
குரு காட்டிய அருள் நெறிகளை வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டும்
குருநாதரிடம்
அணுகியவர்கள் தன் உடலின் இச்சைக்கும் ஏதோ சாம்ராஜ்யத்தை ஆள்வது போன்றும்
தவறான வழிகளில் சென்று கொண்டுள்ளார்கள்.
கவிண்ணுலகில் பேரானந்தப் பெரு நிலையுடன் வாழ்ந்து
கொண்டிருக்கும் குருநாதரின் துணை கொண்டு அவர் பெற்ற உணர்வினை உபதேசத்தின்
வாயிலாக அமர்ந்துள்ள உங்களிடம் இதைப் பதிவு செய்கிறோம்.
அவ்வாறு பதிவு செய்யப்படும்
பொழுது உங்கள் நினைவாற்றல் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் பால் சென்று
அவர்கள் ஆற்றலை
நீங்களும் பருகி உங்களில் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்ற உதவும்.
இயற்கையில்… ஒவ்வொரு
அணுவின் தன்மையும் எவ்வாறு செயல்படுகிறது…? என்பதை குருநாதர் எமக்குக் காட்டினார்.
எனக்கு
எதை எல்லாம் அவர்
போதித்து…?
அதை எப்படிப் பதிவு செய்தாரோ…? அவை அனைதையுமே அவர் காட்டிய
அருள் வழியில் உங்களிடம் தொடர்ந்து சொல்லித் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.
எனக்கு
ஆறு மாதத்திற்குள் அனைத்தையும் காட்டி விட்டார். அதே போல் அப்படி ஆறு
மாதத்திற்குள் உங்களுக்கு அதைப் பதிவு செய்ய வேண்டும் என்றால்… நீங்கள் எங்கே…?
என்
வீட்டில் இப்படி இருக்கின்றது… என் மனைவி இப்படி இருக்கின்றது… என்
பையன் இப்படிப் பேசுகிறான்… என்ற எத்தனையோ எண்ணங்கள் வருகின்றது.
தியானம்
செய்வதற்காகச் சென்றால் நீ சாமியாராகப் போய் விடுவாய் என்று மனைவி விரட்டுகிறது. உட்கார்ந்து தியானம் செய்தால்… என் அப்பனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று பிள்ளை பேசுகிறது என்று
இப்படித் தான் சொல்கிறார்கள்.
ஆகையினால்
நீங்கள் இவ்வளவும் சொன்னீர்கள் சாமி கேட்டேன்…! இருந்தாலும் என்னால்
முடியவில்லை…! என்று இப்படித் தான் நம் வாழ்க்கை செல்கிறது.
ஏனென்றால்
கோவிலில் தெய்வத்திற்குத் தேங்காய் பழத்தை வைத்து அதற்குண்டான காசைக்
கொடுத்து நம் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தால் பாவம் போய்விடும்.
அர்ச்சனை
செய்யும் உணர்வுகள் நேராக ஆண்டவனுக்குப் போய் நமக்காக வேண்டி பணத்தைக் கொடுத்திருக்கின்றார்…
அர்ச்சனை செய்கின்றார்.
ஆகையினால் இந்த்த் தெய்வம் மனமிரங்கி வந்து கஷ்டத்தையெல்லாம்
போக்குவார் என்ற இந்த நம்பிக்கையைத் தான் நமக்கு ஊட்டி வைத்திருக்கின்றார்கள்.
ஆனால்
நம்மை ஆள்பவன் யார்…? என்று குருநாதர் காட்டுகின்றார். பல கோடிச்
சரீரங்கள் பெற்று மனிதனான நிலையில் இந்த உடலுக்குள் பல கோடி உணர்வுகள்
வந்திருந்தாலும் இதை ஆண்டு கொண்டிருப்பவன் நமது உயிரே ஆண்டவன்.
நாம்
எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் இறையாகி உணர்வின் செயலாக உடலாகி அதனின் உணர்வின்
செயலாகத்தான் நம்மை இயக்குகின்றார்.
இது கீதையிலே தெளிவாகக் காட்டப்படுகின்றது… நீ
எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று…!