
மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவருடன் உங்களை இணைப்பதே எமது வேலை
ஆயிரம்
தான் சொல்லுங்கள் மீண்டும் ஜாதகத்தைத் தேடி நல்ல நேரம் வருகின்றதா…? கெட்ட
நேரம் வருகின்றதா…? என்ற நிலையில் தான் தேடிச் செல்ல
முடியும். நேரத்தை
உங்களால் மாற்ற முடியாது.
1.இந்த உடலுக்காக நல்ல நேரத்தைத் தேடி அலைவீர்கள்.
2.பதிந்த உணர்வுகளால் ஆசை ஓங்கிக் கொண்டேயிருக்கும்.
3.அது
நிறைவேறவில்லை என்றால் வேதனைகள் கூடிக் கொண்டே வரும்.
4.வேதனை
கூடித் தன்னை
அழிக்கும் உணர்வுகள் விளைந்து விடும்\
5.பின் அதனின் நிலைகள் மனித
உருவைச்
சீர்குலைக்கும் தன்மையாகத் தான் வரும்.
மனிதனாகப் பிறந்து அறிந்திடும் அறிவு ஏழாக இருப்பினும் ஏழாவது நிலையான ஒளி நிலை பெறவில்லை என்றால் அறிந்திடும் அறிவின்
துணை கொண்டு
இருளைப் போக்க
வேண்டுமே தவிர இருளைச் சேர்ப்பது அல்ல.
ஏழாவது
அறிவு கொண்டு பொருளைக் காண முடியும். மனிதனால். பொருளைக் கண்டபின் இருளை நீக்கிட வேண்டும்.
மனிதரான
நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை உடல் பிளக்கின்றது… நல்ல உணர்வினை வலுவாக மாற்றுகின்றது. நல்ல
உணர்வின் தன்மை கொண்டு அறிந்திடும் அறிவு வருகின்றது.
1.அறிந்திடும்
அறிவு கொண்டு நாம் நுகர்ந்திட்ட உணர்வுக்குள்
இருக்கும் இருளை நீக்க வேண்டும்.
2.இருளை
நீக்கி ஒளியின் தன்மையாக மாற்றிடும் சக்தி பெற வேண்டும் என்பதுதான் ஞானிகள் காட்டி
அறநெறிகள்.
அதனை
நீங்கள் பெற வேண்டும்.
இதனை ஏன் சொல்கிறேன் என்றால் செடிகளுக்கு என்று ஒவ்வொரு
குணங்கள் உண்டு. ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு
உரம் உண்டு..
நாம்
இங்கே கூடி உள்ளோம் என்றால் பல கோடித் தாவர இனங்களுடைய சத்தை உணவாக உட்கொண்டு அந்த உணர்வின் சத்தே உடலாக
ஆனது… ஜீவ
அணுக்களாக மாற்றியது… அதனின் மலம் கொண்டு சரீரம் பெற்றவர்கள் நாம்.
அதைப்
போன்ற உணர்வுகளில் வாடிய குணங்கள் எத்தனையோ உண்டு… வாடிய உணர்வுகள் பலவும் உண்டு.
1.அருள்
ஞானிகள் உணர்வின் நிலைகளை நினைவு
கொண்டு ஒன்றுடன் ஒன்று இணைத்து இணைத்து
2.இணைத்திடும்
உணர்வின் தன்மை கொண்டு வாடிய பயிரை நீக்கி
3.அருள் ஞானிகள் உணர்வு கொண்டு உங்களைச் செழிக்கச் செய்கின்றோம்.
அக்ரிகல்ச்சரில்
பல வீரிய உணர்வின்
சக்தி கொண்ட உணர்வை இணைத்து புதுப் புது வித்துக்களை எப்படி உருவாக்குகின்றார்களோ
இதைப் போலத் தான்
ஞானிகள் உணர்வின் தன்மையை உங்களுடன் இணைக்கின்றோம்.
அன்றைய மகரிஷிகள்
காட்டிய நிலைகளில்
1.மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் கொடுத்த உணர்வின் துணை கொண்டு
பேரண்டத்தின் நிலைகளை அறிந்து
2.அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து தீமைகளைப் பிளந்து
தீமைகளைப் பிளந்திடும்
உணர்வைத் தன்னுள்
விளைய வைத்து
3.விளைந்த
உணர்வு கொண்டு உயிருடன் ஒன்றி நிலை கொண்டிருக்கும் அவரின் உணர்வை
4.நினைவு கொண்டு உங்களுடன் இணைத்து இணைத்து இணைத்து… உங்களுக்குள்
அதை உரமாக இணைப்பதே எமது வேலை.