கோர்ட்டில்
ஏறிப்போய் பொய் சாட்சி சொல்லலாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் உயிரிடம் மட்டும் யாரும்
தப்ப முடியாது என்பதை மறந்துவிடக்கூடாது.
1.உயிருடன்
எதை நாம் இணைக்கின்றோமோ
2.அதற்குரிய
“தீர்ப்பை (JUDGEMENT)” உயிர் கொடுத்தேவிடும்.
சிவ தத்துவத்தில்
இதற்குத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரனை வைத்தது. நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை
என்று வைத்தது.
1.நந்தீஸ்வரன்
என்றால்
2.சுவாசித்ததை
உயிர் என்ற ஈசன் உருவாக்கும்.
3.நம் உடலுக்குள்
போனவுடன் அதே குணத்தை உருவாக்கும்.
கோபப்படுவோரைப்
பார்த்தோம் என்றால் உயிர் அதை அணுவாக உருவாக்குகின்றது. திரும்பத் திரும்ப வளர்க்கப்படும்
பொழுது கோபமான உணர்வு அதிகமாகி அந்தக் கணக்கின்படி நமக்கு இரத்தக் கொதிப்பு வருகின்றது.
அந்த இரத்தக்
கொதிப்பு வந்துவிட்டால், சாப்பாடு அவர்களுக்கு யாராவது கொண்டு வந்தார்கள் என்றால்
“வள்...” என்று கத்தச் சொல்லும். உதவி செய்தார்கள் என்று எண்ணச் செய்யாது. புலி எப்படி
உறுமித் தாக்குகின்றதோ அது போல நம்மை இயக்கும்.
தீயில் குதித்தால்
உடல் கருகுகின்றது, ஆனால் உயிர் வேகாது. உடலில் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் சாகாக்கலை.
இதிலே எந்த அளவிற்கு உணர்வு இருக்கிறதோ அந்தக் கலை பிரகாரம் உயிர் உடலை மாற்றும்.
விஷத்தை அதிகமாகச்
சேர்த்தால் பாம்பாக உடலை உயிர் மாற்றும். இரக்கமற்றுத் தாக்கும் உணர்வை வளர்த்தால்,அந்தக்
கலை பிரகாரம் புலியாக உடலை உயிர் மாற்றும்.
பிறரை ஏமாற்றி
வாழ்ந்து வந்தால் நரியாகப் பிறக்க வைக்கும்.
நாம் ஒவ்வொரு
உடல்களிலும், சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தாலும்
கடைசியில் மனிதனாக உருவாக்கியது உயிர் தான்.
இந்த உயிரான
ஈசனால் வளர்க்கப்பட்ட நிலைதான் நாம் இன்று மனிதனாக உள்ளோம்.
தீமையை நீக்கும்
சக்தி பெற்ற இந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வு ஆனாலோ அந்தக் கணக்கு கூடினால் உயிர்
என்ற ஈசன் இந்த உடலை விட்டுச் சென்றபின்
1.சேர்த்துக்
கொண்ட வினைகளுக்கொப்ப தீர்ப்பு
2.நீ வேதனையை
எடுத்ததனால் அங்கு சென்று பிறந்து பழகு,
3.கஷ்டத்தில்
இருந்து மீண்டு வந்தாய் கஷ்டத்தை நீ அனுபவி என்று அதற்குத்தக்க
4.அடுத்த உடலை
நமது உயிர் உருவாக்கிவிடும்.
அதனால்தான்
சிவதத்துவத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
சாஸ்திரங்களில்
ஞானிகள் சொன்ன பேருண்மைகளை அறிந்து நாம் வாழ்வது நல்லது.