
மிகவும் சக்திவாய்ந்த சக்தி
நாம் எந்தெந்தக் குணங்களை
எண்ணுகின்றோமோ அந்த குணத்தின் அணுவின் தன்மை நம் உடலுக்குள்
ஜீவ அணுவாக மாற்றும் பொழுது உயிர் எவ்வாறு
கடவுளாக இருக்கின்றதோ அதே குணத்தை நமக்குள் கடவுளாக இருந்து இயக்கும் சக்தி
பெறுகின்றது.
இதுதான் ஓமுக்குள் ஓ…ம் ஓமுக்குள் ஓ…ம் ஓமுக்குள் ஓ…ம் என்பது. நம் உயிரின் தன்மை ஓ…ம் என்று
இயக்கினாலும் நாம் எண்ணும் குணங்கள் ஓம்
என்று அதே ஜீவ அணுவாக வளர்வதைத்தான் ஓமுக்குள் ஓ…ம் ஓமுக்குள் ஓ…ம் ஓமுக்குள் ஓ…ம் என்பது.
ஜீவ அணுவிற்குள் அணுவாக மாறி அணுவின் தன்மை அணுவாக மாறிக் கொண்டே உள்ளது
என்பது ஞானிகளால் சாஸ்திரங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.
ஆகவே நாம் எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ அதை நமக்குள் ஜீவ அணுவாக மாற்றி விட்டால்
அது நமக்குள் இருந்து கடவுளாக அந்தக் குணத்தை அது வளர்த்துக் கொண்டே இருக்கும்.
உயிரும் கடவுள் தான். நாம்
எண்ணிய உணர்வுகள் ஜீவ அணுவாக மாறி விட்டால் அதுவும் கடவுள் தான்.
கடவுள் என்ற தனித்தன்மை எங்கும் இல்லை இன்றும் இல்லை. தனித்து… தனியாக
ஒரு கடவுள் இருக்கின்றான் என்றால் அப்படி இல்லை.
இந்தப் பிரபஞ்சமும் மற்ற உலகங்களோ உருவாவதற்கு முன் சக்தியின் தொடராக
உருவாவதைச் சக்தி
என்று பொருள்படும்படி அன்றைய ஞானிகள் காரணப் பெயர்களை இட்டுள்ளார்கள்.
சக்திகளில் எத்தனையோ
வகையான சக்திகள் உண்டு. அவைகளில் விஷமே மிகவும் சக்தி வாய்ந்த சக்தி.