ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 24, 2024

ஆத்மாவின் “விழி நிலையின் ஒளி நிலை”

ஆத்மாவின் “விழி நிலையின் ஒளி நிலை”


பிறவா வரம் கொண்டு ஜோதி நிலை பெறும் ஒளி நிலையின் உயர் தத்துவத்தை உணர்ந்தீரானால் உயர்வு கொண்ட ஒளி நிலையின் உண்மை புரியும்
 
சகல ஜீவசக்திகளிலும் சரீர உணர்வினால் செயல்படும் ஒளித்தன்மையின் விழி நிலை ஜீவராசிகளுக்குத் தான் உண்டு.
 
பூமியும் பூமி வளர்க்கும் தாவர இனம் மற்றையத் தாதுப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்டிருந்தாலும் அவற்றின் முலாம் வளர்ச்சியின் முதிர்வு நிலையில்
1.ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றாய் மாறி மாறி வரும் வளர்ப்பு, அழிவு, வளர்ப்பு என்ற நிலையில்
2.ஒவ்வொன்றின் வார்ப்பு வளர்ப்பில் அணு சமைத்து வளர்ந்த முலாம் கொண்டு
3.உயிரணு தோன்றி ஒவ்வொன்றிலும் பல வார்ப்பு நிலையில் வளர்ந்து, அழிந்து சக்தி கொண்டு பல நிலைகளுக்குப் பிறகு
4.ஜீவ சரீரம் பெறும் விழி நிலையாற்றல் ஊர்வன, நீந்துவன, பறப்பன, நடப்பன
5.இத்தொடர் ஜீவராசிகளில் விழி நிலை ஒளிகாணும் உருவ எதிர் நிலையை அறியும் ஆற்றல் வழி வருகின்றது.
 
பலவில் முதிர்ந்து மனித எண்ண செயல் அங்க அவயவங்களின் ஆற்றல் வளர்ப்புநிலை பல கோடி ஆண்டுகளுக்குப் பின் உயிரணு தோன்றி பல வார்ப்பில் மோதுண்டு வளர்ச்சி கொண்டு முற்றிய நிலையில்
1.விழியின் ஒளியை எதிர்ப்படும் பொருள் கண்டுவிழியின் பாப்பாவில் படம் பிடித்து
2.உணர்வு கொண்ட எண்ணத்தில் அறியும் வாழ்க்கை நிலையிலிருந்து
3.சாதாரண பிறப்பு இறப்பு என்ற நிலையில் ஜீவசக்தி பிரிந்து உடலை விட்ட உயிராத்மாவிற்கு ஆத்ம ஒளி வட்டம்தான் உண்டு.
 
காற்றலையில் இப்பூமி வளர்ப்பில் ஜீவன் பிரிந்த ஆத்ம அலைகள் சுழன்று கொண்டே காற்றலையில் மிதந்து கொண்டே இப்பூமி ஈர்ப்பில் சுழன்றாலும் விழியால் பார்க்கும் நிலை அவ்வாத்மாவிற்கு இல்லை சுவையையும் மணத்தையும் நுகரும் சுழற்சி வட்டத்தில் தான் சுழலுகின்றது.
 
ஜீவனுடன் உள்ளவர்களின் சரீர எண்ணத்தால் உடலை விட்டுப் பிரிந்தவர்களின் நினைவில் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது அவ்வலையின் உணர்வு இவர்களின்மேல் மோதி அத்தொடர்புடன் அவர்களுக்கும் ஜீவகாந்த அலைத்தொடர்பு கிட்டியவுடன் அவர்கள் தொடர்புடன் ஆவி ஆத்மாவும் விழி அலை பிம்பத்தை எதிர்கொண்டு பார்க்க முடிகின்றது.
 
அலை உணர்வின் தொடர்பைக் கொண்டு பார்க்கும் நிலையானது
1.எப்படிப் புகைப்படக் கருவியைக் கொண்டு அதில் பூசப்பட்ட அமிலப் புகை பிம்ப தாள்களை அக்கருவியுடன் பொருத்தி
2.அதற்குகந்த விசை அழுத்தத்தைத் தந்து எதிர் பிம்பத்தைப் பதிவு செய்வதைப் போன்று ஆவி ஆத்மாக்களின் செயல் நிலையுண்டு.
 
எதிர் நிலையில் காண்பதை விழியில் காணும் நிலைதான் மனித சரீரத்திற்கே உண்டு. தன் முதுகை தான் காண முடியாது. தன் பிம்பத்தையே எதிர் அலையின் நிலைக் கண்ணாடியிலோ நீரிலோதான் பார்க்கும் நிலை உண்டு.
 
ஆத்ம தியான சக்தியைக் கொண்டு ஞான திருஷ்டியால் விழியை மூடிக்கொண்டு ஞானத்தால் பெறும் தியான சக்தியில் ஆத்ம சக்தியின் உயர்வு நிலையால் இச் சரீரக் கூட்டிலிருந்தே சகல சித்துக்களையும் பெறும் வழித்தொடர் கொண்டு ஞானத்தால் காணும் விழியின் ஒளி நிலை காட்சிகளை எண்ணத்தால் எண்ணியவை யாவையுமே காணத்தக்க விழி நிலையின் ஒளித்தன்மை இவ்வாத்ம அலையே பெற்று விட்டால் ஏகமும் ஒன்றான அகில சக்தியின் தொடர்பிலும் விழி அலை ஒளி நிலையில் காண முடியும்.
 
இச் சரீரக் கூட்டின் சமைப்பில்
1.காந்த மின் அலையின் வலுத்தன்மையை எலும்புக்கூடுகள் பெறும் தன்மை கொண்டுதான்
2.ஆத்மாவின் விழி நிலையின் ஒளி நிலை பெறும் ஆத்ம ஜோதியான ஜோதி நிலை சக்தியினால்
3.ஏகத்தையும் காணும் ஆத்ம நிலையின் ஜோதி நிலை கொண்டு
4.நம் வளர்ப்பின் தொடருக்கு வழிகாட்டிய ரிஷி சக்தியின் உயர்வுத் தொடர்புடன்
5.அவர்களின் வளர்ப்பின் வட்டமுடன் நம் ஐக்கியச் செயலையும் ஐக்கியப்படுத்தலாம்.