ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2024

மனப்போராட்டமும்… உடலில் வரும் வலி வேதனைகளும்

மனப்போராட்டமும்… உடலில் வரும் வலி வேதனைகளும்


சில குடும்பங்களில் ஒருவருக்கொருவர் தேளும் பாம்புமாக இருப்பார்கள். எவ்வளவு தான் இருந்தாலும் உள்ளே ஒன்றுக்கொன்று வெந்து கொண்டு தான் இருக்கும்... ஒருவருக்கொருவர் போராட்டம் அதிகமாக இருக்கும்.
1.அச்சுறுத்தும் உணர்வுகளும் பயமான உணர்வுகளும் அதிகமாகும் பொழுது உடலுக்குள் போர் நடந்து கொண்டிருக்கும்
2.ஏனென்றால் அதற்குச் சாப்பாடு தேவை.
 
பையன் மீது வெறுப்படைந்து விட்டால் அத்தகைய அணு உண்டாகிவிட்டால் அந்த வெறுப்பின் உணர்வுகளே அதற்குச் சாப்பாடு. அந்த வெறுப்பு வளரப்படும் பொழுது அத்தகைய அணுக்களே பெருகும்.
 
ந்த அணுக்கள் பெருகும் பொழுது நாம் நுகர்ந்ததற்கும் உடலுக்கும் வெறுப்பாகி போர் முறையாகி உடல் நலியத் தொடங்கும். ஒன்றுக்கொன்று சண்டை போடும்.
1.இங்கே பளீர்…ர் என்று மின்னுகின்றது இங்கே குத்துகின்றது
2.தலை வலிக்கின்றது பிடரி வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது கால் வலிக்கின்றது கை வலிக்கின்றது என்று ஆரம்பித்து விடுவார்கள்.
 
இது எல்லாம் எங்கிருந்து வருகின்றது…?
 
நாம் நுகர்ந்த உணர்வுகள் அணுவாகி அதற்கு உணவு அது தேடும் பொழுது அந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டி இந்த உணர்வின் தன்மையாகும் பொழுது பளீர்…ர்.. என்று உடலில் குத்தினால் ஆ…! என்று சொல்வார்கள்.
 
இப்படி வலி எடுக்கும் பொழுது அந்த நேரத்தில் நீ சந்தோஷமாக இரு என்று யாராவது சொல்லிப் பாருங்கள்… பார்க்கலாம். ஒன்றுமில்லை நீ சந்தோஷமாக இரு…! என்று ப்படிச் சொல்லச் சொல்லக் கோபம் அதிகமாகும்.
 
இன்னும் கொஞ்சம் ஆன பிற்பாடு
1.”இவர்களுக்கு என்ன தெரியும்…” நான் படுகின்ற அவஸ்தை…!” என்று
2.அந்த அவஸ்தையைத் தான் எடுத்துக் கொள்வார்களே தவிர நல்ல சொல்களை எடுக்க முடிவதில்லை.
 
தாயாகவே இருந்தாலும் சரி குழந்தை வேதனைப்படுகிறது என்று “அட கண்ணு… நீ இதைச் சாப்பிடு…” என்று சொன்னாலும் “நீ சொல்லிக் கொண்டே இருந்தாலும் நான் கேட்க மாட்டேன் என்று தாய் மீது வெறுப்பு தான் இன்னும் அதிகமாகும்.
 
ஐயோ… தன் பையன் கெட்டுப் போகின்றானே… இந்த மாதிரி இருக்கின்றான் சும்மா இருடா ராஜா…! என்று சந்தோசமாகச் சொல்லிக் கொஞ்சிப் பாருங்கள். உங்களை எப்படிப் பதிலுக்குக் கொஞ்சுகிறான் என்று பாருங்கள்.
 
இரண்டு தடவை சாப்பாடு கொடுத்துப் பாருங்கள் சிறிய குழந்தையாக இருந்தாலும் சரி பெரியவராக இருந்தாலும் சரி எவ்வளவு கோபம் வருகிறது என்று பார்க்கலாம்…! ந்த உணர்வுக்குத் தக்க குணங்கள் வரும்.
1.அப்பொழுது எது இயக்குகின்றது…? அந்த நல்லதை எடுக்க முடியவில்லை
2.அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?
 
இதை எல்லாம் சுட்டிக்காட்டுவதற்குத் தான் ஆலயத்தில் காட்டுகின்றார்கள்.
1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்ச்சிகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் அனைவரும் பெற வேண்டும்
3.இந்த ஆலயம் வருவோரெல்லாம் தெய்வீக நிலைகள் பெற வேண்டும்.
4.அவர்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும்.
5.நான் பார்க்கும் குடும்பம் எல்லாம் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
6.காரணம் அந்த உலக மக்களுடைய உணர்வுகள் அனைத்தும் நம் உடலில் இருக்கின்றது.
 
நல்லவர்களையும் பார்த்திருக்கின்றோம். கெட்டவர்களையும் பார்த்திருக்கின்றோம். பார்த்த ஒவ்வொரு குடும்பத்திலும் அந்தத் தெய்வீக நிலைகள் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையில் புனிதம் பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தல் வேண்டும்.
 
1.இப்படி எண்ணி அந்த அருள் உணர்வுகளை எடுத்தால் தான்
2.நம் உடலுக்குள் வரக்கூடிய போர் முறைகளையும்… ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இயங்கக்கூடிய நிலைகளையும்
3.நாம் நல்லதாக மாற்றி அமைக்க முடியும்.