தீமையின் நிலைகளை மாற்றியமைக்கும்
சக்தியை ஞானிகள் “நரசிம்மா..,” என்று காட்டுகின்றார்கள்.
அந்த மகரிஷிகளின் அருள்
சக்தியைத் தனக்குள் செலுத்தப்படும்போது உடலுக்குள் எதையும் உட்புக விடாதபடி வாசல்படி
மீது அமர்ந்து தீமைகள் வராதபடி இங்கேயே பிளந்து விடுகின்றான். உள்ளே சென்றால் தானே
தீமையின் நிலைகள் வரும்.
அன்றாட வாழ்க்கையில்
தீமை செய்வோரைப் பார்க்கின்றோம். அதன் மூலம் தீமை செய்தான் என்று நாம் அறிந்து கொள்ள
உதவுகின்றது.
ஆனால் தீமை செய்வான்
என்று முதலில் பதிவு செய்து கொண்டால் என்றால் அந்தத் தீமையினுடைய நிலைகளை அடக்க அந்த
மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தல் வேண்டும்.
பின் எங்கள் பார்வை
எல்லோரையும் நல்லதாக்க வேண்டும். என்னைப் பார்க்கும் பொழுது அவருக்கு நல்ல எண்ணம் வர
வேண்டும் என்ற உணர்வினை நாம் பதித்துவிட்டால்
1.அவர் தீமை செய்தாலும்
இங்கே நமக்குள் அது பதிவாகாது.
2.அதை ஈர்க்கும் தன்மை
வராது.
இப்படி அந்த மகரிஷிகளின்
அருள் உணர்வை நமக்குள் வலு கொள்ளும் போது அந்தத் தீமை நம்மை இயக்காது. நம்மைப் பார்க்கும்போது
அவனுடைய தீமையின் உணர்வை இதை அடக்கும்.
இதைத்தான் நீ விழித்திரு
என்று ஞானிகள் காட்டுகின்றனர்,
எந்த நேரத்திலும் எதனின்
நிலைகள் கொண்டாலும் நாம் ஒவ்வொரு நிமிடமும் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான உயிரிடம்
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
1.இங்கே புருவ மத்தியில்
வேண்ட வேண்டும்.
2.அந்த உணர்வு உடல்
முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் பரப்ப வேண்டும்.
3.அப்பொழுது உயிரான
ஈசன் - அவன் பார்த்துக் கொள்வான்.
அதை விடுத்து நாம்
“எனக்கு இது தேவை… அது தேவை…” என்றும் “நான் இன்னாருக்கு நல்லது செய்தேன்… ஆனால் எனக்குத்
தீமை செய்தான்…,” என்றால் நம்மை இருள் சூழ்ந்த நிலைக்கே அழைத்து செல்லும்.
ஆகையினால் எந்த நல்லதைச்
செய்தேனோ அந்த நல்லதின் தன்மைகள் அங்கே விளைதல் வேண்டும் என்ற இந்த உணர்வினை நாம் எண்ணுதல்
வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள்
சக்தி நாங்கள் பெறவேண்டும் என்ற இந்த உணர்வினை அதனுடன் வலு சேர்த்துக் கொண்டு இதை நாம்
வலுப்படுத்தினால்
1.நமக்குள் தீமை விளையாது.
2.நம்மைப் பார்க்கும்போதே
தீமையை விளைவிக்கும் நிலைகள் அங்கே ஒடுங்கும்.
இதுதான் நரசிம்மா.
வாசல்படி மீது அமர்ந்து (சுவாசிக்கும் இடம்) நமக்குள் நுகரும் சக்தி இங்கு வராதபடி
இதைத் தள்ளிவிட்டால்
1.அந்தத் தீமையை விளைவிக்கும்
எண்ணங்கள் நமக்குள் உருவாகாது.
2.தீமையை விளைவிக்கும்
வித்து இங்கே உருவாகாது.
3.அது வினையாக வராது.
வினைக்கு நாயகனாக இதை ஏற்காது.
அதைத்தான் கோதண்டத்தை
முறித்த பின் சீதாவைத் திருமணம் செய்து கொண்டான் கல்யாணராமா என்று காட்டுகின்றார்கள்.
அதாவது தீமை செய்யும்
உணர்வுகளை முறித்துவிட்டால் மகிழ்ச்சியைத் தனக்குள் அரவணைத்துக் கொள்ள முடியும் என்று
தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
தீமையை முறிக்கும்
நிலையாக அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து கொண்டிருந்தால் நமக்குள்
அரவணைக்கும் சக்தியாகத் தனக்குள் நுகர்ந்து நாம் என்றும் மனிதன் என்ற நிலைகளில் முழுமை
அடைய முடியும்.
அந்த மெய்ஞானியின்
உணர்வுடன் ஒன்றி பிறவியில்லாப் பெரு நிலையை அடைய முடியும். இதை நினைவுப்படுத்தும் நாள்
தான் சிவன் ராத்திரி – "மகா சிவன் ராத்திரி".