ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 23, 2024

ஜீவ ஆத்ம ஞான சக்தியின் ஜீவ வளர்ச்சி

ஜீவ ஆத்ம ஞான சக்தியின் ஜீவ வளர்ச்சி


நீங்கள் இருவரும் தியானத்தில் எடுத்த அலைத்தொடர்பு அவரவர்களின் உடல் அமிலச் சேர்க்கை உருவக எண்ணத்தின் சக்திக்குகந்த அலையின் தொடர் காட்சிகளை தியான முறையில் தினசரி பார்க்கவும் பேசவும் அவ்வழியைக் கொண்டு உங்கள் ஞானத்தை வளரவும் வழி தெரிகின்றது அல்லவா…!
 
இதன் தொடரைப் போன்றே அமில சக்தியின் வார்ப்பு ஜீவித உயிரணு தோன்றிய ஒவ்வொரு ஜீவ வளர்ச்சிக்கும் அவையவை பெற்ற சுவை, மணம் குணத்துக்குகந்த தனித்தன்மை உருவான உயர் குணங்கள் பல உண்டு.
 
பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள பல கோடி அமில குணங்கள் அதனதன் சுழற்சி ஓட்டத்தில் அங்கங்கு உள்ள படர்ந்த அமில குணங்களுக்கொப்ப ஒன்றுடன் ஒன்று உராய்ந்து தன் தன் இன வளர்ச்சிக்கொப்ப வளர்ந்த மண்டலமாயும் அதனதன் ஈர்ப்பின் சுழற்சியில் சுழன்று கொண்டே வளர்ந்து கொண்டே மாறிக் கொண்டே வழி கொள்ளும் வளர்முறை உள்ளது.
 
மணலுண்டு நீருண்டு சுண்ணாம்பும் உண்டு மரம் மண் இவை யாவையும் இருந்தாலும் அதனை நாம் நமக்கு வேண்டிய பக்குவச் செயலுக்காக சுண்ணாம்பையும் மணலையும் நீரையும் கொண்டு நமக்கு உகந்த இல்லங்கள் அமைத்துப் பாதுகாப்பு இடம் தேடி வாழுகிறோம் அல்லவா…!
 
அதைப் போன்று பால்வெளியில் நிறைந்துள்ள அமிலச் சுழற்சியில் தன்னிச்சையில் வளர்ந்து கொண்டே மாறிக் கொண்டே சுழலும் வழித் தொடரிலிருந்து எப்படி வீடமைக்கப் பல பொருட்களை வீட்டிற்கு வேண்டிய நிலைக்கு பக்குவப்படுத்தி வீட்டைக்கட்டி வாழுகின்றோமோ அதைப் போன்றுதான்
1.அமிலச் சுழற்சியின் உயர்வு நிலை சக்தி கொண்ட ஆத்ம நிலை கொண்டு
2.எண்ணத்தின் ஞானம் கொண்டு உயர்ந்த ரிஷிக் கோடிகளின் அமைப்புநிலை உருவகங்கள்தான்
3.ஆதிசக்தியின் சக்தி வழி வந்த ரிஷி வழி மண்டல அமைப்பின் ஜீவ ஆத்ம ஞான சக்தியின் ஜீவ வளர்ச்சி வளருகின்றது.
 
அதது எடுத்து வளர்ந்த நிலைக்கொப்ப வளர்ச்சியின் உயர்ந்த தன்மை கூடும் நிலை வழி பெற
1.மனித ஞான உயர்வினால் மட்டும்தான்
2.உயர்வின் உருவகத்தையே உருவாக்கும் தன்மை உறுப்பெறும் என்பதனை உணர்த்தியுள்ளேன்.
 
உண்மையின் உன்னத சக்திதனை உணர்த்தினால் உருவாக்கிடலாம் உலக சிருஷ்டியையே…!
 
இப்பூமிக்கு மனிதக் கரு வர ஆண் பெண் என்ற இரண்டு ரிஷித்தன்மை கொண்ட ஆத்ம சுழற்சி பூமியான இப்பூமியின் நிலைக்கு சிவசக்தி என்ற ஆத்மக் கரு எங்கிருந்து வந்தது…?
 
இப்பூமியில் மட்டுமல்ல நம்மைக் காட்டிலும் உயர்ந்த ஞான சக்தி கொண்ட மனித ஆத்மாக்கள் நம் சூரியக் குடும்பமல்லா (நாற்பத்தி எட்டு கோளங்கள்) மண்டலங்களில் ஜீவிக்கின்றனர்.
1.ஞானச் சித்து கொண்டு அவர்கள் நம் பூமியுடனும்
2.மற்றெல்லா பூமித் தொடருடனும் தொடர்பு கொண்டுள்ள நிலையில் செயல் கொண்டுள்ளனர்.
 
இன்று மனித ஆத்மாக்களின் பெருக்கத்திலுள்ள இப்பூமியின் எண்ண உணர்வு செயற்கையின் சுழற்சியில் சிக்காமலும் விஞ்ஞானத்தை நம்பி வாழும் உருநிலை பெறாமலும் இருந்திருந்தால் வளர்ந்துள்ள ஜீவ வளர்ச்சியின் சொல் செயல் ஞானம் கொண்ட வழித்தொடரினால் தன் ஞானம் உயரும் நிலை பெற்றிருந்ததென்றால் இப்பூமி பெற்ற உன்னத உயர்ந்த சக்தியே மிகவும் உன்னத சக்தியாய் இன்னும் பல கோடி கோடி ஆண்டுகளுக்குச் சொல்லாற்றலும் செயலாற்றலும் கொண்ட மனிதர்களாக இருந்திருப்பார்கள்.
 
மிக உயர்ந்த குண சக்தியின் ஆனந்த அன்பு கொண்ட இனிமை வாழ்க்கையை வாழக்கூடிய தன்மையையே இன்றைய வாழ்க்கை முறை இன்னலின் பிடிப்பில் இறுக்கம் கொண்டு
1.மனிதனை மனிதனே அழித்து அழித்து என்பதன் பொருள் இல்லற வாழ்க்கையில் கூடி மனிதப் பிறப்புக்கு வரும் சிசுக்களை
2.சிசுவைக் கருவுக்கே வர விடாமல் பல காலமாய் அவை சேமித்த சக்தி நிலையையே கருவில் வந்து மறைக்கப்பட்ட தன்மையிலேயே
3.இம் மனிதனே மனிதக் கருவை அழித்து அதனை ஞானத்தில் வளர விடாமல் இழிநிலையான சுழற்சியில் அமிழ்த்தி விடுகின்றான்.
 
தான் படும் வாழ்க்கைச் சுழற்சியில் இன்பங்கள் தனக்குச் சொந்தமானதாகவும் துன்பங்கள் ஆண்டவனின் சோதனையாகவும் எண்ணத்தில் கொண்டு வாழும் வாழ்க்கை ஓட்ட அலையில் எண்ணத்தில் ஏக்கமுடனும் பேராசை எதிர் நிலையிலும்தான் மக்களை நடத்திச் செல்லும் மத வழி போதனைகளும் அரசியல் சுழற்சிகளும் சுழன்றுள்ளன…
 
தன் ஆத்ம ஞானத்தைக் கொண்டு உலகத்தையே சிருஷ்டிக்கவல்ல ஆதி முதலாம் விநாயக சக்தி கொண்ட சொல் செயல் ஞானம் கொண்ட மனித ஆத்மாக்களை” இப்பூமி சரீர வாழ்க்கையிலிருந்தே அதை உருவாக்க முடியும்.
1.எப்படி ஆண் பெண் வாழ்க்கை இணைப்புச் செயற்கையில் உருவாகிசரீரம் பெற்று வாழ்க்கை வழித்தொடருக்கு வந்தோமோ
2.அதே தொடரில் ஆண் பெண் இணைப்பினால் கருநிலை உருவாகிபூமி ஈர்ப்பு கரு வளர்க்கின்றோமோ அதைப் போன்றே
3.ஆண் பெண் என்ற இரண்டு ஆத்மாக்களும் தன் ஞான சக்தியினால் சித்து நிலை பெற்று ஒளி நிலைத் தன்மையுடன்
4.உடல் இயக்க உறவு நிலையில் கருத் தோன்றி வளர்வதைப் போல்
5.ஆத்ம இணைப்பில் ஒளி வட்டத்தின் ஆத்மச் சேர்க்கையில் இருந்து பிறக்கும் ஒளி நிலையைக் கொண்டு ஞானவட்டமாய்
6.அவ்வலைத் தொடரை எம் மண்டலத்திற்கு அனுப்புகின்றோமோ அம் மண்டலத்தில் எல்லாம் ஜீவச் சிசுவை வளர்க்கவும்
7.ஜீவசக்தியை வளர்க்கவல்ல வழிமுறை ஆத்ம சக்தியை ஆத்ம சேர்க்கையைக் கொண்டு
8.அன்று எப்படி இராமாயணக் காலத்தில் இராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் சூட்சுமத்தால்
9.லவ குசா என்ற குழந்தைகளின் படைப்பு நிலையை மறைக்கப்பட்ட நிலையில் உணர்த்தியதைப் போன்றும்
10.காந்தர்வன் கன்னி நீரில் வாழும் பொழுது
11.மேகக் கூட்டத்திலிருந்து விந்துக்கள் தோன்றி கன்னி கருத்தரித்து ஞான தெய்வக் குழந்தை பிறந்ததென்றும்,
12.கார்த்திகைப் பெண்கள் முருகனை வளர்த்தனர் என்று கதையில் சொல்லும் உண்மைதனை
13.ஒவ்வொரு மனிதனும் ஞானம் கொண்டு அதிலுள்ள சூட்சுமத்தை உணர்ந்தீர்களானால்
14.சிவசக்தி கருத்தரிக்கவில்லை, சிவன் உருவாக்கிய குழந்தை முருகன் என்று
15.மறைக்கப்பட்ட பல உண்மைகள் அவற்றில் அடங்கியுள்ளன.
 
என்றோ நடந்தவை அவை…! அவற்றின் சக்திதான் இன்று நாம் வாழ்வது என்ற எண்ண உலாத்தான் உள்ளதேயன்றி… “இன்று நடப்பவையும் அத்தன்மைதான்…
 
ஜீவக் கரு எத்தனை கோடி கோடி ஆண்டுகள் எம்மண்டலத்தில் வளர்ந்து வாழ்ந்தாலும் இன்று உணர்த்திய இத்தொடரின் உண்மை போன்றுதான்
1.ஜீவ சக்தியின் ஆண் பெண் ஆத்ம சக்தியால்தான் ஜீவ ஆத்மாவில் பெறப்படும் சித்துத் தன்மையும்
2.ரிஷித் தன்மையும் கொண்ட ரிஷிபத்தினி… “ரிஷித்தன்மையைக் கொண்டுதான் உருவாகும் ஜீவனுக்கே ஜீவவித்து விருட்சகம்…