ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 29, 2024

ஆண் பாதி… பெண் பாதி - “சிவ சக்தி…”

ஆண் பாதி… பெண் பாதி - “சிவ சக்தி…”


ஆண் பெண் இன விருத்தியில் ஆணின் அமில சத்தின் பெண் ஈர்ப்பு ஜீவ நிலையில் சரீர வாழ்க்கை திருமண பந்த சொந்தத்தால் மனிதனின் வம்சத் தொடர் மக்கள் செல்வ நிலை பெற்று வாழும் வழித் தொடர் பூமிப் பிடிப்புச் செயலுடன் ஒன்றிய வாழ்க்கையாக உள்ளது.
 
இதனை ஒத்த பிறப்பு வளர்ப்பு இறப்புடன் ஒன்றிய சுழற்சியையே எப்படி இரண்டு இரண்டு உறுப்புகளின் உருவ உடல் ஞான ஒன்றிச் செயல்படுகின்றதோ அதற்கொத்த தன்மை போன்றே
1.ஆண் இன அமில ஆத்ம அலையும்
2.பெண் இன ஜீவ வளர்ப்புக்குகந்த ஆத்ம அலையும் ஒன்றாக
3.இரண்டு ஜீவ சரீர பிம்ப ஆத்மாக்களின் தொடர்பு பிறப்பு சிசு பிறப்பதைப் போன்று
4.வலுக் கொண்ட ஆத்ம இணைப்பின் தொடரில் பிறக்கும் நிலைதான் அர்த்தநாரீஸ்வரர்என்று காட்டினார்கள்.
 
ஆண் பாதிபெண் பாதி… “சிவ சக்தி…” என்றுணர்த்திய தெய்வ நிலையில் வழிகாட்டிய உண்மைத் தத்துவ விளக்க நிலைக்கொத்த ஆத்ம ஐக்கியத்தில் பிறக்கப்படும் வளர்ச்சி நிலை சுழற்சியுடன் இச்சுழற்சியுடன் ஒத்த ஆத்ம தொடர் கொண்டோரின் ஈர்ப்பு நிலை மகவுகளை சரீரப் பிறப்பில் சரீர சிசு வளர்வதைப் போன்று ஆத்மாவினால் ஆண் பெண் இன ஆத்ம உயர் சக்தியைக் கொண்டு கூட்டமைப்பின் ஞானச் சித்தால் ரிஷி பத்தினி..” என்ற ஒளி நிலை பெறும் ஆத்ம சக்தியைக் கொண்டு இந்தப் பூமி மட்டுமல்லாமல் மற்ற ஏனைய மண்டலங்களுக்கும் உயர்வைக் காட்டிட முடியும்…”
 
ஞானச் சித்து கொண்டு இரண்டு ஆத்ம ஐக்கியத்தில் ஒன்றானவர்கள்…”
1.உயர்வு கொள்ளாத் தனித்த நிலையில்
2.சித்து நிலையுடன் வளர்ச்சி பெற முடியா உயர் சக்தி கொண்ட தொடர்புகளும்
3.ஆத்ம இணக்க ஆண் பெண் சரீர இயக்கமுடன் ஒத்த நிலையில்
4.சித்து நிலை கொள்ளக்கூடிய ஜீவ சக்தித் தொடர்புடன் வளரும் ஆத்ம ஐக்கிய வளர் சக்தியின் கூட்டமைப்பில்
5.அந்த வலுவாகும் சக்திகள் ஐக்கியம் கொள்ளும்தன் வளர்ப்பின் நிலைக்காக…!
 
பல கோடி உண்மைத் தத்துவ உயர் வளர்ச்சி இன்பத்தின் கோடி…” என்று உணர்த்துகின்றார்களே அத் தொடருக்கும் உயர்ந்த சக்தி நிலைகளை இச்சரீர வாழ்க்கை பந்த ஆண் பெண் ஆத்ம வலுவைக் கொண்டு உயர முடியும்.