ஞானம் பெறும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றேன்
அன்று சில உண்மை நிலைகளைக்
காவியங்களாக்கி உணர்த்திய நிலையிலிருந்துதான் (சித்தர்களின் நிலை) இன்று விஞ்ஞானம்
காண்கின்றோம்.
இப்பூமியின் ஈர்ப்பிற்கு மூலகாரணமாய் ஆணிவேராய் உள்ள ஓ…ம் என்ற நாதத்தினால் ஈர்க்கப்பட்ட அமில குணங்கள் தான் இவ்வுலகனைத்துமே.
ஒன்றுடன் ஒன்று கலக்கச் செய்து அதன் ஒளி அமிலத்தை இப் பூமியே பல நிலைகளில்
வளர்த்துக் கொண்டது.
1.இப்பூமியின் அமில சக்தியான ஈர்ப்பின் அலை
கொண்டு தான் அனைத்து நிலைகளும் நடக்கின்றன.
2.எதுவுமே ஒதுக்கப்பட்ட சக்தியற்ற ஜீவனில்லா நிலை
இப்பூமியில் இல்லை.
3.ஒவ்வொன்றிற்கும் அதன் ஈர்ப்பிற்கு ஏற்ப அதன்
குணநிலையுண்டு.
4.அதன் வளர்ச்சியில் மாற்ற நிலைகளும் உண்டு.
இயற்கையுடன் வளர்ந்திட்ட சக்திதனிலேயே உயர்ந்த ஞானம் கொண்ட மனித
ஆத்மாவின் உடலைக் கொண்ட நாம் இவ்வுலகின் உண்மை நிலையை உணர்ந்திடாமல்
இருந்திடலாகாது என்பதனை அன்று உணர்ந்த சித்தர்கள்…
அந்தந்தக் கால நிலைகளுக்கொப்பக் கவிதைகளாக்கி காவியங்களாக்கி பல அபூர்வ நிலைகளை
எல்லாம் புரியும் நிலையில் வடித்துச் சென்றார்கள். சென்றார்கள் என்ன…? வடிவாக்கி நின்றார்கள்.
ஆனால் இக்கலியின் கதையின் ரூபமாய்க் கண்டுணர்ந்து விரயப்படுத்தி
விடுகின்றோம். ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு தத்துவக் கோளங்கள் உண்டு. நம்
முன்னோர்கள் உணர்த்தி ஏற்படுத்திய அரும் பெரும் பொக்கிஷத்தை நாம் கண்டுணர
வேண்டும்.
இவ்வுடல் என்ற மாய பிம்பத்தின் அற்ப ஆசைக்காக ஆத்மாண்டவனின்
அறிவு ஞான பொக்கிஷத்தைச் சிதறவிட்டே வாழ்கின்றோம்.
அன்று பல சித்தர்களினால் ஆண்டவனாய்ப் பல ரூபப்படுத்தி அவரவர்கள்
எண்ணத்திற்குகந்தபடி எல்லாம் ஆண்டவனின் ரூபத்தைக் கண்டுணர்ந்து அவர்களின்
ஞானப்பாலை வெளிப்படுத்தினார்கள்.
1.எங்கும் நிறைந்துள்ள ஆண்டவனை எந்த ரூபத்தில்
கண்டால் என்ன…? என்ற தத்துவ நிலையை
2.அவரவர்கள் சிவனாகவும் விஷ்ணுவாகவும்
பிரம்மாவாகவும் வடிவமைத்துத் தந்தார்கள்
அன்பு நற்பண்பு சத்திய ஜெபம் இவற்றை நாம் மேற்கொண்டால்… அன்றைய சித்தர்களினால் சிவனாகவும் விஷ்ணுவாகவும் பிரம்மாகவும்
படைக்கப்பட்ட “ஆத்மாண்டவனை…”
இயற்கையின் எல்லாமில் எல்லாமாய் உள்ள ஒளியுடன் கலக்கச் செய்யலாம்.
1.அன்றைய சித்தர்களிலேயே ஒவ்வொரு சித்தனும் பல
நிலைகளில் விளக்கியுள்ளான்.
2.பல பாடல்களை இயற்றி இன்றைய கால நிலைக்கும்
பொருந்தும் நிலை ஏற்படுத்தியுள்ளான்.
3.ஆனால் இந்த ஞானத்தின் பொக்கிஷத்தை மனித
ஆத்மாக்கள் பயன்படுத்தாமல் செயல் கொண்டு வருகின்றன.
கருவூராரின் கருவூலத்தைக் காண்பாரும் இன்றில்லை. கருவூலத்தின்
கருவையே கரியூலமாக்கிக் களிப்படையும் காலமப்பா இது.
ஒவ்வோர் ஆத்மாவும் தான் பிறந்த கருவூலத்தின் மகிமையை உணர்ந்து
வாழ்ந்திடுங்கள். கனவூலத்தில் களிப்பெய்திக் காணும் சுகம் என்னவோ என்பதனை உணர்ந்து
வாழ்ந்திடுங்கள்.
பக்தியையும் ஞானத்தையும் வளரவிட்டு முக்தி என்னும் பக்தி
பெறலாம். பக்தியில் வழி எடுத்து முக்தி என்னும்
பக்திக்கே செல்லும் மார்க்கத்தை அடையலாம்.
சிற்றின்பம் பேரின்பம் என்றிட்டே ஞான இன்பத்தை நாசப்படுத்திட்ட
நிலை ஏனப்பா…?
1.உண்டாலும் உண்ணாவிட்டாலும் இரவும் பகலும்
மாறிக்கொண்டு தான் உள்ளன.
2.நாம் பெறப் போகும் ஞானத்திற்காக நாம்
பெறப்படும் வரை எதுவுமே நமக்காக நிறுத்தி வைப்பதில்லை.
3.கருவூலத்தின் கருவாகிய நாம் நம் ஞானத்தை பெறும்
சக்தியை அடையும் பக்குவத்தைத் திரும்பவும் திரும்பவும் செப்புகின்றேன்
4.நீங்கள் செயல்படுத்திட வேண்டும்.