ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 12, 2024

எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர் “இனி வரப்போகும் காலத்தில் நிகழத்தான் போகின்றது”

எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர் “இனி வரப்போகும் காலத்தில் நிகழத்தான் போகின்றது”


இக்கலியில் பூமியின் நிலையையே நிலை தடுமாற வைப்பவனும் இம் மனிதன்தான். இப்பூமி நிலைக்க கல்கி யுகம் காணச் செயல்படுத்தப் போகிறவனும் இம்மனிதன் தான்.
1.மனிதன் மனித ஞானம் பெற்றால்
2.மனிதனால் மனித ஆத்மாக்களை உயர்ந்த நிலையில் நிறுத்த முடியும்.
 
இன்று நம் பூமியில் மனிதக் கரு வளர நம் பூமி மனித ஆத்மாக்களை வளர்க்கும் தன்மை கொள்ள வியாழனிலிருந்து மீண்ட மனித ஆத்மாக்கள் இருந்ததினால் தான் மீண்டும் நம் பூமி வளர்ந்த பிறகு நம் பூமியில் மனித ஆத்மாக்கள் வாழக்கூடிய கருவே வளர்ந்தது.
 
பல சப்தரிஷிகளும் அவர்களின் வழித்தொடர் பெற்ற பல நிலை கொண்டவர்கள் இருந்தாலும் இப்பூமியில் வாழ்ந்த மனித ஆத்மாக்களின் சக்தி நிலை உயர்ந்து தன் ஞானம் பெறும் ஆத்மாக்கள் வளர்ந்து இப்பூமியின் மாற்றக் காலத்தில் இம்மனித வாழ்க்கையில் கொண்டுள்ள ஆசாபாசங்களிலும் நித்தியக் கடன்களிலும் மூழ்கியே இக்கலியின் மாற்றத்தில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் கலி மாறும் தருணத்திலும் அதே சுழற்சி ஓட்டத்திலிருந்து தான் இதிலிருந்து மீள முடியாமல் மீண்டும் அறிவு ஞானம் கொள்ளும் மனிதக் கரு வளர்ந்து அக்கருவின் செயலில் இருந்து தான் மனித உருவங்களே இச் சூரியனைச் சுற்றியுள்ள “48 மண்டலங்களின் வளர்ச்சியில் மனித ஆத்மாக்கள் வாழும் நிலை பெறும்…
 
நம் சூரியனின் சுழற்சியில் பல மண்டலங்கள் ஓடினாலும் நம் பூமியின் நிலைக்கொப்ப மனித ஆத்மாக்கள் வாழக்கூடிய இச்சக்தி மண்டலத்தின் கலி மாறி கல்கி யுகம் பெற்று நம் பூமி சுழலும் தருணத்தில்
1.இன்றைய நிலையில் வாழும் ஆத்மாக்களின் பல கோடி எண்ணங்களை மாற்றிச் செயல் புரிய
2.பல சக்தி நிலைகள் செயல் கொண்டு செயலாற்றித்தான் கல்கி யுகம் வாழ முடியும்.
 
இவ்வுலக மாற்றத்தினால் இவ்வுலகில் உள்ள மனித ஆத்மாக்களின் உடல் அழிந்தாலும் அவர்களின் உயிரணுவும் உயிராத்மாவும் சப்த அலைகளும் சகல எண்ணத்தில் விட்ட சுவாச அலைகளும் பூமியின் சுழற்சியில் சுழன்றுள்ள நிலையில் மீண்டும் கலி பிறந்தால் இவ் எண்ண வளர்ச்சி எங்கு செல்லும்…?
 
இப்பூமியின் காற்று மண்டலத்தில் கலந்துள்ள இந்நிலைகள் எல்லாமே அடுத்த நிலைக்கு வர ஏதுவாகின்றதா? என்ற வினா எழும்பலாம். இதன் நிலையில் இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் சில நிலைகள் ஏற்படலாம், எந்நிலை கொண்டு…?
 
இப்பூமியின் மாற்றத்தினால் இப்பூமியில் இன்று வாழும் மனித ஆத்மாக்களும் பல கோடி ஜீவஜெந்துக்கள் தாவரங்கள் இன்று பூமியில் வளர்ந்துள்ள கனி வளங்கள் நீர் நிலைகள் மனித உடலை விட்டுப் பிரிந்து வாழும் அனைத்து உயிராத்மாக்கள் உயிரணுக்கள் இது நாள் வரை நம் பூமியின் காற்று மண்டலத்தில் நிறைந்துள்ள சப்த அலைகள் அனைத்து நிலைகளுமே இப்பூமியின் மாற்றம் நிகழும் தருவாயில் பல நிலைகள் மாறி கலியில் இன்றளவும் வளர்ந்து விட்ட நிலையில் மாற்றம் காணப் போகின்றோம்.
 
பல கோடி ஆண்டுகளாய் மாறாமல் சுழன்றுள்ள பலரின் சுவாச அலைகள் எல்லாம் இன்று நாம் எடுக்க முடியும்.
1.இராமாயண காலத்திலும் கிருஷ்ணாவதார காலத்திலும் மச்சாவதார காலத்திலும் மனித ஆத்மாக்கள் விட்ட சப்த அலையை
2.இக்காற்றிலிருந்து அதன் சுழற்சி வட்டத்தில் ஞானம் பெற்றோரினால் ஈர்த்து எடுக்க முடியும்.
 
ஆனால் இக்கலியின் மாற்றத்தினால் இந்நிலையும் மாறப் போகின்றது. எந்நிலையில்…?
 
இன்று இக்காற்று மண்டலத்தில் வாழ்ந்தவரின் சப்த அலைகள் அனைத்துமே உள்ளனவா…? என்ற வினா எழும்பலாம்.
 
இராமாயண காலத்தில் உள்ள நிலைகளைக் காவியமாய்ப் படைத்து இன்றளவும் அந்த இராமாயண கதை மனித ஆத்மாக்களிடம் கலந்துள்ள நிலையில் இச்சப்த அலையின் ஈர்ப்பும் அதன் நினைவு சக்தி சுழன்று உள்ள ஜீவ ஆத்மாக்கள் உள்ளவரை எச் சப்த அலையும் மாறாது.
 
பல கோடி ஆண்டுகளானாலும் அதன் தொடர் வட்டத்தில் செயல்படும் சப்த அலையின் நிலை சக்தி மாறாது.
 
இக்கலியில் மாறுகிறது என்றால் இவ்வுலக மாற்றத்தில் ஏற்படும் அதிர்வினால்
1.சில ஒளி அலைகள் நம் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல்
2.அனைத்திற்கும் பொதுவான பால்வெளி மண்டலத்தில் கலந்து விடும் நிலை பெறுகின்றது.
3.இன்னும் பல சப்த அலைகள் இப்பூமியின் ஈர்ப்பில் இவ்வதிர்வினால் மோதுண்டு இப்பூமியுடன் கலக்கும் நிலை பெறுகின்றது.
4.பல பல மாற்ற நிலைகள் இக்கலி மாறிக் கல்கியில் காணப் போகின்றீர்கள்.
5.இவ் ஈஸ்வரப்பட்டன் உணர்த்தும் நிலை பைத்தியமாகத் தோணலாம்.
6.மனித ஆத்மாக்களின் எண்ண நிலை இன்னும் தடுமாற்றம் கொள்ளப் போகின்றது.
 
இன்று உலகின் பல திரையறியச் செயல்படும் கருவிகளும் இக்காற்றிலிருந்து ஈர்த்து ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஒலி அலைகளைப் பரப்பி வாழும் நிலையில்
1.மனிதனால் செயற்கைக் கோள்களை ஏவி விட்டு அதிலிருந்து உணரும் ஒளி அலைகளும் ஒலி அலைகளும்
2.இவர்கள் இன்று செயலாற்றும் முறைப்படி செயலாகாது.
 
இயந்திரத்தைத் துணைகொண்டு காற்று மண்டலத்தில் இவர்கள் இன்று பிரித்து எடுக்கும் நிலையெல்லாம் செயல்படுத்தும் முறையில் இன்றுள்ள நிலைக்கொப்ப செயலாக்க முடியாமல் அதற்காக இன்னும் பல புதிய சாதன முறைகளை மனிதன் உருவாக்கப் பார்ப்பான்.
 
இக்காற்று மண்டலத்தின் விஷத்தன்மைகள் கூடி ஆவி உலகில் வாழும் ஆத்மாக்களின் வெறி உணர்வும் அதிகப்பட்டு எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர் இனி வரப்போகும் காலத்தில் நிகழத்தான் போகின்றது…
 
மனித ஆத்மாக்களே…! உங்களை நீங்கள் உணர்ந்து
1.என்றிருந்தாலும் மடியத்தான் போகின்றீர்கள் என்று எண்ணம் கொள்ளாமல்
2.மனித ஆத்மாக்களால்தான் நிகழப் போகும் சக்தியை மனிதன் உணர்ந்து செயல்படப் பல நிலைகளைப் போதிக்கின்றோம்.
3.மனிதனாய் அறிவு கொண்டு அன்பு பட்டு ஞானம் பெற்றிட வாருங்கள்.
4.இம்மனித ஆத்மாவிற்குத்தான் அறிவாற்றலை வளர்க்கும் ஆற்றல் உண்டு.
 
அறிவு நிலை கொண்ட மிருகங்கள் வாழ்ந்தாலும் மனிதனை ஒத்த ஞான சக்தி பெறும் தன்மையற்ற நிலையில் தான் மிருக இனம் உள்ளது. தேவனாய் வாழக்கூடிய மனிதன் தன் நிலை உணர்ந்தால் தேவனாகலாம்.