ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 13, 2017

தியானம் செய்து கொண்டுதான் இருக்கின்றேன் ஆனால், இடைஞ்சல் செய்துகொண்டே இருந்தால் என்னால் எவ்வளவு தான் பொறுக்க முடியும் என்பார்கள் – மாற்றும் வழி என்ன?

நான் அமைதியானவன். நான் சாந்தமாகவே தான் இருக்கிறேன். நான் தியானத்தைத் தான் செய்து கொண்டே இருக்கிறேன்..., “ஆனால் பாருங்கள்..,” இத்தனை தடவை  “சும்மா என்னை இடக்கு செய்து பேசினால்...”
1.எப்படிங்க நான் பார்த்துக் கொண்டேயிருப்பது?
2.உதைக்கத் தான் மனது வருகின்றது
3.அல்லது திட்டுவதற்குத்தான் மனது வருகிறது என்பார்கள்.

ஆகவே, இப்படிச் சொல்லிக் கொண்டு பிறர் தவறு செய்யும் உணர்வைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோமே தவிர நம் உணர்வை நமக்குள் மாற்றிக் கொள்ளும் வழியில்லாமல் போய்விட்டது.

தியானமிருந்தாலும் உலகில் இருள் சூழும் நிலைகள் வரும்போது நமக்குள் இந்த நிலை தான் உருவாகின்றது. இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

அதற்குத்தான் கருவில் வளரும் குழந்தைகளை ஞானிகளாக உருவாக்குதல் வேண்டும். அப்படி உருவாக்கப்படும்போது அவர்களுக்கு இந்த இருளையெல்லாம் மாய்க்கும் சக்தி வருகின்றது.

பல கொடுமையான விஷத் தன்மைகளையும் கொடுமைகளையும்  வென்றவன் துருவ நட்சத்திரம். அதை நாம் எடுத்துக் கர்ப்பமாக இருக்கக்கூடிய தாயும் கருவிலிருக்கும் குழந்தையும் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்ற உணர்வு அனைத்தையும் சேர்க்கப்படும்போது கருவிலே அந்த அருள் ஞானி உருவாக்கப்படுகின்றது.

கர்ப்பமானது என்று தெரிந்தபின் அந்தப் பத்து மாதமும் எந்தக் குறைகளையும் விட்டுவிடாதீர்கள்.

அந்த அருளைப் பெற வேண்டும் என்ற உணர்வைச் சேர்க்கப்படும்போது அது ஞானியாக உருவாகின்றது.

ஏனென்றால் இப்படி அவனை உருவாக்கினாலும் நம் உணர்வு பங்கு அவனிடத்தில் உள்ளது.

அவன் வளர்ச்சி அடையப்படும் போது ஒளியாக்கப்படும் போது அவனுக்குள் விளைந்த உணர்வுகள்
1.அந்தப் பங்கின் விகிதாச்சாரப்படி நமக்குள் பல தீமைகளை நீக்கும்
2.நம்மை ஞானியாக்க அவன் உதவுகின்றான்.

அவனுக்குள் விளைந்த உணர்வுகள் வெளிவந்த பின் நாம் எல்லோரும் சேர்த்து அந்த உணர்வின் தன்மை பெறச் செய்தாலும் அவன் விளைந்த பின் அவனுடைய பங்கு நமக்கும் கிடைக்கின்றது.

இப்படி ஒருவருக்கொருவர் இணைத்து அந்த ஞானிகள் பெற்ற நிலையை எல்லோரும் பெறமுடியும். ஆக ஒன்று இணைந்து ஒன்று வாழுகின்றது.

1.அது சிறு குழந்தை என்று இருக்கலாம்.., “அது உயிர்”.
2.அந்த உணர்வின் தன்மை தாய் கருவில் வளர்கின்றது.
3.இந்த உணர்வின் தன்மை சேர்ந்து உடலில் விளைகின்றது. அதற்குத்தகுந்த உடல் அமைப்பும் அமைகின்றது.
4.உணர்வின் ஞானத்தை அந்த உயிரணுவால் கவர முடிகின்றது.
5.அதனால் பல தீமைகளை நீக்கிடும் அருள் சக்தியும் பெருகுகின்றது. 

ஆகவே இந்த முறையைக் கையாண்டு பாருங்கள்.