நம் சுவாசம் உயர்ந்த நிலை பெற வேண்டும்… நம் சுவாசத்திற்குத்தான் மோட்சம் வேண்டும்
இந்த உடலில் சிறிது காலம் தான் வாழ்கின்றோம். அதற்குள் மனதை எப்படி ஒன்றாக்க வேண்டும்…? என்ற
நிலையை ஞானிகள் காட்டுகின்றார்கள். நம்முடைய எண்ணங்களை ஒன்றாக்க வேண்டும்… கல்யாணராமா…!
ஆனால்… மனிதனின் உணர்வுகள்
1.அவன் அப்படிச்
செய்கின்றான் இவன் இப்படிச் செய்கின்றான் என்ற நிலைகளை…
2.“தான்… நான்…” என்று நான் செய்வேன்… நான் செய்து கொண்டிருக்கின்றேன்… என்னால்தான் முடியும்…!
3.”நான் இதை அனைத்தும் செய்தேன்” என்று பலருக்குப் பல உபகாரங்கள் செய்வார்கள்.
பல உபகாரம் செய்தவருடைய உணர்வுகள்
“நான்” என்ற இந்த உணர்வு வரும் பொழுது
கௌரவராகின்றது. கௌரவர் என்று செய்த
நிலைகள்… நான் அன்றைக்குச் செய்தேன்… பார் இன்று என்னை மதிக்கின்றானா…? என்று இந்த கௌரவப் போர் வருகின்றது.
தான் எண்ணியபடி செய்யவில்லை
என்றால் உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது…
1.அவனைப் பார்த்தவுடன் குருக்ஷேத்திரப் போர்
2.அதை மீறி நம் உடலுக்குள் சென்றால் கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போர்.
புலனறிவு ஐந்து
உள்ளுக்குள் சென்ற பின் போராகின்றது போர் என்று உடலில்
வரப்படும் பொழுது நமக்குள் இருக்கும் பல அணுக்கள் மகாபாரதப் போராக மாறுகின்றது. உடலுக்குள் கலக்கமும் பல
நிலைகளும் மற்றதும் இரத்தத்தில்
நடக்கப்படும் போது மகா போராக நடக்கின்றது
ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து மக்களுடைய உணர்வுகளும் நாம்
எடுத்துக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு விதமான வெறுப்பு உணர்வுகளையும் எடுத்துக் கொண்டுள்ளோம்.
1.நல்லது என்று எண்ணப்படும் பொழுது கௌரவர்கள்
அதை உள்ளே விடுவதில்லை.
2.இதைப் போன்ற கௌரவப் போர்கள் எப்படி நடந்து கொண்டுள்ளது…?
3.வீட்டில் பையன் சொல்கிறான் என்றால் பையன்
சொல்வதை நான் கேட்பதா…?
4.மனைவி நல்லது சொன்னால் போதும் மனைவி
சொல்வதை எல்லாம் கேட்பதா.
அதே போல மனைவி தவறு செய்தாலும் “தப்பு” என்று அதை
ஏற்றுக் கொண்டால் “திருப்பி நம்மைக் கணவர் பேசுவார்… திட்டுவார்” என்ற கௌரவத்தில் மறைக்கவும்
செய்வார்கள்.
குழந்தைகள் தவறு செய்தால்…
நான் நல்லவன் என்று பெயர் எடுப்பதற்காக “நான் தவறு செய்யவே
இல்லை” என்பார்கள்.
1.ஆக… தவறை மறுக்கப்படும் போது என்ன
நடக்கின்றது…? கௌரவப் பிரச்சினை வருகிறது.
2.குற்றவாளி என்று ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை மூடி மறைப்பதற்கு என்ன வேலையோ அதைத்தான்
செய்வோம்.
இந்த உணர்வின் தன்மை நமக்குள்
வரும் போது கடைசி முடிவு வேதனை என்ற உணர்வு வந்து
மனிதனால் உருவாக்கி இருளை நீக்கிய அந்த உணர்வுகள் அனைத்தும்
மறைகின்றது… வேதனை என்ற போர் முறை வருகிறது.
நம்முடைய எண்ணங்கள் அடிக்கடி வேதனை என்று வரும் பொழுது கண்ணும் பார்வை இழக்கின்றது.
1.வலுவான உணர்வு என்ற
பீமனும் அழிகின்றது.
2.அர்ஜுனன் என்ற நிலைகள் குறி வைத்துத் தாக்கும் உணர்வுகளும் சோர்வடைகின்றது… தாக்க முடிவதில்லை.
மகாபாரதப் போரின்
கடைசியில்… கண்கள் (கண்ணன்) இழந்தபின் அர்ஜுனனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அவனுக்கு முன்னாடியே மாடுகளைத் திருடிக்
கொண்டு போகின்றார்கள்.
முதலிலே “நான்” என்ற நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது ஒன்றும் செய்ய
முடியவில்லை என்று காவியத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்
அதாவது அர்ஜுனன் ஆரம்பத்தில் எல்லாவற்றையும்
செய்கின்றான் கண்ணின் உணர்வு கொண்டு தான் செயல்படுத்துகின்றான். கண்கள் இழந்த பின் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இப்படி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாலும்
1.மோப்பத்தால் (சுவாசம்) அறிந்து கொண்ட
உணர்வு தான் எனக்கு வழிகாட்டியது.
2.தீமை நன்மை என்று என்னால் அறிய முடிந்தது…
3.தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளை நான் எடுத்தேன் என்று தர்மனைச்
சொல்கின்றார்கள்.
அவன் யாருக்கு மோட்சம் கேட்கின்றான்…?
தன் நாய்க்கு மோட்சத்தைக் கொடு…! என்று கேட்கின்றான்.
1.நாம் சுவாசித்த உணர்வின்
தன்மை தான் நமக்கு வழிகாட்டியாக இருந்தது.
2.தீமையை நீக்கும் அந்த உணர்வு தான்
வழிகாட்டியாக வந்தது
3.நான் நுகர்ந்த உணர்வின் தன்மை… அதன் வழியே நான் ஒளியாகும் தன்மை வேண்டும் என்று
4.மகாபாரதத்தில் இவ்வளவு தெளிவாக
கொடுத்துள்ளார் வியாசர்.
5.நம் சுவாசத்திற்குத்
தான் உயர்ந்த நிலை பெற வேண்டும்… அதற்குத்தான் மோட்சம்
வேண்டும்.
இது பற்றி நாம் யாராவது சிந்திக்கின்றோமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள். எவ்வளவு
பெரிய பேருண்மையை நமக்குக் காட்டியுள்ளார்கள்
ஞானிகள்…!