ஓ..ம் நமச்சிவாய என்றால் அபாயம் ஒன்றுமில்லை என்று ஏன் சொன்னார்கள்…?
மனித உணர்வில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றித் துருவ மகரிஷியாக விண் சென்ற அவனை நாம் அடிக்கடி
எண்ணுதல் வேண்டும்.
இந்தப் பூமியில் வாழும் பொழுது
1.அவன் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய
அந்த உணர்வின் சக்தி
2.எனக்குள் ஜீவன் பெற்று நாமும் ஒளியின் சரீரமாக மாற வேண்டும்.
3.இது தான் ஓம் நமச்சிவாய
ஆனால் அவனின் நினைவலைகளை
யாரும் நமக்குச் சொல்லவில்லை. இதை “ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய
என்று சொன்னால் உனக்கு அபாயம் ஒன்றும் இல்லை…” என்று
சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.
1.எதைச் சிவமாக்க வேண்டும் என்று அன்று ஞானிகள் சொன்னார்கள்.
2.அதை யாரும் நாம்
பெறவில்லை.
தவ யோகிகளும் கொடுத்திருப்பார்கள் சினிமாப் படங்களிலும் கொடுத்திருப்பார்கள் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய.
அவன் எதைத் தனதாக… சிவமாக… ஆக்க வேண்டும் என்று சொன்னான்…? என்று யாராவது எண்ணுகின்றார்களா…! என்றால் இல்லை.
சிவனின் அருளைப் பெறப் போகின்றேன் என்றால் அந்தச் சிவன் யார்…? நம் உடல் தான் சிவம்.
1.நாம் எண்ணியதை எல்லாம் உயிர் ஜீவனாக்கிச் சிவமாக மாற்றுகின்றது என்ற நிலையை
2.இந்த உண்மையைக் கண்டு
சொல்லி இருந்தாலும் அதை நாம் உணரவே இல்லை
3.யாரும் உணர்த்தவும் இல்லை உணரும்படிச்
செய்யவும் இல்லை.
காவியமாகப் படைத்து விட்டார்கள்
நாடக மேடையில் வேஷம் போட்ட மாதிரி நம்மை அலைய விட்டு விட்டார்கள்.
உயிரணுவாகத் தோன்றியதிலிருந்து மனிதனாக நாம் பரிணாம
வளர்ச்சியில் எப்படி வளர்ந்தோம்…? என்று
அந்த ஞானிகள் சொன்ன இயற்கையின் உண்மையினை நாம்
அறிதல் வேண்டும்.
ஓர் புழு ஒரு உணர்வைச்
சுவாசித்தால் ஓ…ம். எந்தச் சத்தை சுவாசித்ததோ அந்த உணர்வின் சத்து அதன் உடலாக மாறுகின்றது ஓம் நமச்சிவாய.
ஆதியிலே ஓர் உயிர் அது தோன்றிய நிலையில் உயிருக்குள் துடிப்பின்
இயக்கம் இருந்தால் தன் அருகில் இருக்கக்கூடிய செடியின் சத்தை இந்த
உயிருக்குள் துடிப்பின் ஈர்ப்பான காந்தம் இழுத்து அந்த உயிருடன் இணைக்கச் செய்யும்போது ஓ… ம்… ஓம்…! என்கிற பொழுது ம் என்பது பிரம்மம்.
1.சுவாசித்த உணர்வுகள் அதற்குள் ஜீவனாகி அது உடலாகின்றது
2.இந்த உயிரான ஒளி இயக்கப்படும் பொழுது
மின்னுகின்றது
3.ஆனால் இழுத்து அந்தச் சத்தான நிலைகள் இதனுடன் இணைக்கப்படும் பொழுது
4.ஒளி மறைக்கப்பட்டு உடலாகின்றது… சிவமாக மாறுகின்றது.
அந்த நந்நாளைத் தான் நாம் சிவன் இராத்திரி என்று சொன்னார்கள். உயிர் முதன் முதலில் தாவர இன சத்தை நுகர்ந்து அது உடலாகி உடலுக்குள் ஒளியின் சிகரமாக இருக்கின்றது.
எந்தத் தாவர இன சத்தை இந்த
உயிர் இணைத்து உடல் ஆனதோ அந்த மணம்
தான் வினை - விநாயகா. விநாயகன்
பிரணவத்திற்கு உரியவன் என்றும் சொல்வார்கள்.
எந்த மணத்தை நாம் சுவாசிக்கிறோமோ அது
எனக்குள் பிரணவமாகி இயங்கி ஜீவனாகின்றது. உயிர் இருக்கும்
பொழுது தான் எண்ணியது அனைத்தையும்
உடலாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது… சதா சிவமாக ஆக்கிக் கொண்டே உள்ளது.
1.ஆகவே… அருள் ஞானிகளின் உணர்வை நாம் சதா சிவமாக
உடலாக ஆக்கிக் கொண்டு வர வேண்டும் என்பதற்குத் தான்
2.ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று தெளிவாக
ஞானிகள் நமக்கு உணர்த்திச் சென்றார்கள்.