மெய் ஞான சக்தியின் உருவகம்தான்… “உருவான சக்தி அனைத்தும்”
நிழலுக்காகக் குடை தேடுகின்றோம்… வெய்யிலில்
நிரந்தரக் குடில் அமைக்கின்றோம். வாழ்க்கையில். அதைப் போன்று
தெய்வத்தின் சக்தி நிலையையும்…
1.அவசரக் காலங்களுக்குத் தெய்வம் வந்து காக்குமென்ற நம்பிக்கைக் குடையைத்
தேடுகின்றோமே தவிர
2.நிரந்தரக் குடிலமைப்பைப் போல் ஆத்ம தெய்வத்தைத் தெய்வ சக்தியாக்கிக்
கொள்வதில்லை.
“சொல்வாக்கு செல்வாக்கு சகல சக்திகளையும்” ஆத்ம ஞான
வளர்ச்சியினால் வழிப்படுத்தும் ஆற்றல் எண்ணத்தின் உணர்வினால் வழியமைத்துக் கொள்ள
முடியும்.
ஆலயத்தைக் காட்டி எண்ணத்தைக் குவித்து உயர வழி காட்டிய தொடர் நிலை இன்று, ஆலயமென்ற ஸ்தலத்தில்தான் ஆண்டவன் அருள் நிலையை அடையும் பொக்கிஷமாக
உணர்வின் மோதலின் உந்தல் பல ஆயிரம் ஆண்டுகளாக மனித உணர்வின் பிறப்புடன் தொடர்பு
கொண்டு பக்தி இயக்க அலைத் தொடர்பின் போற்றித் துதித்து “தன்னைத்தான்
தாழ்த்தி… தெய்வத்தின் உயர்வைப் புகழ்ந்து வழித் தொடர்
பிறப்பில் தான் வந்துள்ளோம்…”
வழித்தொடர் பிறப்பென்பது
1.பிறப்பெடுத்த ஆத்மா பிறப்பில் வளர்த்த எண்ண வேட்கையின் “அலை சக்தியின் இறப்பில்”
2.ஆவி ஆத்ம நிலையின் வேட்கை அலையின் எண்ணம் அதன் பிறப்பு வாழ்க்கையில்
வளர்த்த வீரிய பதிவு நிலையின் பக்தி நிலை
3.பிறப்பில் வாழும் மனித ஆத்மாவின் அலை ஈர்ப்புடன் உணர்வின் எண்ணத்தில் மோதி… அத்தொடர்பில் வெளிப்படுத்தும் உண்மைதனை
4.மனிதன் இன்று தெய்வம் பேசுகின்றது முருகன் வந்து அருள் சொல்கின்றார் என்ற
தெய்வங்களின் நாமத்தைக் கொண்டு வளர்ந்த அவர்கள்
5.வளர்த்த கவிநயப் போற்றல் கவிதைகளை வழித்தொடரில் உருப்போட்டு ஜெபித்து
6.பல கோடி கோடி ஒன்றின் தொடர்பில் ஒன்று உருண்டு உருண்டு வளரும்
ஆதிசக்தியின் வளர்சக்தியின் வீரியத் தொடர்பினை
7.தன் ஞானத்தின் உயர்வு வழித் தொடரில் செலுத்தாமல் ஏட்டுப்படிப்பில் படிக்கும்
போதனையின் அறிவு நிலையின் தொடர் வட்டத்தைப் போன்றுதான்
8.இன்றைய பக்தி முறையின் வழிபாட்டு நிலையும் உள்ளது.
ஒன்றுடன் ஒன்று கூட்டி அதன் மாற்று விகிதத்தில் மாறி வரும் உருப்பெறும்
தொடர்பினால் பிறிதொரு நிலையை ஆராயும் தன்மை அடிப்படை ஞானத்தில் மனித எண்ணம் செல்ல
வேண்டும்.
மிருகங்களின் தன்மையில் ஒளி பாய்ச்சி ஒலி ஈர்ப்பில்…
1,ஓர் ஆட்டின் தொடர்பில் ஆட்டு மந்தையே செல்வதைப்போன்ற நிலை தான்
2.இன்றைய மனிதனின் வழித்தொடரும் உள்ளது.
பல கோடி மனிதர்கள் உள்ளனர் என்றால்…
ஒன்றுக்கொன்று மாறு கொண்டு சக்தி நிலை கொண்டுதான் உருப்பெற்றுள்ள மனித நிலை…
1.இவ்வெண்ணத்தின் உணர்வைச் செலுத்தக்கூடிய ஞானக்கூட்டுச் சேர்க்கையால்
2.ஒவ்வொரு மனிதனுமே தன்னுள்ளுள்ள சக்திப் படைப்பினை வளர்ப்பின் வளர்ப்பாய்
வழித் தொடர்களாகப் படர்ந்துள்ள அமிலக்கூறின் சத்தெடுத்து
3.ஒவ்வொரு மனிதக் கோளத்திலும் அதைச் சமைத்து சமைப்பின் சுவையை ஆத்ம முலாம்
சுவைத்து
4.ஆத்மாவின் உயர்வைக் கொண்டு அகில சக்தியின் உன்னத சக்தியாய்ப் பிரித்து
உயர்வுப் படைப்புகளைப் படைக்கலாம்.
மனித எண்ண சக்தியின் வளர்ச்சி கொண்டு… எண்ணத்தின்
ஞானத்தால் சாதிக்கவல்ல சக்தித் தன்மை உயர்வு தானப்பா “சூரிய
சக்தியும் சகல வளர்ந்த சக்தி நிலைகளுமே…”
1.வாழ அமைக்கும் ஜீவாதார பாதுகாப்பு வேலிதான் உயர்வு என்ற உருவகக்
கோபுரங்கள் கட்டி உழன்றுள்ள மனிதன்
2.உணர்வின் எண்ண ஞான சக்தியின் உருவகம்தான்… “உருவான சக்தி அனைத்தும்” என்றுணர்ந்து செயல்பட வேண்டுமப்பா.