
குருதேவரின் காட்சி
மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளியது போன்று அவர் அருளை நீங்கள் பெற்று அந்த அருளைப்
பெறச் செய்து ,அந்த குரு வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஏங்கிப் பெறுவோம்;
அகஸ்தியன்
துருவனாகி, துருவ
மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான நிலையில் நமது மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஏங்கிப்
பெறுங்கள்.
கண்ணைத்
திறந்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனிடம்
வேண்டி ஏங்கித் தியானிங்கள்.
கண்ணைத்
திறந்து நீங்கள் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த அருளைப் பெற குரு அருளைப் பெற
குரு அருளின் துணை கொண்டு அகஸ்தியன் அருளப் பெற அகஸ்தியன் துருவனான அந்த அருளைப்
பெற துருவ நட்சத்திரமான
அந்தப்
பேரருளைப் பெற ஏங்கித் தியானிங்கள்.
இப்போது
நம் குருவின் அருளும் அவர் கண்ட துருவ நட்சத்திரத்தின் அருளும்
நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.
அந்த உணர்வுகள் உங்களில் காட்சி கிடைப்போர் அதிர்ஷ்டசாலிகளே…!
இப்போது
தபோவன குரு பீடத்தில்… சூரியன் வடிவில் இருப்பதை நேராக உற்றுப்
பாருங்கள்.
மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அந்தப்
பேரருள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இப்போது அங்கே வடிக்கப்பட்டிருக்கும்
சூரியனின் படத்தைப் பாருங்கள்…
ஏங்கித் தியானிங்கள்.
அதிலே
அற்புதக் காட்சிகளைக் கொடுப்பார் குருநாதர்.
துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின்
நினைவைப் புருவ மத்தியில் வைத்து இப்போது அந்த அருளைப் பெற வேண்டும் என்று சூரியனிலிருந்து
பெறும் போது “குரு
அருளால் பெறப்பட்ட அந்த ஆன்மாவை” நீங்கள் உணர முடியும்…
அந்தக்
காட்சியாகவும் பார்க்க முடியும்.
நமது
குரு அருளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இப்போது நீங்கள் சுவாசித்து உங்கள்
உடலுக்குள்ளும் மகிழ்ச்சி ஊட்டும் நல்ல உணர்ச்சிகள் உங்கள் உடலிலே உருவாகும்.
உங்களது
ஈரத்த
நாளங்களில் அந்த அரும் பெரும் சக்தி உள்ளுக்கே அது சுழன்று வரும். அந்த
உணர்ச்சிகள் உங்களிலே தோன்றும்.
கண்ணை
மூடுங்கள். உங்கள் புருவ மத்தியில் நினைவைச் செலுத்துங்கள். உங்கள் உயிரான ஈசனிடம்
கேளுங்கள்… வேண்டுங்கள்.
குரு
வழியில் அகஸ்தியன் துருவனாகி துருவ
மகரிஷியான
அந்த அரும் பெரும் சக்தி குரு வழியில் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள்
உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள்
கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்தி இரத்த நாளங்களில் கலக்கச் செய்து, உங்கள் உடலிலுள்ள ஜீவ
அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிங்கள்.
1.குரு அருளால்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும்… குரு அருளும்…
2.உங்கள்
உடலுக்குள் இயங்கிக் கொண்டிருப்பதை இயக்கிக் கொண்டிருப்பதை உணர முடியும்.
3.உங்கள்
ஆன்மாவில் அவருடைய உணர்வுகள் காட்சியாகவும் வரலாம்
உங்கள்
ஆன்மாவில் படர்ந்திருப்பதை நீங்கள் நுகரப்படும் போது டிவி.யில் எப்படி அது கவர்ந்ததைப் படமாகப் பார்க்கின்றோமோ,
இதைப் போல் உங்கள் உணர்வின் தன்மை உயிரிலே பட்டு அந்தக்
காட்சியாகவும் அறிய முடியும்.