ஒவ்வொரு அணுக்களுக்குள்ளும்
எது எது சேர்கின்றதோ அது உள் நின்றே அந்த உணர்வின் கூட்டம் அதிகமாகிவிட்டால் அதன் இனமாகப்
பெருகிவிடுகின்றது. ஆனால்,
1.இன்னொரு இனக் கூட்டம்
அதிகமாக இருந்து
2.அதற்குள் இந்த அணுவின்
தன்மை இணைந்துவிட்டால் இது சிறுத்துவிடுகின்றது.
3.அதற்கு உணவாகிவிடுகின்றது.
4.உணர்ச்சியை மாற்றும்
நிலை வருகின்றது.
ஒரு மாவினை எடுத்து அதில்
வெல்லத்தைக் கரைத்தால் ஒரு ருசி வருகின்றது, அந்த மாவிலே சீனியைப் போட்டுக் கரைத்தால்
அது ஒரு ருசி வருகின்றது.
அதே சமயத்தில் மாவில் சிறிது
காரத்தைச் சேர்த்தால் அதனுடைய ருசி வேறாக வருகின்றது. அதிலே சுக்கைச் சேர்த்தால் அது
ஒரு ருசி வருகின்றது.
காரம் உணர்ச்சியைத் தூண்டுகின்றது.
ஆனால் சுக்கு உடலுக்குள்
உற்பத்தியாகும் (விஷமான உணர்வை) வாயுவாக உருவாகி வருவதை அகற்றக்கூடிய சக்தியாக மாறுகின்றது.
‘
1.சுக்கு அல்லது இஞ்சி
இவையெல்லாம்
2.ஒரு திடப்பொருளுக்குள்
உருவாகும் ஆவியின் தன்மையை நீக்கி
3.சம அளவு கொண்டு வரக்கூடிய
சக்தி பெற்றது.
உடலில் உருவாகும் பித்தம்
அதிகரிக்கப்படும் பொழுது பித்தத்தால் மந்த நிலைகள் ஏற்பட்டு அதனால் அஜீரணம் ஏற்படும்
பொழுது வெப்பத்தால் ஆவியாக மாறுகின்றது.
ஆவியின் தன்மை உறையப்படும்
பொழுது சளியாக மாறுகின்றது. ஆஸ்த்மா போன்ற நோய்களையும் உருவாக்கிவிடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளில்
இஞ்சிச் சாற்றுடன் எலுமிச்சம்பழத்தின் சாறைச் சேர்த்துச் சிறிதளவு உப்பையும் இணைத்துவிட்டால்
இதை அடக்கும் தன்மை வருகின்றது.
1.ஆகவே இது அமிலங்களாக
மாறுகின்றது.
2.அணுக்களாக மாறும் தன்மை
இல்லை.
3.உடல்களில் அணுக்களாக
மாறி வரும் அமிலங்களை இது பிரித்து விடுகின்றது.
இது பௌதீக முறையில் மருந்து
என்ற நிலையில் வருகின்றது.
இதையெல்லாம் நமது தத்துவ
ஞானிகள் தெளிவாகக் கூறியுள்ளார்கள். நமது காவியங்களிலும் தெளிவாக்கப்பட்டுள்ளது.