக்குநூறாகத் தெறித்துப் பஸ்பம் ஆக மாறும்.
அதைப்
போன்ற எரிகற்கள் பூமியின் ஈர்ப்புக்குள் வரும்
பொழுது பெரும் பாறாங்கல்லாக இருப்பது சிறு கல்லாகத் தேய்ந்து
இங்கே விழுகின்றது.
1.அது இங்கே உராய்வின் தன்மையில் “எரியவில்லை” என்றால்
2.மனிதர்கள் இங்கே பூமியில் வாழவே முடியாது.
ஆக இந்த சுழற்சியின் வேகத்திற்கும் சுழற்சியின் வேகத்தில் வரும் காற்று
மண்டலத்தில் உராய்ந்து தான் இந்த இதனுடைய நிலைகள் அது குறைந்து வருகின்றது. ஆக
இதைப் போன்று பன் மடங்கு சுழலும் நிலைகளில் அது வருகின்றது.
இதை எல்லாம்
விஞ்ஞானிகளும் இன்று கண்டு நமக்குச் சொல்கிறார்கள்.
இதே மாதிரித் தான் மெய் ஞானிகள் அன்று அவர்கள் கண்டுணர்ந்தது.
1.தனக்குள் இருக்கும் ஆற்றலின் தன்மை கொண்டு விண்ணிலே தன் எண்ணங்களைப் பாய்ச்சுகின்றான்…. அனைத்தையும் அறிகின்றான்.
2.அந்த மெய் ஞானத்தின் உணர்வின் தன்மையை உங்களில் பதிவு செய்யும் பொழுது
3.இந்த உணர்வைத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப நாம் எண்ணும் போது
4.கோடிக் கணக்கான சரீரத்தில் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் அது பெருகி
5.அது எப்படி நமக்குள் மனிதனாக உருவாக்கியது…? என்ற நிலையை நாம் காண முடியும்.
அந்த
மெய் ஞானிகளில் “முதன்மையாக…” 2000 சூரியக் குடும்பத்தையும் கண்டறிந்தவன் அகஸ்தியன்
1.அவன் கண்டுணர்ந்த உணர்வுகள்… அவனில் விளைந்த உணர்வுகள் தான் இன்றும் நம் பூமியில் படர்ந்து கொண்டு உள்ளது.
2.அவன் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் அறிந்து… தீமைகளை அகற்றி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி
3.துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்தும் வளர்ந்து கொண்டுள்ளான் அகஸ்தியன்.
அவன்
அருளை நாம் பெற்றால் அவன் கண்டதை நாமும் முழுமையாகக் காணலாம்… அறியலாம். பிறவியில்லா
நிலை அடையலாம்… ஒளியின் சரீரம் பெறலாம்.